மீண்டும் நுழைவுத் தேர்வா?

கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. இதனால் தமிழகச் சூழலுக்கு பொருந்தாக கல்வி முறைகளை மத்திய அரசு திணித்து வருகிறது. மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல் இப்போது இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வரப் போவதாகக் கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்களை பாதிக்கக் கூடிய நுழைவுத் தேர்வு முறை தமிழ் நாட்டில் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் நுழைவுத் தேர்வை இந்திய ஆட்சி திணிப்பதை தமிழ்நாடு ஏற்காது. மீண்டும் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்.

பெரியார் முழக்கம் 14062012 இதழ்

You may also like...