குத்துச்சண்டையும் சதுரங்க விளையாட்டும்
உட்கார்ந்த இடத்தில் பேண்ட் கோட் அணிந்துக் கொண்டு குளுகுளு அறையில் நடக்கும் சதுரங்க விளையாட்டு, ‘மூளை’க்கு வேலை கொடுப் பதால் அதற்கு ‘பிராமண’ப் பெருமையை சமூகம் வழங்குகிறது. உடலை வருத்தி விளையாடும் விளை யாட்டுகளுக்கு ‘சூத்திர’ நிலைதான். தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர் விசுவநாதன் ஆனந்த், மாஸ்கோவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த கெய்ஃபாண்டை வென்று, 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளார் என்று பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதி பாராட்டுகின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதிகூட வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். ஆனால், கடந்த வாரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. இது ஆர்வம் காட்டப்படாமல் ஒதுக்கப்பட்ட செய்தி. சீனாவில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் இந்தி யாவைச் சார்ந்த இரண்டு பெண்கள் வெற்றி வகை சூடி, உலகப் பரிசைப் பெற்றுள்ளார்கள். மந்தாகினி, நீத்துசாகல் என்பது அந்தப் பெண்களின் பெயர்.
“பெண்ணுக்கு எந்த சுதந்திரமும் எந்த காலத்தி லும் வழங்கவே கூடாது” என்ற மனு தர்மத்தை குப்பையில் தூக்கி வீசி எறிந்துவிட்டு, குத்துச் சண்டையில் களமிறங்கி உலக சாதனை படைத்திருக் கிறார்கள் இந்தப் பெண்கள். ஆனந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை ரூ.8 கோடி மற்றும் தங்கப் பதக்கம்; தமிழக அரசு தனியே ரூ.2 கோடி வழங்கியுள்ளது. உடலுழைப்பை – கீழ் சாதிக்கும், ‘மூளை’த் திறனை – உயர்சாதிக்கும் பிரித்து வைத்தது மனுதர்மம். அதே மனுதான் இந்த விளையாட்டுகளிலும் இன்று வரை புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பெண் களின் இந்த உலக சாதனையைக்கூட பார்ப்பன ‘துக்ளக்’ ஏடு கிண்டல் செய்கிறது. “ஆமாம், பெண்கள் சண்டைக் காரர்கள் என்று ஒப்புக் கொள்கிறேன்” என்று கிண்டல் செய்து, ‘சோ’ ஒரு கேள்விக்கு பதில் எழுதுகிறார்.
தொகுப்பு: இரா
பெரியார் முழக்கம் 07062012 இதழ்