பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பா.ஜ.க.வினர் அத்வானி பிறந்த நாள் சுவரொட் டிகளை சேத்துப்பட்டு பகுதியில் ஒட்டியிருந்தனர். அதில் இரண்டு சுவரொட்டியில் நீல மையினால் கோடிட்டு அத்வானி முகத்தை அசிங்கப்படுத்திவிட்டதாகவும் (?), இதைக் கேட்ட பா.ஜ.க.வினரை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டிய தாகவும், கொலை மிரட்டல் விடுத்த தாகவும், தென்சென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் பா.இராசன் மற்றும் ம.க.இ.க.வை சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் மீது இ.த.ச. பிரிவுகள் 427, 294 (பி), 506 (ii) கீழ் வழக்குத் தொடரப்பட்டு, 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எழும்பூரில் வழக்கு நடந்தது. 6 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப் பட்டனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையான அளவில் சாட்சிகளால் கூற முடியவில்லை. அடையாளமும் காண முடியவில்லை. கடந்த 26.4.2012 அன்று குற்றவியல் நடுவர் திருமதி கீதாராணி, கழகத் தோழர் ராசன் மீது போடப்பட்ட வழக்கின் மீது எந்தவித ஆதாரமு மில்லையென்று விடுதலை செய்து உத்தரவிட்டார். இராசன் சார்பில், கழக வழக்கறிஞர் சு.குமாரதேவன், இர. ஜான் ஞானசீலன் மற்றும் கே.ஜெ.சிவா ஆருத்ரா ஆகியோர் நேர் நின்றார்கள்.
பெரியார் முழக்கம் 28062012 இதழ்