சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

22.6.2012 அன்று மாலை 6மணிக்கு மந்தைவெளி மார்க்கெட் அருகில் திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம், பரப்புரை பயணத் தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தி.இராவணன் தலைமை வகிக்க, சு.அம்பிகா, இரா.குமார் முன்னிலை யில் ஜா.ஜெயந்தி வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சமர்பா இசை நிகழ்ச்சி நடந்தது. நாத்திகன், சாதி ஒழிப்புப் பாடல்களை பாடினார். இரவு 7.30 மணிக்கு சிற்பி இராசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் இரா. மாரி நன்றியுரையாற்றினார். கூட்டத்துக்குப் பிறகு, கழகத்தின் கொள்கை எழுத்துப் பலகையை மந்தைவெளியில் கழகத் தலைவர் திறந்து வைத்தார்.

பெரியார் முழக்கம் 12072012 இதழ்

You may also like...