அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி.தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது.

1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு.

1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது.

ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதைப் பயன்படுத்தி ஏராளமான  வேலைகளுக்கு பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டு வந்தார்கள். இதை மாற்றிட நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் சி.நடேசனார் அயராது உழைத்தார். அதன் விளைவாக 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவக் கல்லூரிப் பட்டப் படிப்பில் சேர சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றியது நீதிகட்சி அரசு.

ஆதி திராவிடர், தாழ்த்தப்பட்டோர் பொதுத் தெருவிலும் எல்லாத் தெருவிலும் நடந்து போகலாம் என்று முதன்முதலில் அதற்காகவே தனியாக ஒரு ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி அரசு.

கோயில்களின் வருமானத்தை குடும்பத்தோடு கொள்ளை அடித்து வந்த பார்ப்பனக் கொள்ளையை முறியடிக்க இந்துக் கோயில்களை வரைமுறைப் படுத்த இந்து அறநிலையத் துறையை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

பார்ப்பனர்களின் இந்து அற நிலையத் துறையை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே நீதிக் கட்சியின் முதலமைச்சர் பனகல் அரசர் பெரும் முயற்சி எடுத்து 1925 இல் இத்துறையை உருவாக்கினார்.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக அமைச்சகத்தை முதன்முதலில் அமைத்தது பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி அரசு.

ஒரத்த நாடு, ராஜமாடம் போன்ற இடங்களில் இருந்த தர்மச் சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற முறையை மாற்றியவர் தஞ்சை மாவட்ட மன்றத் தலைவராக இருந்த நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

1935 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்துகளில் “பஞ்சமருக்கு இடமில்லை” என்று எழுதியதோடு டிக்கெட்டுகளிலும் அவ்வாறே அச்சிட்டு இருந்தனர். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் இராமநாத புரம் மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவருமான டபுள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அதை ஒழித்தார்.

நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் அறங்காவல் குழு தாலுகா போர்டு தலைவருமான எஸ்.ராமச்சந்திரன் சேர்வை தனது பதவிக் காலத்தில் “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்குக்கூட வேலை கொடுக்க மாட்டேன்” என்று பகிரங்கமாக மேடையிலேயே அறிவித்தார்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி தேவதாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

தேவதாசி மசோதா வந்தபோது சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாஸ்திரத்தை மீற மாட்டேன் என்று கூறிய அந்த மசோதாவை எதிர்த்து தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார் சத்தியமூர்த்தி அய்யர். “தேவதாசி முறை நீடிக்க வேண்டுமென அய்யர் விரும்பினால் இனிமேல் அவர் இனத்துப் பெண்கள் அதைச் செய்யட்டும்” என்று தந்தை பெரியாரின் கருத்தை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பதிலடியாக கொடுத்தப் பிறகு சத்தியமூர்த்தி அய்யர் வாயை மூடினார்.

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்க குழுக்களை நியமித்தது நீதிக்கட்சி அரசு.

தனியார் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர் களை சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றியது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென தனியாக இருந்த பள்ளிகளை மூடி பிற சாதி மாணவர்களுடன் சேர்ந்து பயில வழி வகுத்தது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ளாத பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி தரப்பட மாட்டாது என அறிவித்தது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்டவர்கள் வீடு கட்டிக் கொள்ள புறம்போக்கு நிலங்களை அளித்தது  நீதிக்கட்சி அரசு.

கிறிஸ்துவரை கல்லூரி முதல்வர், சட்டமன்றத் தலைவர், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதி, உள்துறை உறுப்பினர் போன்ற பதவிகளில் அமர்த்தியது நீதிக்கட்சி அரசு.

மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் பார்ப்பனர் களுக்கு என்று தனியாக அறைகள் ஒதுக்கப்பட் டிருந்த முறையை ஒழித்தது நீதிக்கட்சி அரசு.

மாவட்ட நீதிபதிகள் நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவித்தது நீதிக்கட்சி அரசு.

அண்ணாமலை பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்கு கூட்டுறவுச் சங்கங்களை நீதிக்கட்சி அரசு ஏற்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் நீதிக்கட்சி அரசால் செய்யப்பட்டது.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றங் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டதோடு அவர்கள் மேலும் முன்னேற ஐ.எஸ். அதிகாரிகளை லேபர் கமிஷனர்களாக நியமித்தது நீதிக்கட்சி அரசு.

கோவை மாவட்டத்திலுள்ள குறவர், வலையர் ஆகியோரை குற்றப் பரம்பரையில் இருந்து மீட்க சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட துடன் அவர்களின் குழந்தைகளுக்கு 25 ஸ்காலர்ஷிப்புகளை அளித்தது நீதிக்கட்சி அரசு.

ஆதி திராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிறசாதியினரிட மிருந்து பாதுகாப்பு, அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என பலவித உதவிகளையும்  நீதிக்கட்சி அரசு செய்தது.

ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங் களை ஒதுக்குகிறபோது, மரங்களின் மதிப்பு அளவு கட்டணத்தை தள்ளுபடி செய்தது நீதிக்கட்சி அரசு.

நிலத்தில் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோருக்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டத்தை நீதிக்கட்சி அரசு கொண்டு வந்தது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் என்னும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காக தனியாக லேபர் கமிஷன் நியமிக்கப்பட்டு, அவர் சில வழி முறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்யப்பட் டது. தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று ஐந்து பள்ளிகளை தஞ்சை வட்டாரத் தில் திறக்க  நீதிக்கட்சி அரசு உ.த்தரவிட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை – இட ஒதுக்கீடு நிலைநாட்டப்பட, ஆண்டுதோறும் பொதுப் பணித்துறை அறிக்கை வெளியிட வேண்டுமென  நீதிக்கட்சி அரசு அறிவித்தது.

கல்லூரித் தலைவர்களே மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த முறைக்கு  நீதிக்கட்சி அரசு தடை விதித்து, ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைக்கப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பொதுப் பாதைகள், பொது இடங்கள், கிணறு, குளம் போன்றவைகளை உபயோகிப்பதை தடுப்பவர்களுக்கு  நீதிக்கட்சி அரசு அபராதம் விதித்து ஆணை பிறப்பித்தது.

தலைமைச் செயலகம் பார்ப்பனர்களின்  ஏகபோக சொத்தாக இருந்ததை புள்ளி விவரங்களோடு சட்டமன்றத்தில் வெளிப்படுத்தி, “தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பார்ப்பனர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஓரளவிற்காவது சமநிலை உண்டாக அடுத்த மூன்று ஆண்டுகள் பார்ப்பன ரல்லாத சமூகத்தினர் மட்டுமே உத்தியோகங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்து, அத்தீர்மானம் நிறைவேற டாக்டர் சி.நடேசனார் முன்னின்றார்.

“பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக்கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப்பட வேண்டும்” என்ற புரட்சிகரமான தீர்மானம் ஒன்றை 1921, ஆகஸ்டு 5 இல் சட்ட மன்றத்தில் டாக்டர் சி.நடேசனார் கொண்டு வந்தார். பின்னர் நீதிக்கட்சியினர் வேண்டுகோளின்படி தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார். எல்லா வகுப்பினருக்கும் உத்தியோகத்தில் சமநீதி வழங்கும் வகையில் ஏற்கெனவே ரெவின்யூ துறையில் இருக்கும் நடைமுறையை விரிவுபடுத்தி, எல்லா துறைகளிலும் அதைக் கடைபிடிக்குமாறு செப்டம்பர் 16 இல் ஓர் ஆணையை நீதிக்கட்சி அரசாங்கம் (ஆ.சு.டீ. ஞரடெiஉ டீசனiயேசல ளுநசஎiஉந ழு.டீ.சூடி.613 னுயவநன 16.9.21 ) பிறப்பித்தது. நீதிக்கட்சி ஆட்சியின் முதல் வகுப்புரிமை வழங்கும் ஆணை இதுவே ஆகும். பார்ப்பனரல்லாதாருக்கு அரசுப் பணியில் நுழைய ஓர் உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைந்த முதல் அரசாணையான இது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சரிவர அமுல்படுத்தப்படவில்லை.

நீதிக்கட்சியின், பனகல் அரசர் அமைச்சரவை, 1922 மார்ச் 25 இல் “பஞ்சமர், பறையர்” என்ற சொற் களை நீக்கி, ஆதி திராவிடர் என்றே இனி அழைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி, அதனை அமுல்படுத்தியது. வேலை வாய்ப் போடு அன்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற ஓர் ஆணையை நீதிக்கட்சி ஆட்சி ஆகஸ்டு 15 இல் வெளி யிட்டது. (ஆ.சு.டீ. ஞரடெiஉ டீசனiயேசல ளுநசஎiஉந ழு.டீ.சூடி.658 னுயவநன 15.8.22 ) இதுவே நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது வகுப்புரிமை ஆணையாகும்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 12072012 இதழ்

You may also like...