‘விடியல்’ சிவா முடிவெய்தினார்
விடியல் பதிப்பக உரிமையாளரும் ஏராளமான முற்போக்கு சிந்தனை கொண்ட நூல்களை வெளியிட்டு வந்தவருமான தோழர் விடியல் சிவா, 30.7.2012 அன்று கோவையில் முடிவெய்தினார். அவருக்கு வயது 57.
பெரியார் இயக்கத்துக்கு மிகப் பெரும் பங்களிப்பான எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம், பெரியார் ஆகஸ்ட் 15 நூல்களையும் இவரே வெளியிட்டார். குடிஅரசு தொகுப்புப் பணியில் தீவிர ஆர்வமும் ஒத்துழைப்பும் வழங்கியவர் சிவா. ‘குடிஅரசு’ மெய்ப்புத் திருத்தப் பணிக்கு தனது விடியல் அலுவலகத்தையே தந்து உதவியதோடு, பணியில் ஈடுபட்ட கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் களுக்கு, தமது இல்லத்திலிருந்து உணவு தயாரித் தும் வழங்கினார். விடுதலை இராசேந்திரன் எழுதிய ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்; பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் நூல்களை யும் விடியல் சிவாதான் மறுபதிப்பாக வெளி யிட்டார். விடியல் சிவாவின் வெளியீடுகள் அவரது தொண்டின் பெருமையை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
தோழருக்கு, வீர வணக்கம்!
பெரியார் முழக்கம் 16082012 இதழ்