திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு பெயரை மாவட்ட நிர்வாகம் திடீரென அகற்றியதை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் திருச்சி தொடர் வண்டி சந்திப்பு – காதி விற்பனையகம் அருகே ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார்.

பெரியார் பெருந்தொண்டரும் சட்ட எரிப்பு வீரருமான இளந்தாடி துரைராசன், மாவட்ட செயலாளர் குமார், இணை செயலாளர் புதியவன், புதிய தமிழகம் மாநகர செயலாளர் கோ.சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு, ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. சோழன், மாவட்ட தலைவர் திராவிடன், மாவட்ட செயலாளர் இரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். குணா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொரு ளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலாளர் அசோக், முருகானந்தம், பழனி, பொன்னுசாமி மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு அதே பெயரில் எப்போதும்போல் செயல்படும் என்று மருத்துவமனை தலைமை அதிகாரி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...