லண்டன் நாடாளுமன்றக் குழு முன் வகுப்புரிமைக்கு குரல்!
1919 – லண்டனில் நாயர் முடிவு எய்தியதும், கே.வி.ரெட்டி நாயுடுவும், ஏ.ராமசாமி முதலியாரும் களத்தில் போராடும்போது, திடீர் என்று தளநாயகன் முடிவு எய்திவிட்ட நிலையில், கை பிசைந்து நின்றனர். நாடாளுமன்றக் குழுவின் முன் நீதிக்கட்சியின் சார்பாக, பார்ப் பனரல்லாதாருக்குப் பிரதிநிதித்துவம் கோரி வாதாடி வேண்டிய பெரும் பொறுப்பு தன் மீது விழுந்ததை கே.வி. ரெட்டி உணர்ந்தார். நாயர் அவ்வப் போது சொன்ன கருத்துகளைத் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருந்தார். அதன் துணை கொண்டு, மாறும் சில புள்ளி விவரங்களின் துணை கொண்டும், இரவு பகலாக 10 நாட்கள் உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை யைத் தயார் செய்தார். அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாயரின் நண்பர் களான வாட்னிஸ், லர்ட் சிடன்ஹாம் ஆகி யோர் உதவியினால், நாடாளுமன்றக் குழு வின் முன் சாட்சியம் சொல்ல வேண் டியதற்கான நடை முறைகள் மற்றும் தெளிவு சுழிவுகளை அறிந்து கொண்டு, ஆகஸ்டு 12-ல் நாடாளு மன்ற பொதுக் குழு முன்னர், சுமார் 5 மணி நேரம் வாதாடி, கேட்ட கேள்வி களுக்கெல்லாம் தக்கவாறு விடை யளித்து, வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை வலியுறுத்தியதோடு, வரலாற்றுப் புகழ் மிக்க தனது அறிக்கையையும் குழுவின் முன் வழங்கினார். தனது அறிக்கையின் தொடக்கத்திலேயே அவர் தெரிவித்திருந்ததாவது:
இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தி யாவில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல் லாதாருக்கும் அடிப்படையிலேயே இன வேறுபாடு உண்டு. முன்னவர், ஆரிய இனத்தைச் சார்ந்தவர், பின்னவர், திராவிட இனத்தைச் சார்ந்தவர். (“ஐனேயை உடிரடன nடிவ நெ உடிளேனைநசநன யள ய சூயவiடிn நளயீநஉயைடடல in ளுடிரவா ஐனேயை, வாநசந றயள hந வநளவகைநைன ய யௌiஉ னகைகநசநnஉந வாயவ ளநயீநசயவநன க்ஷசயாஅiளே கசடிஅ சூடிn-க்ஷசயாஅiளே வாந கடிசஅநச றயள ஹசலயளே யனே வாந டயவநச னுசயஎனையைளே.”)
கே.வி. ரெட்டி, பார்ப்பனரல்லாத வர் நிலை பற்றி நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியளிக்கும்போது கூறிய கருத்துகளில் ஒன்று வருமாறு: மதத்தின் பேராலும், வர்ணாஸ்ரம தர்மத்தின் பேராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனரல்லாத மா பெரும் சமுதாயமானது, யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சம மானது. சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர், யானைப் பாகனைப்போல், பார்ப்பனரல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங் காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றேனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட்டும் யானைபோல, பார்ப்பனரல்லாதாரின் எழுச்சிக்கு பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படா விட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு (யசbவைசயசல ஊடிஅஅவவநந) விட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை வெற்றியாகக் கருதி நீதிக் கட்சித் தூதுக்குழு லண்டனிலிருந்து இந்தியா திரும்பியது.
இந்த ஆண்டு சென்னை மாநகராட் சிக்கு முதன் முறையாக நடைபெற்ற தேர்தலில் தியாகராயர் தேர்ந் தெடுக்கப்பட்டதோடு நகராட்சியின் முதல் தலைவராகவும் ஆனார். வெல்லிங்டன் சென்னை மாகாண கவர்னராக ஏப்ரல் 10-ல் பதவி ஏற்றார். உறுப்பினராகச் சேரா மலேயே காங்கிரஸ் தலைவர்களால் இழுக்கப்பட்டு, சென்ற சில ஆண்டு களாக காங்கிரஸ் மாநாடுகளில் பங்கு கொண்டும், சென்னை மாகாணச் சங்கத்தில் சேர்ந்து பார்ப்பனரல்லா தாருக்குப் பதவிகளில் விகிதாச்சாரம் அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தும், பணி ஆற்றி வந்த பெரியார், இந்த ஆண்டுதான் காங்கிரசில் உறுப் பினராக சேர்ந்தார். காங்கிரஸ் சமூக சீர்திருத்தத்துக்குப் பாடுபடும் என்றும், வகுப்புரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக வும், பதவி, உத்தி யோகங்களில் 100க்கு 50 சதவீதம், பார்ப்பனர் அல்லா தாருக்கு ஒதுக்கி அளிக்கப்படும் எனவும், தேர்தலில் போட்டியிட்டு அரசியலைக் கைப்பற்றும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை எனவும், காங்கிரசார் உறுதி கூறியதை நம்பி சமுதாய சேவைக்கு ஒரு வாய்ப்பு என்று கருதிக் காங்கிரசில் பெரியார் உறுப்பினர் ஆனார். தாம் வகித்து வந்த ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். திருச்சியில் நடைபெற்ற ராஜ்ய, மாகாண காங்கிரஸ் கான்பரன்சில்” பெரியார் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
பெரியார் முழக்கம் 21062012 இதழ்