நாகர்கோயிலில் மின்சுடுகாடு: குமரிமாவட்டக் கழகம் வலியுறுத்தல்

குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13.5.2012 ஞாயிறு மாலை நாகர்கோவில் குமரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில்

குமரி மாவட்ட கழகத் தலைவர் சூசை தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வே.சதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்வில் பேபி ஜெபக்குமார், அருட்செல்வர், குலசேகரம் சேவியர்

நீதியரசர் ஆகியோர் உரைக்குப் பின் கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் வழக்கறிஞர்  அப்பாஜி, சஜித், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பகுத்தறிவுத் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமைதி வழியில் போராடும் போராட்டக் குழுவினர்மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதோடு கைது செய்துள்ள விடுவிக்காத போராளிகளை விடுவிப்பதோடு காவல்துறையின் காவல் அரண் மற்றும் 144 தடை உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ள தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
  • நாகர்கோவிலில் அனைத்து மதம் மற்றும் சாதியினரையும் எரியூட்டும் மின் சுடுகாட்டினை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
  • அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களோ கோவில்களோ வைக்கக்கூடாது என அரசு ஆணைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்த பின்பும் அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
  • குமரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக பொருளாளராக மார்த்தாண்டம் பேபி ஜெபக்குமாரை இக்கூட்டம் நியமிக்கிறது.

இறுதியில் தோழர் சேவியர் நன்றி கூறினார்.

 

­பெரியார் முழக்கம் 21062012 இதழ்

You may also like...