சாதி மத மறுப்பு மண விழா

சேலம் மாவட்டம் ஆவத்திப் பாளையம் முரு கேசன்-சின்னப்பா இணை யரின் மகன் கழகத் தோழர் சரவணன்; ஆவத்திப்பாளை யம் ஷாஜ கான்-மைதிலின் பீபி இணையரின் மகள் ஷஜீனா ஆகியோரின் மத மறுப்பு, தாலி சடங்குகள் தவிர்ப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 28.6.2012 அன்று பகல் 11 மணிக்கு பள்ளி பாளையத்தில் நடந்தது.

மணமக்களை வாழ்த்தி, மாநில செயற்குழு  உறுப்பினர் இரத்தினசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி  மாணிக்கம், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.

மணமக்கள் விழாவின் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.2000 அளித்தனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.

பெரியார் முழக்கம் 12072012 இதழ்

You may also like...