பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு:

திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன மனுதர்மம். இந்த மனுதர்ம சிந்தனைதான் இன்றும் சமூகத்தின்  வாழ்க்கை முறை. ‘இந்து’ நாளேட்டில் வாரம்தோறும் பெண்ணியம் பற்றி கட்டுரை எழுதி வரும் கல்பனா சர்மா  (மே 27) எழுதியுள்ள கட்டுரையில் மராட்டி யத்தில் தான் சந்தித்த, புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மராட்டியத்தில் பழமையில் ஊறிய குடும்பத்தில் வந்தவர் அந்தப் பெண். திருமணம் முடிந்தவுடன், கணவர் வீட்டில், பெண்ணின் பெயரையே மாற்றி விடும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடருகிறது என்று கூறுகிறார் கட்டுரை யாளர். உஷா என்ற இந்தப் பெண்ணின் பெயர் திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாரால் ‘தபசியா’ என்று மாற்றப்பட்டுவிட்டதாம். இந்த மாற்றத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன், பிறந்து வளர்ந்த பெற்றோரின் உறவுகள் துண்டிக்கப் பட்டு, பெண்ணின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு, கணவன் வீட்டுக்கு, ஒரு வீட்டு வேலைக்காரியாகவும் குழந்தைகளைப் பெற்றுத் தரும் எந்திரமாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏதோ பெயர் தானே மாற்றப்படுகிறது என்று இதை எளிதாக எடுத்துக் கொளளாமல், ஏன் இப்படி நடக்கிறது? இது தேவை தானா? இதனால் திருமண வாழ்க்கையில் மாற்றம் வந்து விடப் போகிறதா என்ற கேள்விகளை எழுப்ப வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் கல்பனா. பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணின் பெயர் மாற்றப்படவில்லையானாலும், திருமணத்துக்குப் பிறகு பெற்றோரின் தலை எழுத்து (இனிஷியல்) நீக்கப்பட்டு, கணவனின் பெயர் தலை எழுத்தாக மாற்றப்படுகிறது. மனைவியின் பெயருக்குப் பிறகு கணவரின் பெயரும் இணைக்கப்படுகிறது. ஆனால் கணவனின் பெயர் எந்த மாற்றத்துக்கும் உள்ளாவ தில்லை. ஏற்கனவே இருந்த நிலையிலேயே நீடிக் கிறது. இவை அனைத்துமே பார்ப்பன ‘மனுதர்மம்’ விதித்த ஆணைதான். “யவ்வனத்தில் கணவன் ஆஞ்ஞையில்” (திருமணமான பிறகு கணவனை மட்டுமே சார்ந்து) வாழ வேண்டும் என்ற மனுதர்மக் கொள்கையே அடிமை வாழ்வுக்கு அவர்களை இப்படி தயார்படுத்துகிறது. ஒவ்வொரு குடும்பத்தி லும் பார்ப்பன மனுவின் தர்மமே இன்றும் வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இதற்கு நேர் மாறாக, மனுதர்ம பார்ப்பனிய அடிமை வாழ்க்கை முறை இல்லாத பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டி யுள்ளார் கல்பனா. பிரான்சு நாட்டின் அதிபராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரான்காய்ஸ் ஆலன்டே; மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந் தெடுக்கப்பட்ட அவரது மனைவியோஆலன்டேயை திருமணம் செய்து கொள்ளாமலே அவருடன் சேர்ந்து வாழ்கிறார். டிரயர்வெய்பர் என்ற 47 வயதுடைய பெண் பத்திரிகையாளர். 20 ஆண்டு களாக அரசியல் துறையில் பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் இவர், இனியும் பத்திரிகைத் தொழிலையே தொடரப் போவதாகவும், அதிபரோடு சேர்ந்து வாழ்ந்தாலும் பொருளாதாரத்தில் எவரை யும் சார்ந்து நிற்கத் தயாராக இல்லை என்றும் கூறி யுள்ளார். ஒரு கணவனுக்கு பணிவிடை செய்பவராக நான என்னை வளர்த்துக் கொள்ளவில்லை. சுதந்திரத்தின் அடிப்படையிலேயே என்னுடைய வாழ்க்கையை கட்டமைத்து வந்திருக்கிறேன். (ஐ hயஎந nடிவ நெநn சயளைநன வடி ளநசஎந ய hரளயெனே. ஐ ரெடைவ அல நவேசைந டகைந டிn வாந னைநய டிக ஐனேநயீநனேநnஉந) என்று ‘நியுயார்க் டைம்ஸ்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். திருமணமே வேண்டாம் என்றோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் முறை நல்லது என்றோ, தாம் வாதிட முன்வரவில்லை என்று எழுதும், இந்தக் கட்டுரையாளர் தனது கணவர் நாட்டின் அதிபராக வந்த பிறகும்கூட, அவரோடு வாழ விரும்பும் ஒரு பெண், தனது தனித்துவத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இதை குறிப்பிட்டதாக கூறுகிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் வரலாற்றில் முதன்முறையாக இவர்கள்தான் இப்படி திருமண மின்றி இணைந்து வாழும் தம்பதிகள்!

பெரியார் முழக்கம் 14062012 இதழ்

You may also like...