Category: பெரியார் முழக்கம் 2012

மும்பையில் கூடங்குளம் எதிர்ப்பு: பினாயக் சென் பங்கேற்பு

மும்பையில் கூடங்குளம் எதிர்ப்பு: பினாயக் சென் பங்கேற்பு

மும்பை தாதர் டாக்டர் அம்பேத்கர் நினைவு இடமான சைத்ய பூமியில் மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு   கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தேசிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் பினாயக் சென், இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், வழ. கமயாணி, மா.கதிரவன், நாடோடி தமிழன், பால்வண்ணன், கத்துவாராயண், ருடேஸ், தமிழ்மணி பாலா, ஆதி வருண் என பெரும் திரளாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்,. கூடங்குளம் அணுஉலையை உடனே மூட வேண்டும் எனவும், போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டதை திருப்பிப் பெற வேண்டும் எனவும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியை சி.என்.டி.பி. கொங்கன், வினஷ்கரி பிரகல்ப் விரோதி சமிதி, கொங்கன் பசாவ் அந்தோலன், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 31052012 இதழ்

‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்

‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்

“இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 12 “சூத்திரனின் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும்.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 13. “மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குள்ளே மணம் புரிதல் வேண்டும் என்பவர்.” –  அம்பேத்கர். மனுவின் இந்த பார்ப்பன சட்டங்களே சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. மனு கூறிய பிராமண – சத்திரிய – வைசிய – சூத்திரப் பிரிவுகளில் ஏற்பட்ட கலப்பு சாதிக் குழுக்களாக சமூகத்தைப் பிரித்துப் போட்டு விட்டது. இந்த சாதிக் குழுக்கள் தங்கள் சாதி அடையாளத்தை பாதுகாக்கவே துடிக் கின்றன. மீறினால் குடும்பப் பாசம் உறவுகளையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெற்ற மகளையே கொலை செய்யக்கூடிய வெறிக்கு உள்ளாகி விடுகிறார்கள். ‘தமிழினப் போராளியாக’ பெருமைபடுத்தப்படும் மருத்துவர் ராமதாசு முன்னிலையிலேயே அவரது “தளபதி”யாக அவராலேயே பெருமைப்படுத்தப்...

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம் இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது. திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம். 1938 ஆம் ஆண்டில்...

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

1919 – இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாமஸ் பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி யார் ஒரு சிறப்புக் கமிஷனை நிய மித்தனர். அந்தக் கமிஷன ஜூலை 18 இல் மருத்துவமனைக்கே சென்று சாட்சியம் பெற முடிவு செய்திருந்தது. எனினும் நாயரின் உடல்நிலை காரண மாக அன்று சாட்சியம் பெற முடிய வில்லை. நீரிழிவு மற்றும் நிமோனியா நோய் கடுமையாகி ஜூலை 19 அன்று காலை 5 மணியளவில் நாயர்முடிவு எய்தினார். அவரது உடல் லண்டனில் ‘கோல்டெர்ஸ் கிரீன்’ என்ற இடத்தில் எரிக்கப்பட்டு  ‘அஸ்தி’ சென்னைக்கு டாக்டர் ஏ.ஆர். மேனன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. ‘அஸ்தி’யைக் கண்டு, பார்ப்பனர் அல்லாதார் குறிப் பாக ஆதிதிராவிடர்கள் தங்கள் தள நாயகன் முடிவெய்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்...

அமெரிக்காவில் மரண தண்டனையில் நடந்த ஆள் மாறாட்டம்

அமெரிக்காவில் மரண தண்டனையில் நடந்த ஆள் மாறாட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு கார்லோஸ் டெலுனா என்ற அப்பாவி இளைஞர் செய்யாத கொலை குற்றத்துக்காக மரண தண்டனைக்கு உள்ளானார். உண்மையில் அந்தக் கொலையை செய்தவர் கார்லோஸ் ஹெர்னான்டஸ் என்ற மற்றொரு இளைஞர். கார்லோஸ் என்ற பெயர் ஒற்றுமையும் உருவ ஒற்றுமையும் இருவருக்கும் ஒன்றாகவே இருந்தது. மரண தண்டனைக்குள்ளான இளைஞர் இறுதி வரை இந்தக் கொலையைத் தான் செய்யவில்லை என்றும், கொலை செய்த உண்மையான குற்றவாளியின் பெயரைக் கூறியும்கூட அரசு வழக்கறிஞர்கள் அதை ஏற்கவில்லை. கார்லோஸ் ஹெர்னாண்டஸ் என்ற பெயரில் ஒரு ஆளே கிடையாது என்று அரசு வழக்கறிஞர்கள் அடித்துக் கூறினார். மரண தண்டனைக்குள்ளாகும் இறுதி நேரத்தில்கூட ‘நான் அப்பாவி, குற்றமற்றவன்’ என்று கூறிக் கொண்டே அவன் மரண தண்டனையை சந்தித்தான். கொலம்பியா சட்டக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் குழு ஒன்று இதுபற்றி 2004 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 8 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு...

குத்துச்சண்டையும் சதுரங்க விளையாட்டும்

குத்துச்சண்டையும் சதுரங்க விளையாட்டும்

உட்கார்ந்த இடத்தில் பேண்ட் கோட் அணிந்துக் கொண்டு குளுகுளு அறையில் நடக்கும் சதுரங்க விளையாட்டு, ‘மூளை’க்கு வேலை கொடுப் பதால் அதற்கு ‘பிராமண’ப் பெருமையை சமூகம் வழங்குகிறது. உடலை வருத்தி விளையாடும் விளை யாட்டுகளுக்கு ‘சூத்திர’ நிலைதான். தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர் விசுவநாதன் ஆனந்த், மாஸ்கோவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த கெய்ஃபாண்டை வென்று, 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளார் என்று பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதி பாராட்டுகின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதிகூட வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். ஆனால், கடந்த வாரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. இது ஆர்வம் காட்டப்படாமல் ஒதுக்கப்பட்ட செய்தி. சீனாவில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் இந்தி யாவைச் சார்ந்த இரண்டு பெண்கள் வெற்றி வகை சூடி, உலகப் பரிசைப் பெற்றுள்ளார்கள். மந்தாகினி, நீத்துசாகல் என்பது அந்தப் பெண்களின் பெயர்....

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாக அச்சிட்டு வெளியிட்டு இன்று வரை பரப்பி வருகிறார்கள். அவரது ஜெயந்தியை (அதாவது பிறந்த நாள்) முன்னிட்டு ‘இந்து’ நாளேட் டில் பார்ப்பனர் ஒருவர் ‘மகா சுவாமி’ புகழ் பாடும் கட்டுரை ஒன்றை (ஜூன் 1, 2012) எழுதியிருக்கிறார். அக் கட்டுரையில் சீனியர் சங்கராச்சாரியின் கருத்து ஒன்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நாடு ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் இவ்வாறு கூறினாராம். ஆட்சியாளர்களுக்கு அரசியல் சட்டமே உயர்வான தர்ம நூல். ஆனால், ஆட்சியாளர், உழைக்கும் மக்கள், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது தர்ம சாஸ்திரங்களே என்று ‘மகா பெரியவர்’ கூறியதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். “மகா பெரியவர்” கூறும் தர்ம...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம்

அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை.   தமிழர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்றால், பிற மொழியாளர்கள் ‘திராவிடர்’ என்று எப்படி தங்களை அழைப்பார்கள்? திராவிடர் இயக்கம் வேறு; திராவிட இயக்கம் வேறு. தமிழ்மொழி பேசுவதால் பார்ப்பனரை தமிழர்களாக ஏற்பீர்களா? திராவிடர் வடமொழிச் சொல்லாக இருந்தும் பார்ப்பான் அதை ஏற்க மறுப்பது ஏன்? பிற மன்னர் படையெடுப்பால் வென்ற பகுதி யில் தமது முகவர்களைக் குடியமர்த்தியதற்குக் காரணம் என்ன?   இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்;...

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மீண்டும் நுழைவுத் தேர்வா?

கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. இதனால் தமிழகச் சூழலுக்கு பொருந்தாக கல்வி முறைகளை மத்திய அரசு திணித்து வருகிறது. மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல் இப்போது இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வரப் போவதாகக் கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்களை பாதிக்கக் கூடிய நுழைவுத் தேர்வு முறை தமிழ் நாட்டில் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் நுழைவுத் தேர்வை இந்திய ஆட்சி திணிப்பதை தமிழ்நாடு ஏற்காது. மீண்டும் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். பெரியார் முழக்கம் 14062012 இதழ்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

1919 – அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிரஸ் சார்பில்  சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா இன்னும் பலர் இங்கிலாந்திலேயே இருந்தும், துக்கம் விசாரிக்கக்கூட செல்லவில்லை. இச் செயலானது, ‘காங்கிரஸ், தேசியத் திலகங்களின்’ மனிதாபிமானமற்ற தன்மையை யும், யோக்கியதையையும், வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியது. காலஞ்சென்ற தலைவர் டாக்டர் நாயர் அவர்கள் ஒரு புரட்சி வீரர், சுயமரியாதை வீரர், அவரை ஒரு ‘திராவிட லெனின்’ என்று சொல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் பின்னாளில் கூறினார் என்றால், அவரின் புகழுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?  பாலக்காட்டில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர், மலையாளம் தந்த மாமேதை! சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பின், இங்கிலாந்து சென்று மருத்துவத் துறையில் பட்டம் பெற்று, அங்கு...

திட்டக் குழுவும் கல் முதலாளிகளும்

திட்டக் குழுவும் கல் முதலாளிகளும்

நகரத்தில் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.32 வருமான  வந்தாலும், கிராமத்தில் ரூ.28 வருமானம் வந்தாலும் அவர் வறுமைக்கோட்டைத் தாண்டி விட்டார் என்கிறது திட்டக்குழு. திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா, உலகமயமாக்கல் கொள்கையின் தீவிர ஆதரவாளர். அமெரிக்க முதலாளியின் கருத்தை செயல்படுத்தும் ஏவலர். ரூ.28 வருமானம் வந்தவருக்கு வறுமை ஒழிந்தவிட்டது என்று கூறிய இவர், டெல்லியிலுள்ள தனது திட்டக் குழு அலுவலகத்தின் இரண்டு கழிப்பறைகளை சீரமைக்க ரூ.35 லட்சம் செலவிட்டுள்ளார். ‘ஸ்மார்ட் கார்டு’ கையில் வைத்திருப்போர் மட்டுமே, இந்தக் கழிப் பறையை பயன்படுத்த முடியுமாம். வெளி நாட்டுப் பயணங்கள் வேண்டாம், நட்சத்திர ஓட்டல் கூட்டங்கள் வேண்டாம் என்று மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கும்போது இரண்டு கழிப்பறைகளை திருத்தி அமைக்க ரூ.35 லட்சம் செலவிடலாமா என்ற கேள்விகள் எழுப்பப்படு கின்றன. நியாயமான கேள்விதான். வறுமை கோட்டுக்கும் நவீன கழிப்பறை சொகுசுவுக்கும் இடையே உள்ள பாகுபாடு, ‘பிராமண-சூத்திர’ பாகுபாடுகளின் மறு வடிவம் தானே. ‘மனுதர்ம’ தத்துவமே...

மக்கள் பிரதிநிதியும்  மனுதர்மத்தின் அடிமையே!

மக்கள் பிரதிநிதியும் மனுதர்மத்தின் அடிமையே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரானாலும் ‘மனுதர்ம’த்துக்குத்தான் அவர் கட்டுப்பட வேண்டும் என்பதே நடைமுறை! ‘மனுதர்மம்’ கட்டளை யிட்டுள்ள மனித ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தான் ஊராட்சிகளில் ‘ரிசர்வ்’ தொகுதி முறை கொண்டு வரப்பட்டது. சட்டம் ‘தலித்’ தொகுதியை வரையறுத்து, ‘தலித்’ வேட்பாளரைத் தேர்வு செய்தா லும், சட்டம், ‘மனு’வின் பார்ப்பன கூட்டத்தின் முன் மண்டியிட்டு வருகிறது. இதுவே இப்போதும் நீடிக்கிறது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்தின் தலைவன் வி.கருப்பன், தலித் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கடந்த 7 மாதங்களாக பஞ்சாயத்து கூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரும் உரிமை கிடையாது. தரையில் தான் உட்கார வேண்டும. ஏனைய தலித் அல்லாத உறுப்பினர்கள் மட்டும்நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். ஊராட்சி துணைத் தலைவர் ஆறு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர் கூடிப் பேசி முடிவுகளை எடுப்பார்கள். நீட்டிய இடத்தில் பஞ்சாயத்து தலைவர் கையெழுத்திட்டாக வேண்டும். மாநில காவல்துறை இயக்குனருக்கு தன் மீது இழைக்கப்படும்...

இந்தியாவில் இனவாதம்

இந்தியாவில் இனவாதம்

இந்தியாவிலும் இனப் பாகுபாடு இன வெறி இருக்கிறது என்றும், இங்கே இனவெறி இல்லை என்று நடிக்க வேண்டாம் என்றும், ‘இந்து’ ஏட்டில் (மே 29) ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலத்தவர்களை இந்தியாவின் பிற மாநிலங்களில் வெறுப்புக்குரியவர்களாகவே அவர்களிடம் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று அந்தக் கட்டுரை கூறியது. அது உண்மைதான் என்றா லும், மேல் கீழ் அடுக்கு வரிசையில் சாதியமைப்பு சமூகத்தைக் கூறு போட்டு காலங்காலமாய் மக்களை ஒதுக்கி வைத்திருப்பதை இக்கட்டுரையாளர் கண்டு கொள்ளவே இல்லை. அறிவாளிகள் என்று கூறப் படும் பிரிவினரும், நடுத்தர வர்க்கமும், சாதியமைப் பால் நிலைநாட்டப்பட்டுள்ள ‘இன ஒதுக்கலை’ப் பற்றி கள்ள மவுனம் சாதிப்பதால் இந்தக் கொடூர மான அமைப்பு தேசத்தின் பிரச்சினையாக்கப் படாமல், காப்பாற்றப்பட்டு வருகிறது இந்த உண்மையை ஜூன் 1 ஆம் தேதி அதே நாளேட்டில் இனியன் இளங்கோ எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்....

பெண்ணின் பெயர் அடையாளத்தையும்  பெயர்த்து எறியும் மனுதர்மம்

பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன மனுதர்மம். இந்த மனுதர்ம சிந்தனைதான் இன்றும் சமூகத்தின்  வாழ்க்கை முறை. ‘இந்து’ நாளேட்டில் வாரம்தோறும் பெண்ணியம் பற்றி கட்டுரை எழுதி வரும் கல்பனா சர்மா  (மே 27) எழுதியுள்ள கட்டுரையில் மராட்டி யத்தில் தான் சந்தித்த, புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மராட்டியத்தில் பழமையில் ஊறிய குடும்பத்தில் வந்தவர் அந்தப் பெண். திருமணம் முடிந்தவுடன், கணவர் வீட்டில், பெண்ணின் பெயரையே மாற்றி விடும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடருகிறது என்று கூறுகிறார் கட்டுரை யாளர். உஷா என்ற இந்தப் பெண்ணின் பெயர் திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாரால் ‘தபசியா’...

மக்கள் உயிருடன் விளையாடும் மருந்து நிறுவனங்கள்!

மக்கள் உயிருடன் விளையாடும் மருந்து நிறுவனங்கள்!

மத்தியில் ஆளும் ஆட்சி மக்களுக்காகக் கவலைப்படுவதைவிட, பார்ப்பன-பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்கவே துடிக்கிறது. மக்கள் வாழ்க்கையில் மருத்துவ நலன் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் ஒரு காலத்தில் இந்தியாவில் அமலில் இருந்த காப்புரிமைச் சட்டத்தினால் மருந்துகள் குறைவான விலையில் கிடைத்து வந்தன- பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக இந்த சட்டத்தை விலக்கிக் கொண்டுவிட்டது, இந்திய பார்ப்பன ஆட்சி.  இதனால் மருந்துகள் விலை கடுமையாக உயரத் தொடங்கி விட்டன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு கேள்வியை அரசிடம்  வைத்தது.  இந்தியாவில் இன்றியமையாத மருந்துகள் விலை, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துமளவுக்கு அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதிலளிக்காமல் அரசுத் துறைகள் மவுனம் சாதித்து வருகின்றன. இந்திய ஆட்சி, மருத்துவத் துறையில் 100 சதவிதம் அன்னிய மூலதனத்தை அனுமதித்துவிட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது. இன்றியமையாத  மருந்துகளாக 348 மருந்துகளை இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் விலைக்...

நாமக்கல் மல்லசமுத்திரம் ஒன்றிய கழக துவக்க விழா

நாமக்கல் மல்லசமுத்திரம் ஒன்றிய கழக துவக்க விழா

7.5.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரத்தில் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக துவக்கவிழா மற்றும் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் தலைமையேற்றார். தோழர்கள் கோபி, சங்கர், தீனா, அன்பழகன், ம.தி.மு.க.வை சார்ந்த வைகோ கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட செயலாளர் சாமிநாதன், இளம்பிள்ளை கோகுல கண்ணன் ஆகியோர் உரைகளை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சிற்பிராசன் நிகழ்ச்சியின் துவக்கத்திலும், தோழர் களின் உரைகளுக்கு இடையேயும் ‘மந்திரமா, தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினார். சில மாதங்களுக்கு முன்பு முதல் கலந்துரையாடல் கூட்டம் கூட்டி, அதில் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தின்படி இந்த துவக்க விழா பொதுக் கூட்டத்தை தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பேருந்து நிலையம் முதல் பொதுக் கூட்ட மேடை வரை...

சேலம் ஆத்தூரில் மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம்

சேலம் ஆத்தூரில் மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில், பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 8.5.2012 செவ்வாய் கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆத்தூர் மகேந்திரன் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். தோழர் சிற்பி இராசன் மந்திரமில்லை தந்திரமே நிகழ்ச்சியை நடத்தி விளக்கமளித்தார். நரசிங்கபுரம் மணி உரையாற்றினார். கணபதி நன்றியுரையாற்றினார். அன்று இரவு கங்கையம்மன் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் பரப்புரை பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். தோழர்கள் அந்தப் பலகையில் தினமும் ஒரு கருத்தை எழுதி பரப்புரை செய்து வருகின்றனர். பெரியார் முழக்கம் 14062012 இதழ்

களப் பணியில் கழகத் தோழர்கள் பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள்

களப் பணியில் கழகத் தோழர்கள் பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள்

20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ஒன்றிய புதிய பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். பொறுப்பாளர்களை மாவட்ட தலைவர் அறிவித்தார். ஒன்றிய அமைப்பாளர் – சி. விசயன்; ஒன்றிய தலைவர் – நா.முத்துக்குமார்; ஒன்றிய செயலாளர் – க. ஆறுமுகம்; ஒன்றிய துணை தலைவர் – சு.வடிவேலு; ஒன்றிய துணை செயலாளர் – நா. ரமேசு; ஒன்றிய பொருளாளர் – மா.பிரகாசு.  ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள்: ப. குணசேகரன், நா.சின்னச்சாமி, ராஜீவ்காந்தி, சேகர்,சண்முகசுந்தரம், வடிவேலு, க.குமார், பொன்னுச்சாமி, சி. இரங்கசாமி, செல்லதுரை, சுந்தரி. தமிழ்நாடு மாணவர் கழகம் – பல்லடம் ஒன்றியம் – செந்தில் குமார், இரா. மணிகண்டன், இராமராஜ், ப. பொன்னுச்சாமி. அய்யம்பாளையம் தோழர் வடிவேலுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதிய...

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

கேள்வி : மனு…. மனு… என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சாஸ்திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சாஸ்திரம்? பதில் : அப்படி கேளுங்க. இப்ப, நம்முடைய வாழ்க்கையைப் பாருங்க. கோயிலுக்குப் போனால், அங்கே பார்ப்பான் தான் அர்ச்சகர். கல்யாணம்னு வந்தா, பார்ப்பனர்களை வைத்துதான் நடத்துறோம். புது வீடு கட்டி குடிபோகும் போதும், அவர்களைத் தான் கூப்பிடுகிறோம். இறந்தவர்களுக்கு ‘திதி’ கொடுக்கவும், அவருதான்! கோயில் கும்பாபிஷேகம் செய்யுறதும் அவருதான்! கேள்வி : உண்மைதான். எதுக்கு, இப்படி எல்லாத்துக்குமே பார்ப்பனர்களை மட்டுமே அழைக்க வேண்டும்? அவுங்க மட்டும்தான் ஆண்டவன் கிட்ட தொடர்பு கொள்ளும் உரிமை உண்டா? பதில் :  சரியான கேள்வி. இங்கேதான் ‘மனுதர்மம்’ வருது. இந்த ‘மனுதர்மம்’ என்றால் என்னன்னு பார்ப்போமா? இது சமஸ்கிருதத்துல எழுதப்பட்டது. பார்ப்பனர்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘துருளுகூஐஊநு’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகி யிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், தானும்...

10 நாட்கள்: 80 ஊர்களில் சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

10 நாட்கள்: 80 ஊர்களில் சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் பயணத்தின் தொடக்க நிகழ்வுப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மந்தைவெளி மார்க்கெட் அருகில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றுகிறார்கள். சிற்பி இராசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்துகிறார். ஜூன் 23 இல் சென்னை இராயப்பேட்டையிலிருந்து பயணம் தொடங்கி – திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 80 ஊர்களில் 10 நாட்கள் பரப்புரைக் கூட்டங்களை நடத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் ஜூலை 2இல் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. சிற்பி இராசன், கு.அன்புதனசேகரன், டேவிட் பெரியார், எ.கேசவன், இரா....

அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் சிந்தனை மேம்பாட்டுக்கு பெரியார் சிலைகள் அவசியமானவை நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு

அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் சிந்தனை மேம்பாட்டுக்கு பெரியார் சிலைகள் அவசியமானவை நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஒரு மூலையில் பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் மற்றும் அரசு அனுமதி ஆணையோடு நிறுவப் பட்டுள்ள பெரியார் சிலையை எதிர்த்து உள்ளூர் பா.ஜ.க.வினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங் கினர். இதற்கிடையே பா.ஜ.க.வினர், நேரடியாக பெரியார் சிலையை எதிர்த்து வழக்காட முன் வராமல், பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்துள்ள தோடு, பெரியார் சமுதாய மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய மகத்தான தலைவர் என்று தீர்ப்பில் பதிவு செய்துள்ளார். பெரியார் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே நிறுவுவதால் மாணவர்கள் நாத்திக சிந்தனைக்கு மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் கூறியிருந்ததுபற்றி நீதிபதி...

நாகர்கோயிலில் மின்சுடுகாடு: குமரிமாவட்டக் கழகம் வலியுறுத்தல்

நாகர்கோயிலில் மின்சுடுகாடு: குமரிமாவட்டக் கழகம் வலியுறுத்தல்

குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13.5.2012 ஞாயிறு மாலை நாகர்கோவில் குமரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் குமரி மாவட்ட கழகத் தலைவர் சூசை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வே.சதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்வில் பேபி ஜெபக்குமார், அருட்செல்வர், குலசேகரம் சேவியர் நீதியரசர் ஆகியோர் உரைக்குப் பின் கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் வழக்கறிஞர்  அப்பாஜி, சஜித், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பகுத்தறிவுத் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமைதி வழியில் போராடும் போராட்டக் குழுவினர்மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதோடு கைது செய்துள்ள விடுவிக்காத போராளிகளை விடுவிப்பதோடு காவல்துறையின் காவல் அரண் மற்றும் 144 தடை உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ள தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நாகர்கோவிலில்...

89 வயது பெரியார் தொண்டரின் உணர்ச்சிமிகு கடிதம்

89 வயது பெரியார் தொண்டரின் உணர்ச்சிமிகு கடிதம்

திருவரங்கத்தைச் சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஆ.பெரியசாமி எழுதியுள்ள கடிதம்: எனக்கு 89 வயதாகிவிட்டது. ‘பெரியார் முழக்கம்’ இதழை எனது முதுமை காரணமாக படிக்க இயலவில்லை. எனவே என் முகவரிக்கு இதழை அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதழை படிக்க முடியவில்லையே என்று வருத்தம் மேலிடுகிறது. எங்கள் ஊர் செயலாளர் த.அசோக் வழியாக கழக நிகழ்ச்சிகளை நான் கேட்டு அறிந்து வருகிறேன். வயது 89 ஆகிவிட்டாலும், என்னால் முடிந்த அளவு இந்தக் கழகத்துக்கு உதவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.  உதவியும் வருகிறேன். பெரியார் திராவிடர் கழகத் தொண்டும், (பெரியார் முழக்க’த்தின் செய்திகளும் எனக்கு மிக மிக விருப்பமாக உள்ளது. பெரியார் அப்படியே நடந்து வருவதுபோலவே – நான் உணருகிறேன். பெரியாரின் உண்மையான தொண்டர் என்ற உணர்வோடு இதைக் கூறுகிறேன். – ஆ.பெரியசாமி, 154, சங்கிலி தோப்பு, அம்மா மண்டப சாலை, திருவரங்கம்-4. பெரியார் முழக்கம் 21062012 இதழ்

லண்டன் நாடாளுமன்றக் குழு முன் வகுப்புரிமைக்கு குரல்!

லண்டன் நாடாளுமன்றக் குழு முன் வகுப்புரிமைக்கு குரல்!

1919 –  லண்டனில் நாயர் முடிவு எய்தியதும், கே.வி.ரெட்டி நாயுடுவும், ஏ.ராமசாமி முதலியாரும் களத்தில் போராடும்போது, திடீர் என்று தளநாயகன் முடிவு எய்திவிட்ட நிலையில், கை பிசைந்து நின்றனர். நாடாளுமன்றக் குழுவின் முன் நீதிக்கட்சியின் சார்பாக, பார்ப் பனரல்லாதாருக்குப் பிரதிநிதித்துவம் கோரி வாதாடி வேண்டிய பெரும் பொறுப்பு தன் மீது விழுந்ததை  கே.வி. ரெட்டி உணர்ந்தார். நாயர் அவ்வப் போது சொன்ன கருத்துகளைத் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருந்தார். அதன் துணை கொண்டு, மாறும் சில புள்ளி விவரங்களின் துணை கொண்டும், இரவு பகலாக 10 நாட்கள் உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை யைத் தயார் செய்தார். அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாயரின் நண்பர் களான வாட்னிஸ், லர்ட் சிடன்ஹாம் ஆகி யோர் உதவியினால், நாடாளுமன்றக் குழு வின் முன் சாட்சியம் சொல்ல வேண் டியதற்கான நடை முறைகள் மற்றும் தெளிவு சுழிவுகளை அறிந்து கொண்டு, ஆகஸ்டு 12-ல்...

337 தலித் மக்களைக் கொன்று குவித்த பார்ப்பனர்களின் சேனை

337 தலித் மக்களைக் கொன்று குவித்த பார்ப்பனர்களின் சேனை

‘இஸ்லாமிய பயங்கரவாதம்’, ‘மாவோயிசப் பயங்கரவாதம்’, ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதம்’ – என்று பார்ப்பன ஏடுகளும், பனியாக்களின் ஏடுகளும், ‘தேசிய’ ஏடுகளும் பக்கம் பக்கமாக எழுதி, ஏதோ, இந்த அமைப்புகள் எல்லாம் பயங்கர வாதத்துக்காகவே பிறப்பெடுத்து வந்ததைப்போல சித்தரிக்கின்றன. எந்த பயங்கரவாதமும் அடிப்படை வாதமும் ஏற்க முடியாதவைதான். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதற்கு நேர் மாறாக, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பன பயங்கரவாதம் என்று ஒன்று இருப்பது பற்றி எந்த ஏடும் எழுதுவதற்கு முன்வருவது இல்லை. பீகாரில் ‘ரன்வீன் சேனா’ என்ற பயங்கர வாத ஆயுதம் தாங்கிய அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்த பிரமேஷ்வர் சிங், கடந்த ஜூன் முதல் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சுட்டுக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மிக மோசமான கலவரத்தை நடத்தியுள்ளனர். அது என்ன ‘ரன்வீன் சேனா?’ இது பார்ப்பனர்களின் ஆயுதம் தாங்கிய ஒரு படை! ராஜபுத்திரர்களை...

மனித உரிமைச் சட்டங்கள் : அய்.நா.வை ஏமாற்றுகிறது இந்தியப் பார்ப்பன ஆட்சி

மனித உரிமைச் சட்டங்கள் : அய்.நா.வை ஏமாற்றுகிறது இந்தியப் பார்ப்பன ஆட்சி

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: அய்.நா. மனித உரிமைகளைக் காப்பாற்று தற்கும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கும் இனப் பாகு பாடுகளை ஒழிப்பதற்கும் சர்வதேச சட்டங்களை யும், நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. உலகின் பல நாடுகள் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட் டுள்ளன. தொடர்ந்து இந்த உரிமை மீறல்களைத் தடுத்து, மக்களைப் பாதுகாக்க உரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. ஆனால், உலகிலே பெரிய நாடுகளில் ஒன்றாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் என்ன நிலை? மனித உரிமை மீறல் களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாகிறவர்கள் “சூத்திரர்களும்”, பஞ்சமர்களும்தானே தவிர, “பிராமணர்கள்” அல்ல. இந்த நாட்டில் பார்ப்பனர்கள் ‘பிராமணர்’களாகி விடுவதால், அவர்கள் மனிதர்களைவிட மேலானவர்கள். தங்களின் பிரதிநிதியாகவே கடவுளால் படைக்கப் பட்டதாக பார்ப்பனர்கள் கூறுவதை அரசாங்கமும் அங்கீகரித்துவிட்டது. அதனால்தான் ஆகமங்கள் தீண்டாமையை வலியுறுத்தியபோதும் அரசும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிடுகிறது. நீதிமன்றங் களும் இந்த ‘ஆகமத் தீண்டாமை’களை ஏற்று,...

28 ஆண்டுகளாக அகற்றப்படாத நச்சுக் கழிவுகள்

28 ஆண்டுகளாக அகற்றப்படாத நச்சுக் கழிவுகள்

“எந்த தேசத்தில் சூத்திரர் தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் துஜாதிகளில்லாமலும் (இரு பிறப்பாளர்கள்) இருக்கிறார்களோ அத்தேசம் முழுவதும் வறுமை நோய் இவைகளால் துன்பப்பட்டுச் சீக்கிரத்தில் அழிந்து விடும்.”                                            – மனு அத்.8 சுலோகம் 22 – கீழ்சாதிக்காரர்கள் மற்றும் ‘பிராமண’ தெய்வங்களை ஏற்காதவர்கள் வாழும் பகுதி, துன்பத்தில் மூழ்கி, அழிந்தே போய்விடும் என்ற பார்ப்பன மனுவின் புத்தியை அப்படியே மண்டையில் ஏற்றிக் கொண்டுதான் இந்திய ஆட்சியும் செயல்படுகிறது என்பதற்கு போபாலில் நடக்கும் சம்பவங்களே சான்று. போபாலில் யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க நிறுவனத்திலிருந்து நச்சு வாயு கழிவு கசிந்ததால் பல்லாயிரம் பேர் இறந்தனர். பெரும்பாலானவர்கள் ஏழை முஸ்லீம்கள், மனுதர்மப்படி புறக்கணிக்கப் பட்டவர்கள். வறுமையில் வாடி அழியப்பட வேண்டியவர்கள். நச்சு வாயுக் கசிவு நடந்து 28 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், அந்த ஆலையைச் சுற்றி படிந்து கிடக்கும் ரசாயனக் கழிவுகள், இன்றும் அகற்றப்படாமல் 28 ஆண்டுகளாக அப்படியே அப்பகுதியில் பதிந்து கிடக்கின்றன. இந்த...

மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு: திருச்சி மாவட்டக் கழக தீர்மானம்

மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு: திருச்சி மாவட்டக் கழக தீர்மானம்

3.6.2012 அன்று காலை 11 மணியளவில் இளந்தாடி துரைராசன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாமோதரன், கருர் மாவட்ட செயலாளர் காமராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி சகிலா விடுதியில் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட இணை செயலாளர் புதியவன், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலர் அசோக், சிரிகாந்த், பழனிவேலு, பொன்னுசாமி, முருகானந்தம் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சியில் ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் சார்பாக மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 21062012 இதழ்

காவிரி நீருக்கு யாகமாம்!

காவிரி நீருக்கு யாகமாம்!

திருச்சி காவிரியாற்றில் ‘வேத பார்ப்பனர்கள்’ 25 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, தண்ணீரில் அமர்ந்துகொண்டு யாகம் நடத்தியிருக்கிறார்கள். கருநாடகத்தில் நல்ல  மழை பெய்ய வேண்டும் என்பதற்கு இந்த யாகமாம். கருநாடக அணையில் நீர் வழிந்தால், வேறு வழியின்றி தமிழகத்துக்கு திருப்பி விடப்படுமல்லவா? ‘பாரதிய கிசான் சங்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த யாகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.வி.இராமலிங்கம், சிவபதி ஆகியோரும் கலந்து கொண்டார்களாம். தமிழகத்துக்கு நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய நீரை, முறையாக வழங்க கருநாடக அரசு மறுத்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், அப்போதுதான் தீர்ப்பு சட்டப்படியான ஆவணமாகும் என்று தமிழக அரசும் தமிழக மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.  அதற்கு மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. அரசியல் ரீதியாகப் போராடுவதைவிட யாகங்களுக்குத்தான் வலிமை அதிகம் என்ற வேதகால பார்ப்பனியத்தை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வேதப் பார்ப்பனர்கள் ஓதும் வேதங்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு என்று நம்பும்...

சிங்கள அமைச்சர் ஓட்டம்

சிங்கள அமைச்சர் ஓட்டம்

7.6.2012 அன்று காலை கோவையிலுள்ள இந்திய அரசின் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பங்கேற்க வந்த சிங்கள அமைச்சர் ரெஜினோல்ட் கூரே தங்கியிருந்த லீ மெரிடியன் ஓட்டலை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.தே.பொ.க., தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் கருப்புக் கொடி காட்டிய கழகத் தோழர்கள் 30 பேர் காவல்துறை கைது செய்தது. கழகமும் மற்ற அமைப்புகளும் போராட்டம் அறிவித்ததை அறிந்த சிங்கள அமைச்சர் உடனடியாக கோவையை விட்டு வெளியேறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர தலைவர் வே.கோபால், மாநில ஆலோசனை குழு உறுப்பினர் பிரகாசு, அலுவலக பொறுப்பாளர் சா.கதிரவன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், பெ.நா. பாளையம் கி.சீனிவாசன், கி.கடவு நிர்மல், பகுதி கழக செயலாளர் அர.ராசன், ஈசுவரன், மனோகரன், ஆறுமுகம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். முன்னதாக ம.தி.மு.க., த.தே.பொ.க., வி.சி. கட்சி...

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்

உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்

இந்து கோயில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரக்கூடியவையே என்றும் இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லத்தக்கதே என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். “கோயில்களில் நடக்கும் செயல்பாடுகளை ரகசியமாக்கிவிட்டால்,கோயில் நிர்வாகம் சீரழிந்துவிடும். கோயிலில் நடக்கும் செயல்பாடுகள் தனி நபர் தொடர்புடையது என்று கருதிட முடியாது.  கோயில் ஒரு பொது நிறுவனம். பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் மட்டுமே கோயில் பொது நிறுவனம் இல்லை என்றாகிவிடாது. கோயில்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு அரசுப் பணமும் ஒதுக்கப்படுகிறது. கோயில் சடங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களிட மிருந்து நன்கொடைகள் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் கோயில்களும் தகவல் உரிமை சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே” என்று நீதிபதி கே.சந்துரு தீர்ப்பில் கூறியுள்ளார். சென்னை வடபழனியிலுள்ள வெங்கீசுவரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மாள் கோயில் தேவஸ்தானம் பரம்பரை...

சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரம்: 200 ஊர்களில் 5 கட்ட பரப்புரை இயக்கங்கள்

சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரம்: 200 ஊர்களில் 5 கட்ட பரப்புரை இயக்கங்கள்

சேலம் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.6.2012 மாலை 5 மணிக்கு மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் கூடியது. கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: சேலம் மேற்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து ஒன்றியங்களையும் உள்ளடக்கி 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வாழ்வியல் எதிர்ப்பு மற்றும் நவம்பர் 26 மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக வருகிற 29.6.2012 மாலை நங்கவள்ளியில் பிரச்சாரப் பயண துவக்க விழா பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயணத்தை தொடங்கி வைக்கிறார். முதல் கட்ட பிரச்சாரப் பயணம் சூன் 30, சூலை 1 ஆகிய...

நெல்லையில் கைதிகள் உரிமை கோரி விளக்கக் கூட்டம்

நெல்லையில் கைதிகள் உரிமை கோரி விளக்கக் கூட்டம்

சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் நெல்லை மேலப் பாளையத்தில் 10.6.2012 ஞாயிறு மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக் குரைஞர் உமர்கய்யாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எசு.ரிஃபாயி, கழகத் தலைவர் கொளத்தூர்மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சம்சுதீன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைப் பாளர் மை. வீரர் அப்துல்லா, இந்திய தேசிய லீக் கொள்கை பரப்புச் செய லாளர் கம்பம் இப்ராகிம் ஆகியோர் உரையாற்றினர். மேலப்பாளையம் ஊர் மக்கள் இந்நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்டனர்.   பெரியார் முழக்கம் 28062012 இதழ்

பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை

பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பா.ஜ.க.வினர் அத்வானி பிறந்த நாள் சுவரொட் டிகளை சேத்துப்பட்டு பகுதியில் ஒட்டியிருந்தனர். அதில் இரண்டு சுவரொட்டியில் நீல மையினால் கோடிட்டு அத்வானி முகத்தை அசிங்கப்படுத்திவிட்டதாகவும் (?), இதைக் கேட்ட பா.ஜ.க.வினரை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டிய தாகவும், கொலை மிரட்டல் விடுத்த தாகவும், தென்சென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் பா.இராசன் மற்றும் ம.க.இ.க.வை சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் மீது இ.த.ச. பிரிவுகள் 427, 294 (பி), 506 (ii) கீழ் வழக்குத் தொடரப்பட்டு, 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எழும்பூரில் வழக்கு நடந்தது. 6 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப் பட்டனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையான அளவில் சாட்சிகளால் கூற முடியவில்லை. அடையாளமும் காண முடியவில்லை. கடந்த 26.4.2012 அன்று குற்றவியல் நடுவர் திருமதி கீதாராணி,...

நன்கொடை

நன்கொடை

25.5.2012 மாலை 6 மணிக்கு பவானியில் நடந்தேறிய பவானி வழக்குரைஞர் ப.பா.மோகன் அவரது மகள் ஆர்த்தி-விஜயகுமார் ஆகியோரின் மணவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினார். ஈரோடு கருமாண்டப்பாளையம் சிவக்குமார்-கோகிலா, சாதி மறுப்புத் திருமண இணையர் தங்களது முதலாமாண்டு திருமண நாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளனர். மேட்டூர் அணை ஆர்.எஸ். கழகத் தோழர் அ.சக்திவேல் – அ. அனிதா இணையரின் மகள் அ.ச.அறிவுமதியின் 9 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்காக ரூ.1000/- வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆ-ர்) பெரியார் முழக்கம் 28062012 இதழ்

வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கருத்துரிமையை மறுக்கும் காவல்துறை சட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருப்பதையும் அதற்கு எதிராக வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் விளக்கிடும் நூல். வெளியீடு: மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை, 95, அய்.ஆர்.எம்.பி. வளாகம், ஆட்சியர் அலுவலகம் எதிரில், பெருந்துறை சாலை, ஈரோடு. தொகுப்பு : நிழல் வண்ணன். விலை : ரூ. 20. தொடர்புக்கு: 98940 13138  

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு பெயரை மாவட்ட நிர்வாகம் திடீரென அகற்றியதை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் திருச்சி தொடர் வண்டி சந்திப்பு – காதி விற்பனையகம் அருகே ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பெரியார் பெருந்தொண்டரும் சட்ட எரிப்பு வீரருமான இளந்தாடி துரைராசன், மாவட்ட செயலாளர் குமார், இணை செயலாளர் புதியவன், புதிய தமிழகம் மாநகர செயலாளர் கோ.சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு, ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. சோழன், மாவட்ட தலைவர் திராவிடன், மாவட்ட செயலாளர் இரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். குணா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொரு ளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலாளர் அசோக், முருகானந்தம், பழனி, பொன்னுசாமி...

கந்தர்வன் கோட்டையில்  அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கந்தர்வன் கோட்டையில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை அகற்றக் கோரியும், கல்பாக்கம் அணு உலையை இழுத்து மூடக் கோரியும், போராடுகிற மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பாக 14.6.2012 மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வன் கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய பொதுவுடைமை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் மீ.த. பாண்டியன், இப்பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் சைவப் பேரவை கலையரசி அம்மையார் உட்பட பலர் உரையாற்றினர். தோழர் பாரி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 28062012 இதழ்

போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

நெதர்லாந்து நாhட்டின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றம் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் கேங்கே டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. லைபீரியாவுக்கு அருகே உள்ள சியாரா லியோன் பகுதி மக்கள் மீது, 2002 ஆம் ஆண்டில் அவர் நடத்திய உள்நாட்டு யுத்தத்தில் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், பயங்கரவாதம், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை அவர் செய்துள்ளதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 6 ஆண்டுகாலம் இந்த விசாரணை நடந்தது. 80 நாட்கள் அதிபர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்திருந்தார். விசாரணையை தள்ளிப் போடுவதற்கான அத்தனை முயற்சிகளையும் டெய்லர் செய்து பார்த்தார். ஆனாலும் குற்றத்தி லிருந்து தப்ப முடியவில்லை. இரண்டாவது உலகப் போரின் இறுதியில் போர்க் குற்றவாளிகள் நூரம்பர்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு  முதன்முதலாக சர்வதேச நீதிமன்றத் தில் தண்டனைக்குள்ளாகும் – ஒரு நாட்டின் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு முள்ளிவாய்க்கால்...

மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு

மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு

‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கு ‘தமிழர்’ அடையாளத்தைப் பெற்றுத் தந்ததே திராவிடர் இயக்கம் தான்! 4.6.2012 அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை மாவட்டம் மன்னை பந்தலடியில், கழகம் சார்பாக, பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதீய வாழ்வியலை எதிர்த்து நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கக் கூட்டமாய் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சுயமரியாதை சுடரொளி அப்பர் சாமி நினைவாக அமைக்கப்பட்ட மேடையில், பள்ளத்தூர் நாவலரசன் இசைக் குழுவினரின் பாடல் களோடு துவங்கியது. இந்தக் கலைக் குழுவினரோடு இணைந்து சமர்பாகுமரன் சில பாடல்களைப் பாடினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். இக் கூட்டத்திற்கு மன்னை நகர செயலாளர் காளிதாசு தலைமை உரையாற்றினார். திருச்சி புதியவன், சோலை மாரியப்பன், தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோரை தொடர்ந்து, தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர்...

‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிறது. சென்னையைச் சேர்ந்த இனியன் இளங்கோ என்ற வாசகர் இது குறித்து எழுதியுள்ள ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை ‘இந்து’ நாளேடு  ஜூன் 22 இதழில் வெளியிட்டுள்ளது. (அதாவது இந்த விளம்பரம் வெளி வந்த சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு) “சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல்...

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

உலகிலே எங்கும் இல்லாத ‘விதவை’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது திணித்தது, இந்து பார்ப்பனிய மதம் தான். இதில் கூடுதல் பாதிப்புக்குள்ளானவர்கள் பார்ப்பனப் பெண்கள். மொட்டை அடித்து, ரவிக்கையை கழற்றி, காவி உடை போர்த்தி, மூளையில் உட்கார வைத்து விடுவார்கள். எந்த ‘மகிழ்ச்சி’யான நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களுக்கு உரிமை கிடையாது. பார்ப் பனர்களை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ முயன்ற, வேறு உயர் வர்ணத்தவரிடமும் இது வேகமாகப் பரவியது. ஆனால், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப் பனர்கள், தங்கள் சமூகத்துக்கு  அதனால் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கைவிடத் தயங்க மாட் டார்கள். இன்று மொட்டையடித்து காவிப் புடவை சுற்றிக் கொள்ளும் பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம். ஆனால், பார்ப்பனியத்தைப் பின்பற்றத் துடிக்கும் ஆதிக்கசாதி சக்திகளிடம் விதவைக் கோலத்தைப் பார்க்க முடிகிறது. ‘காதரைன் மேயோ’ என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, இங்கே நடந்த சமூகக்...

கழக மாநில  செயற்குழு கூடுகிறது

கழக மாநில செயற்குழு கூடுகிறது

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டம் 7.7.2012 சனி காலை 10 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கூடுகிறது. செயற்குழு உறுப் பினர்கள் வருகை தர வேண்டு கிறோம். இடம்: முருகேசன்  திருமண மண்டபம்  (சென்னை இராயப்பேட்டை கழக  பெரியார் படிப்பகம் அருகில்) பொருள் : எதிர்காலத் திட்டங்கள் – கோவை இராமகிருட்டிணன், – விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்கள்) பெரியார் முழக்கம் 28062012 இதழ்

மக்கள் ஆதரவுடன் பரப்பரைப் பயணம் வெற்றி நடை

மக்கள் ஆதரவுடன் பரப்பரைப் பயணம் வெற்றி நடை

ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு – மனுதர்ம எரிப்புப் போராட்டம் விளக்கப் பரப்புரைப் பயணம் 23.6.2012 முதல் திருவள்ளூர் – வேலூர் – திரு வண்ணாமலை – விழுப்புரம்  காஞ்சி புரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களில் 10 நாட்கள் எழுச்சி நடைபோட்டு வருகிறது. சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் இந்த பரப்புரையை ஒழுங்கு செய்துள்ளது. பயணத்தின் துவக்கப் பொதுக் கூட்டம் 22.6.2012 அன்று சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இரா சேந்திரன், பயணத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். சிற்பி ராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியும், சமர்பா எழுச்சி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக் கூட்டத்தை மயிலைப் பகுதி கழகத் தோழர்கள்   பா.ஜான், இராவணன், சுகுமாறன், மனோகரன், மாரிமுத்து, முருகன், வாகனராஜ், பார்த்திபன், நாத்திகன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் 23.6.2012 அன்று காலை 10 மணியளவில் கு.அன்புதனசேகர், வழக்கறிஞர் சு.குமாரதேவன் ஆகி...

களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்! சட்டவிரோத கொடுமுடி விநாயகன் குடமுழுக்கு நிறுத்தம்

களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்! சட்டவிரோத கொடுமுடி விநாயகன் குடமுழுக்கு நிறுத்தம்

ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கி, கொடுமுடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விநாயகன் கோயில் குடமுழுக்கை தடுத்து நிறுத்தினர். 14.6.2012 அன்று காலை 6 மணிக்கு கொடுமுடி சாலைப்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் விநாயக னுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு நடத்துவதாக இருந்தது. இந்தச் செய்தி கழகத் தோழர்களுக்கு 13.6.2012 மதியம் கிடைத்தது. உடனே களமிறங்கிய தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தின சாமி தலைமையிலான தோழர்கள் சசிக்குமார், மோகன் மற்றும் பாண்டியன் ஆகியோர் அன்று மாலையே கொடுமுடி காவல் நிலையத்தில், அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தைக் குறிப்பிடும் சின்னங்களோ, கோவில்களோ, கடவுளர் பொம்மை களோ இருக்கக் கூடாது என்ற அரசாணையை சுட்டிக்காட்டி இந்த கும்பாபிஷேகத்தை நிறுத்தக் கோரி புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் புகார் மனுவை வாங்க மறுத்த காவல் துறையினர் இந்த மனுவை மாவட்ட காவல்துறைக்குத்தான் அனுப்ப வேண்டும். மேலும், இவ்வாறு கடைசி நேரத்தில் வந்து புகார் தருகிறீர்களே என்றனர்....

சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யில் மே 5 ஆம் தேதியன்று நாத்திகர் விழா நடைபெற்றது. விழாவானது கொடியேற்று விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பொதுக் கூட்டம் என மூன்று பெரும் விழாக்களாக மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவிற்கான சுவரெழுத்துப் பிரச் சாரம் மற்றும் விளம்பரப் பலகை களை மாவட்டம் முழுக்க பெரும் பாலான இடங்களில் அன்பு நாட்டுக் கோழி வளர்ச்சி மைய நிறுவனத்தார் செய்திருந்தனர். விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் இரவு வரை மோகன், பகுத்தறிவாளர் பேரவை சிவக்குமார் மற்றும் சென்னிமலை மாணவர் அணி இசைக்கதிர், கார்த்திகேயன், இனிய வன் ஆகியோர் வாகனப் பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். செல்லுமிடங்களி லெல்லாம் பெரியார் தொண்டர் களுக்கு கிடைக்கும் வரவேற்பாகிய எதிர்ப்பும், ஆதரவும் கலந்த நிலை இருந்தது. விழாவன்று சென்னிமலை பேருந்து நிலையத்தில் இயக்கக் கொடியினை பெருந்துறை ஒன்றிய அமைப்பாளர் வி.சு. விசு ஏற்றி...

கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16.6.2012 சனிக் கிழமை மாலை 7 மணிக்கு மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூரில் கழகத்தின் சார்பில் “திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா”ப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் நா.ப.கதிரவன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். புலவர் கடவுள் இல்லை அவர்கள் சாமியார்களின் மோசடிகளை விளக்கி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியதேவன் ஆகியோர் கலந்து கொண்டு, திராவிடர் இயக்கத்தின் தோற்றம், திராவிடர் இயக்கம் நடத்திய போராட்டங்கள், அதனால் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த நன்மைகள், இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தின் தேவைகள் குறித்து சிறப்புரையாற்றினர். உடுமலையில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. 14.6.2012 வியாழனன்று மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி...

வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரை: கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய இந்திய வரலாற்று நூலில் சொல்லுகிறார்: 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளை நிறமுள்ள ஆரியர்கள் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் நுழைந்து, காஷ்மீர் முதல் ராஜபுத்னா வரை ஆக்ரமித்துக் கொண்டனர். கருப்பு நிற திராவிடர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வம்சா வழியினர். ஆரிய திராவிட கலப்பில் ஏற்பட்டது வங்காளி மற்றும் ஒரியா இனம். மங்கோலியர் திராவிடர் இனக் கலப்பில் ஏற்பட்டது. பூட்டான், சிக்கிம் மற்றும் நேப்பாள் இனம் ஆரியர் மொழியான சமஸ்கிருதம் மேற்கத்திய மொழிகளோடு ஒத்துப் போவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திராவிட இனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சிந்துவெளி கலாச்சாரத்திற்கு முற்பட்டவர்கள். திராவிட  இனத்தைப் பற்றிய முழு ஆய்வு தனியாக...

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

18.5.2012 அன்று ‘சன்’ தொலைக்காட்சியில் ஒரு செய்தி – நித்தியானந்தாவை மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நியமித்திருப்பது பற்றி சங்கரமட ஜெயேந்திரரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது. அது சைவ மடம். அங்கு மடாதிபதிகள் மொட்டையடித்து தலையில் ருத்ராட்சம் அணிய வேண்டும். அதுவே நியதி. ஆனால், நித்தியானந்தா தலையில் முடி வைத்துக் கொண்டு, ரஞ்சிதாவுடன் சுற்றி வருகிறார். எனவே இது முறையற்ற செயல். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறி முடித்துவிட்டார். இந்தச் செய்தியை மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதரிடம் எடுத்துச் சொல்லி கருத்து கேட்டபோது, அருணகிரிநாதர், “கடந்த 1987 ஆம் ஆண்டு இந்த ஜெயேந்திரர் பெண்களுடன் ஓடிப் போன சமயத்தில், செத்துப் போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்த ஆளை இழுத்து வரும்படி கூறினார். நானும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த ஜெயேந்திரனை திரும்ப மடத்துக்குள்...