ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

18.5.2012 அன்று ‘சன்’ தொலைக்காட்சியில் ஒரு செய்தி – நித்தியானந்தாவை மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நியமித்திருப்பது பற்றி சங்கரமட ஜெயேந்திரரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது. அது சைவ மடம். அங்கு மடாதிபதிகள் மொட்டையடித்து தலையில் ருத்ராட்சம் அணிய வேண்டும். அதுவே நியதி. ஆனால், நித்தியானந்தா தலையில் முடி வைத்துக் கொண்டு, ரஞ்சிதாவுடன் சுற்றி வருகிறார். எனவே இது முறையற்ற செயல். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறி முடித்துவிட்டார்.

இந்தச் செய்தியை மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதரிடம் எடுத்துச் சொல்லி கருத்து கேட்டபோது, அருணகிரிநாதர், “கடந்த 1987 ஆம் ஆண்டு இந்த ஜெயேந்திரர் பெண்களுடன் ஓடிப் போன சமயத்தில், செத்துப் போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்த ஆளை இழுத்து வரும்படி கூறினார். நானும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த ஜெயேந்திரனை திரும்ப மடத்துக்குள் கொண்டு வந்தது – இவருக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன்” என்று கூறி முடித்தார்.

1987 ஆம் ஆண்டு 7 ஆந்திர பெண்களுடன் குடகுக்கு ஓடிப் போன ஆள், நித்தியானந்தாவையும் ரஞ்சிதாவையும் சேர்த்துப் பேசுவது ஏன் தெரியுமா? இந்த மக்கள் எதையுமே நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான். அதுமட்டுமல்ல, எழுத்தாளர் அனுராதா ரமணன், சீரங்கம் உஷா, கவர்ச்சி நடிகை சொர்ணமால்யாவுடன் இந்த ஓடிப் போன ஜகத்குரு என்ன செய்து கொண்டிருந்தார். ராமலீலையா? மேலும் இந்த ஆள் ஜெயேந்திரன் சொன்னார், “வேதத்தில் எல்லாமே இருக்கிறது” என்று.

சங்கர்ராமனை ஆள் வைத்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர், எந்த வேதத்தில் கொலை செய்வது எப்படி என்று படித்தார் என்பதை சொல்ல முடியுமா? காண்ட்ராக்டர் ரவி கொடுத்த வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வந்தது இன்னும் பலரிடம் உள்ளது. ரவியின் தங்கையை ஜெகத்குரு பாலியல் உறவு கொள்ளும்போது ரவியையும் இருந்து பார்க்குமாறு கட்டளையிட்டாராம். இது ரவி தந்த வாக்குமூலத்தில் இருக்கிறது. சங்கரமட ஊழல் அன்று முதல் இன்றுவரை கொடிகட்டிப் பறக்கிறது.

இவர் சொல்கிறார் நித்தியானந்தா-ரஞ்சிதா விவாகரம் பற்றி… “நித்தி தலைமுடியை எடுக்கவில்லையே” – என்று “தண்டத்தை” தூக்கி எறிந்துவிட்டு பெண்களுடன் உல்லாசப் பயணம் ஓடிய ஜெயேந்திரன் பொருமுகிறார். நல்ல வேடிக்கை!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

 

பெரியார் முழக்கம் 05072012 இதழ்

You may also like...