‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

1919 – இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாமஸ் பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி யார் ஒரு சிறப்புக் கமிஷனை நிய மித்தனர். அந்தக் கமிஷன ஜூலை 18 இல் மருத்துவமனைக்கே சென்று சாட்சியம் பெற முடிவு செய்திருந்தது. எனினும் நாயரின் உடல்நிலை காரண மாக அன்று சாட்சியம் பெற முடிய வில்லை. நீரிழிவு மற்றும் நிமோனியா நோய் கடுமையாகி ஜூலை 19 அன்று காலை 5 மணியளவில் நாயர்முடிவு எய்தினார்.

அவரது உடல் லண்டனில் ‘கோல்டெர்ஸ் கிரீன்’ என்ற இடத்தில் எரிக்கப்பட்டு  ‘அஸ்தி’ சென்னைக்கு டாக்டர் ஏ.ஆர். மேனன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. ‘அஸ்தி’யைக் கண்டு, பார்ப்பனர் அல்லாதார் குறிப் பாக ஆதிதிராவிடர்கள் தங்கள் தள நாயகன் முடிவெய்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது புரண் டார்கள்! கண்ணீர் உகுத்தார்கள்! நாயர் மறைந்த செய்தி கேட்டு பார்ப்பனர் கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! தி ருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளை யார் கோயிலில் பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர். காஸ்மாபாலிடன் கிளப் பில் பார்ப்பன உயர்நீதி மன்ற நீதிபதி களும், மற்றும் பெரும் பார்ப்பனப் புள்ளிகளும் மகிழ்ச்சிக் கூத்தாடினார் கள்! இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள்!

 

பெரியார் முழக்கம் 07062012 இதழ்

You may also like...