சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யில் மே 5 ஆம் தேதியன்று நாத்திகர் விழா நடைபெற்றது. விழாவானது கொடியேற்று விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பொதுக் கூட்டம் என மூன்று பெரும் விழாக்களாக மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

விழாவிற்கான சுவரெழுத்துப் பிரச் சாரம் மற்றும் விளம்பரப் பலகை களை மாவட்டம் முழுக்க பெரும் பாலான இடங்களில் அன்பு நாட்டுக் கோழி வளர்ச்சி மைய நிறுவனத்தார் செய்திருந்தனர்.

விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் இரவு வரை மோகன், பகுத்தறிவாளர் பேரவை சிவக்குமார் மற்றும் சென்னிமலை மாணவர் அணி இசைக்கதிர், கார்த்திகேயன், இனிய வன் ஆகியோர் வாகனப் பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். செல்லுமிடங்களி லெல்லாம் பெரியார் தொண்டர் களுக்கு கிடைக்கும் வரவேற்பாகிய எதிர்ப்பும், ஆதரவும் கலந்த நிலை இருந்தது.

விழாவன்று சென்னிமலை பேருந்து நிலையத்தில் இயக்கக் கொடியினை பெருந்துறை ஒன்றிய அமைப்பாளர் வி.சு. விசு ஏற்றி வைத்தார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத் திற்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமை வகித்தார். ஊர்வலத் தினை பகுத்தறிவாளர் பேரவை யினைச் சேர்ந்த மருத்துவர் பி.டி.சக்தி வேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் ப. இரத்தின சாமி, பகுத்தறிவாளர் பேரவை பெ.சே. மோகன்ராஜ், கோவை ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை ஆறுச்சாமி தலைமையிலான தோழர்கள் பறவைக்காவடியில் தொங்கி வருதல், அலகு குத்தி கார் இழுத்தல், ஆணிப் படுக்கையில் படுத்து வருதல், அக்னி சட்டி எடுத்தல், வாயில் அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளைச் செய்தனர். குமார பாளையம் சுவாமிநாதன் தலைமை யிலான குழுவினர் மும்முடி கட்டி வந்து, கடவுள் மறுப்புப் பாடல் களைப் பாடியவாறு வந்தனர்.

சென்னிமலை மாணவரணித் தோழர் இசைக்கதிர் முதுகில் அலகு குத்தி கார் இழுத்து வந்தார்.  அவரோடு ஈரோடு திருமுருகனும் கார் இழுத்தார்.

விழாவின் மற்றொரு சிறப்பாக பேருந்து நிலையத்திலிருந்து தேரடித் திடல் நோக்கி ஊர்வலம் வந்து கொண் டிருக்க, எதிர்முனையில் ஆயிரக்கணக் கான பக்தர் கூட்டம், சித்ரா பௌர்ணமி என்பதால் மலைக்கோவி லில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி வந்தபோது, நமது கருஞ் சட்டை தோழர்களும், காவியுடை பக்தர்களும் எதிரெதிரே சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஏதாவது அசம்பா விதம் ஏற்பட்டுவிடுமோ என காவல் துறையினரும் பொது மக்களும் பதைப்புடன்  நின்று கொண்டிருக்க, நமது தோழர்கள் காட்டிய கட்டுப் பாடும், ஒழுங்கும் நமது இயக்கத்தின் பெருமையை ஊருக்கெல்லாம் பறை சாற்றுவதாக அமைந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செய லாளரும், மாநில துணைத் தலை வரும், தமிழ் உணர்வாளருமான வி.எஸ். முத்துராமசாமி கலந்து கொண்டார்.

பறை முழக்கம் முழங்க ஊர்வலம் மேடையை அடைந்தது. அலகுகுத்தி வந்த தோழர்கள், மேடையில் கடவுள் மறுப்பு வாசகத்தைக் கூறியபடியே அலகினைக் கழற்ற பொது மக்கள் மயிர்க்கூச்செறிந்தனர்.

குடந்தை சிற்பிராசனின் ‘மந்திர மல்ல தந்திரமே’ என்ற நிகழ்ச்சியுடன் பொதுக் கூட்டம் தொடங்கியது ஈரோடு ஒன்றிய அமைப்பாளர் சசிக் குமார் தலைமை வகிக்க, சென்னிமலை ஒன்றியத் தலைவர் செல்லப்பன் வர வேற்புரையாற்றினார். சென்னிமலை ஒன்றியச் செயலாளர் சி.செல்வராசு முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் பேரவை ப.சிவக்குமார், செல்வராசு, பவானி ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் இரத்தினசாமி, 28 வருடங் களுக்கு முன்பு சென்னிமலைப் படிக் கட்டுகள் வழியாக மாட்டு வண்டியை ஏற்றி, அது கடவுள் சக்தியால்தான் நிகழ்ந்தது என ஒரு தரப்பார் பிரச் சாரம் செய்ய, அதற்கு பதிலடி கொடுக் கும் விதமாக, தானும் மற்ற தோழர் களும் மலைமேல் மாட்டுவண்டி ஏற்ற முயற்சிக்க, காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு, பிறகு பெருமாள் மலையில் மாட்டு வண்டி ஏற்றியதைக் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், உலகப் போராளி களின் வரலாற்றைக் கூறி, இளைஞர் களே சிந்திப்பீர் என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “சாதியின் கட்டமைப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சாதி தோன்றிய விதம், அதனை அழியாமல் வைக்க பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி, பார்ப்பனர்களிடம் இன்றும் கைகட்டி நிற்கும் பிற்படுத்தப்பட் டோர் தங்கள் அடக்குமுறையை தாழ்த்தப்பட்டோர்களிடம் காட்டும் விதம் பற்றி தெளிவாக விளக்கிப் பேசினார். விழாவில் கழகத் தோழர் சுப்ரமணி- சிவரஞ்சனி இணையரின் பெண் மகவுக்கு கபிலன் என்று தலைவர் பெயர் சூட்டினார். இறுதி யில் சேகர் நன்றி கூறினார்.

விழாவிற்கு ஏற்பாடுகள் செய்ததில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அன்பு நாட்டுக் கோழி வளர்ப்பு மையத்தின் நிர்வாகிகள் சசிக் குமார், மோகன்ராஜ், சண்முகசுந்தரம் ஆகியோர் நிறுவனத்தின் சார்பில் பெரும்பாலான செலவினங்களை ஏற்றுக் கொண்டு பெரிதும் துணை நின்றனர்.

வாகனப் பிரச்சாரத்தின் மூலமாக வும், விளம்பரப் பதாகைகள் மூலமாக வும் ஈர்க்கப்பட்டு விழாவிற்கு வந் திருந்து, விளக்கம் பெற்று, இயக்கத் தில் தங்களை இணைத்துக் கொண்ட தோழர்களின் பெயர்கள் வருமாறு:

மரவபாளையம் ரவிக்குமார்-ஜோதி இணையர் என்.சண்முகம், கே. பழனிச்சாமி, கார்மேகம், அன்பரசன், மதியரசன், மீனாட்சிபுரம் ரகுபதி, முத்தூர் மதிவாணன், ஊத்துக்குளி சந்திரன், செந்தில்குமார், சண்முகம், ரமேஷ்குமார், ஈஸ்வரன், பிடாரியூர் துரைசாமி, குப்புசாமி, பெருந்துறை ஜெயராம், வெப்பிலி வேலு, வெள் ளோடு மூர்த்தி, கோபி, உப்பிலி பாளையம், ரமேஷ்குமார், தங்கராசு, ஊட்டி நந்தகுமார் ஆகியோர்.

செய்தி:  ப. இரத்தினசாமி (தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர்)

 

பெரியார் முழக்கம் 05072012 இதழ்

You may also like...