நெல்லையில் கைதிகள் உரிமை கோரி விளக்கக் கூட்டம்

சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் நெல்லை மேலப் பாளையத்தில் 10.6.2012 ஞாயிறு மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக் குரைஞர் உமர்கய்யாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எசு.ரிஃபாயி, கழகத் தலைவர் கொளத்தூர்மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சம்சுதீன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைப் பாளர் மை. வீரர் அப்துல்லா, இந்திய தேசிய லீக் கொள்கை பரப்புச் செய லாளர் கம்பம் இப்ராகிம் ஆகியோர் உரையாற்றினர். மேலப்பாளையம் ஊர் மக்கள் இந்நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...