மும்பையில் கூடங்குளம் எதிர்ப்பு: பினாயக் சென் பங்கேற்பு

மும்பை தாதர் டாக்டர் அம்பேத்கர் நினைவு இடமான சைத்ய பூமியில் மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு   கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தேசிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் பினாயக் சென், இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், வழ. கமயாணி, மா.கதிரவன், நாடோடி தமிழன், பால்வண்ணன், கத்துவாராயண், ருடேஸ், தமிழ்மணி பாலா, ஆதி வருண் என பெரும் திரளாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்,.

கூடங்குளம் அணுஉலையை உடனே மூட வேண்டும் எனவும், போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டதை திருப்பிப் பெற வேண்டும் எனவும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியை சி.என்.டி.பி. கொங்கன், வினஷ்கரி பிரகல்ப் விரோதி சமிதி, கொங்கன் பசாவ் அந்தோலன், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 31052012 இதழ்

You may also like...