10 நாட்கள்: 80 ஊர்களில் சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்
சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் பயணத்தின் தொடக்க நிகழ்வுப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மந்தைவெளி மார்க்கெட் அருகில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றுகிறார்கள். சிற்பி இராசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
ஜூன் 23 இல் சென்னை இராயப்பேட்டையிலிருந்து பயணம் தொடங்கி – திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 80 ஊர்களில் 10 நாட்கள் பரப்புரைக் கூட்டங்களை நடத்துகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் ஜூலை 2இல் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
சிற்பி இராசன், கு.அன்புதனசேகரன், டேவிட் பெரியார், எ.கேசவன், இரா. உமாபதி, ந. அய்யனார் ஆகியோர் பரப்புரை நிகழ்த்துகிறார்கள். 15 தோழர்கள் தொடர்ந்து பரபபுரை இயக்கத்தில் பங்கேற்கிறார்கள். வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கழகங்கள் இணைந்து, இப்பரப்புரைக்குத் திட்டமிட்டு, களமிறங்கியுள்ளன.
பெரியார் முழக்கம் 14062012 இதழ்