கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16.6.2012 சனிக் கிழமை மாலை 7 மணிக்கு மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூரில் கழகத்தின் சார்பில் “திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா”ப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் நா.ப.கதிரவன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். புலவர் கடவுள் இல்லை அவர்கள் சாமியார்களின் மோசடிகளை விளக்கி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியதேவன் ஆகியோர் கலந்து கொண்டு, திராவிடர் இயக்கத்தின் தோற்றம், திராவிடர் இயக்கம் நடத்திய போராட்டங்கள், அதனால் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த நன்மைகள், இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தின் தேவைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
உடுமலையில்
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. 14.6.2012 வியாழனன்று மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரை உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் முன்பும், 7.30 மணியலிருந்து 9.15 மணி வரை ராமசாமி நகரிலும், 15.06.2012 வெள்ளியன்று மாலை 5 மணியிலிருந்து 6.45 வரை சிவசக்தி காலனியிலும், 7 மணியிலிருந்து 8.15 மணி வரை தங்கம்மாள் ஓடைப் பகுதியிலும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உடுமலை நகரத் துணைச் செயலாளர் சு.சிவசங்கர், மடத்துக்குளம் ஒன்றியத் துணைச் செயலாளர் சு. சிவசங்கர், மடத்துக்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் மா.மோகன்கமார், மாவட்ட கழகச் செயலாளர் கா.கருமலையப்பன் ஆகியோர் பேசினர். இறுதியில் புலவர் கடவுள் இல்லை, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியுடன் சிறப்புரையாற்றினார்.
மேற்கண்ட இரு நிகழ்வுகளும் திருப்பூர் மாவட்ட செயலாளர் கா. கருமலையப்பன், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ந. பிரகாசு, மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், மா.மோகன்குமார், கு.மயில்சாமி, துரை. இராஜேந்திரன், மதன் குமார், தெ.மணிகண்டன், நா. அய்யப்பன், உடுமலை யாழ் நடராசன், இரா. பாக்கியநாதன், சு.சிவசங்கர், கோ. விசுவநாதன், மு. வேல்முருகன், க.இரமேசு, தியாகு, ம.தி.மு.க. தோழர்கள் சே. பிரபு, சாந்து முகமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் கா.காமராசு, ந. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 05072012 இதழ்