பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி தீண்டாமை எதிர்ப்பு; மனு சாஸ்திர எரிப்பு விளக்க 10 நாள் பரப்புரைப் பயணத்தில் பல்லா யிரக்கணக்கில் மக்களை சந்தித்து, ‘மனுதர்மம்’ இப் போதும் சமுதாயத்தில் நிலவி வரும் கொடுமைகளை தோழர்கள் விளக்கினர். கடந்த வாரம் முதல் மூன்று நாள் பயணம் குறித்த செய்திகள் வெளி வந்துள்ளன. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு:

26.6.2012 அன்று காலை 9 மணியளவில் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் பரப்புரைப் பயணம் தொடங்கியது. காலை 10.30 மணியளவில் சேத்துப்பட்டு நான்கு முனை ரோட்டிலும், காலை 11.15 மணியளவில் தேவிகாபுரத்திலும், மதியம் 12.30 மணியளவில் போளூர் பேருந்து நிறுத்தத்திலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் நாயுடு மங்களம், மாலை 4.45 மணி வேங்கிக்கால், மாலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையம், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகிலும், இரவு 8 மணியளவில் காமராசர் சிலையருகிலும் பரப்புரை நடைபெற்றது.

27.6.2012 காலை 10 மணியளவில் புதுப்பாளையம் அம்பேத்கர் சிலையருகில் துவங்கிய பயணம் காலை 11.30 மணியளவில் செங்கம் அம்பேத்கர் சிலையருகில் பரப்புரை நடத்தியது. பரப்புரை குழுவினரை செங்கம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஆனந்த் வரவேற்றுப் பேசினார். பிற்பகல் 12.30 மணியளவில் சாத்தனூர் அணை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு, கழக ஆதரவாளர் முரளி முயற்சியால் சாத்தனூர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒப்புதலோடு சிற்பி ராசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மாணவர்களின் கேள்விக்கு சிற்பிராசன் பதில் அளித்தார். மாலை 4.30 மணியளவில் தண்டராம்பட்டு பேருந்து நிறுத்தத் திலும் மாலை 6 மணியளவில் தானிப்பாடி பேருந்து நிறுத்தத்திலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவு முரளி ஏற்பாடு செய்தார். இரவு உணவும், தோழர்கள் தங்குவதற்கான ஏற்பாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெற்றிமுரசு தோழர் சக்கரவர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

28.6.2012 அன்று காலை 10 மணியளவில் மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலையருகில் துவங்கிய பரப்புரை காலை 11.30 மணி வடசிறுவள்ளூர், பிற்பகல் 12.30 வடபொன்பரப்பி, பிற்பகல் 1 மணி புதுப்பட்டில் நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு மாலை 4 மணி எஸ்.வி. பாளையத்தில் பரப்புரை நடை பெற்றது. பெரியார் பற்றாளர் கண்ணாயிரம் தோழர் களுக்கு தேநீர் அளித்தார். மாலை 5 மணியளவில் பாண்டலம் பேருந்து நிறுத்தத்தில் பரப்புரை நடை பெற்றது. அதைத் தொடர்ந்து சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் பயணத்தை விளக்கி பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஆசைத் தம்பி, சி.சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகிக்க, க.இராமர் வரவேற்புரையாற்றினார். செ.பிரபு கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

கழகப் பேச்சாளர் கா.சு. நாகராசன், வழக்கறிஞர் ப. கண்ணன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராம கிருட்டிணன் சிறப்புரையாற்றினார். வெற்றிவேல் நன்றி கூறினார். மாவட்ட பொறுப்பாளர்கள் ச. பெரியார் வெங்கட், திருமண் ஆசைத்தம்பி உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

29.6.2012 அன்று கரடிசித்தூரில் காலை 10 மணியளவிலும், பிற்பகல் 12.30 மணிக்கு கக்கரடுப் பாளையம் பேருந்து நிலையத்திலும், பிற்பகல் 1.30-க்கு சின்ன சேலம் பேருந்து நிலையத்திலும் பிரச் சாரம் நடைபெற்றது. மதிய உணவு சி.ஆசைத்தம்பி ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலையருகிலும், மாலை 7 மணியளவில் மூரார்பாளையத்திலும் பரப்புரை நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி கா.சு.நாகராசன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மும்பை மா.கதிரவன் பங்கேற்றார்.

30.6.2012 அன்று காலை 10 மணியளவில் பகண்டை கூட்ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், காலை 11.30 மணியளவில் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலும், 1.45-க்கு முகையூரிலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு மாலை 4.30க்கு கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத் திலும், மாலை 6 மணியளவில் ஆலம்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 7 மணியளவில் செஞ்சி பேருந்து நிலையத்திலும் பரப்புரை நடைபெற்றது. வழக்கறிஞர் லூசியா பழங்குடி மக்கள் முன்னணியைச் சார்ந்த சுடர் ஒளி சுந்தரம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம் அமைப்பைச் சார்ந்த இ.ஜீ. அருள்வளன், தி.மு.க.வை சார்ந்த திருநாவுக்கரசு  உள்பட பலரும் குழுவினரை வரவேற்றனர். செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வழக்கறிஞர் லூசியா கருத்துரை வழங்கினார். செக்கடிக்குப்பம் காத்தவராயன் பகுத்தறிவு பாடல் பாடினார். மூன்று நாள் நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட கழகத் தோழர்கள் சி.சாமிதுரை, சா.க. இளையராஜா, கல்லை சங்கர், சு.தினகரன், நாகராஜ், லோ. மோகன், வீரமணி வீ.தினேஷ், மா. தலித்குமார், செ. பிரபு, க.இராமர், சி.ஊமைதுரை ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் நடைபெற்ற பிரச்சாரத்தில் க.இராமர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். நான்கு நாட்களும் குழுவினருக்கு உணவு மற்றும் தங்குவதற்கு கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.

1.7.2012 அன்று காலை 10 மணியளவில் திண்டிவனம் செஞ்சி ரோடு பேருந்து நிலையத்திலும், காலை 11 மணிக்கு திண்டிவனம் பாண்டிரோடு நிறுத்தத்திலும், பிற்பகல் 1 மணியளவில் சித்தாமூர் நான்கு முனை சாலையிலும் பரப்புரை நடை பெற்றது.  மதிய உணவுக்கு பிறகு மாலை 5 மணியளவில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 6 மணியளவில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட பொறுப் பாளர் கோ.சாக்ரடீசு பங்கேற்றார். பெரியார் பற்றாளர் சாரதாமேல்நிலைப் பள்ளி நிறுவனர் திருவாசகம்  அவர்களுக்கு கழக வெளியீடுகளை பயணக் குழுவினர் வழங்கினர்.

2.7.2012 அன்று காலை 9 மணியளவில் சிங்க பெருமாள் கோயில் பேருந்து நிலையத்திலும் காலை 10 மணியளவில் மறைமலை நகர் திருவள்ளுவர் சாலையிலும், காலை 11.15 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலும், பிற்பகல் 12.30-க்கு தாம்பரம் அம்பேத்கர் சிலையருகிலும், பிற்பகல் 1.15-க்கு பல்லாவரம் அம்பேத்கர் சிலையருகிலும் பரப்புரை நடைபெற்றது. குழுவினரை காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த தெ.தென்னவன், செல்வம் இரா.செந்தில்குமார் மற்றும் கழகத் தோழர்கள் கரு. அண்ணாமலை, மாவட்ட பொருப்பாளர் தினேஷ், குன்றத்தூர் பரந்தாமன், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று வரவேற்றனர். மறைமலை நகரில் தெ. தென்னவன் உரை நிகழ்த்தினார்.

பரப்புரைக்கு பெண்களிடம் வரவேற்பு

தொடர் பரப்புரையில் கு.அன்பு தனசேகர், இரா. உமாபதி, சுகுமார், ஜான் குரு, சரவணன், ந. அய்யனார் உரை நிகழ்த்தினர். கழகத் தோழர்கள் செந்தில் மனோகர், அசோக், முழக்கம் உமாபதி, பழனி மருதமூர்த்தி, ராசன் ஆகியோர் தொடர் பயணத்தில் பங்கேற்று பொது மக்களிடத்தில் துண்டறிக்கை அளித்தும், கடை வசூல் செய்து வந்தனர். இந்த பயணத்தில் சிற்பி ராசன் பங்கேற்று பல்வேறு இடங்களில் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்கிற அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். ஏராளமான இடங்களில் பொது மக்களே துண்டறிக்கைகளை வாங்கிப் படித்தனர். பல இடங்களில் இளைஞர்கள் அந்தப் பகுதியில் இருக்கும் தீண்டாமைக் குறித்துப் பேசினர். கழகத் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு ஏராளமான பெண்கள் கழகத்திற்கு நிதி தந்தனர். பெரும் கடைகள் நிறுவனங்களைக் காட்டிலும் சிறு கடைகளிலும் சாலை ஓரங்களில் கடை போட்டுள்ளவர்களே அதிகளவில் நிதி தந்தனர்.

பல்வேறு இடங்களில் பெரியார் பற்றாளர்கள், கழகத் தோழர்களின் செயல்பாட்டை பாராட்டினர். துண்டறிக்கை வழங்கும் தோழர்களிடம் கழக செயல்பாட்டை பாராட்டிக் கருத்து தெரிவித்தனர். சாதி உணர்வுள்ள சிலர் துண்டறிக்கை வாங்கவே மறுத்தனர். பல இடங்களில் இப்போது யாருங்க ஜாதி பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு கழகத் தோழர்கள் தமிழகத்தில் நிலவும் ஜாதி தீண்டாமை கொடுமைகளை ஆதாரத்துடன் விளக்கினர். இந்தத் தொடர் பரப்புரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளனர்.  கழக வெளியீடுகள் ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது. உண்டியல் மூலம் மக்கள் தந்த தொகை ரூ.32,000. வாகன ஓட்டுநர் சண்முகம் பரப்புரைக்கு உதவிகரமாக இருந்தார்.

செய்தி: ந. அய்யனார்

பெரியார் முழக்கம் 05072012 இதழ்

You may also like...