போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

நெதர்லாந்து நாhட்டின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றம் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் கேங்கே டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. லைபீரியாவுக்கு அருகே உள்ள சியாரா லியோன் பகுதி மக்கள் மீது, 2002 ஆம் ஆண்டில் அவர் நடத்திய உள்நாட்டு யுத்தத்தில் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், பயங்கரவாதம், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை அவர் செய்துள்ளதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 6 ஆண்டுகாலம் இந்த விசாரணை நடந்தது. 80 நாட்கள் அதிபர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்திருந்தார். விசாரணையை தள்ளிப் போடுவதற்கான அத்தனை முயற்சிகளையும் டெய்லர் செய்து பார்த்தார். ஆனாலும் குற்றத்தி லிருந்து தப்ப முடியவில்லை. இரண்டாவது உலகப் போரின் இறுதியில் போர்க் குற்றவாளிகள் நூரம்பர்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு  முதன்முதலாக சர்வதேச நீதிமன்றத் தில் தண்டனைக்குள்ளாகும் – ஒரு நாட்டின் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா? இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்களை சந்திக்க வேண்டுமா?’ என்று தனது குட்டிகளை விட்டு குரைக்க வைக்கும் ராஜபக்சேக்கள் இப்படி, கூண்டில் ஏற்றப்படும் காலம் வந்தே தீரும்.

போஸ்னியா படுகொலை: ராணுவ தளபதிக்கு ‘மரண’ தண்டனை

1992-95 ஆம் ஆண்டுகளில் போஸ்னியா நாட்டில் செர்பிய ராணுவம் யுத்தம் நடத்தியது. (இரண்டு நாடுகளும் முன்னாள் யுகோஸ்லேவி யாவில் இடம் பெற்றவையாகும்) அப்போது செர்பிய ராணுவத்தின் தளபதியாக இருந்த இராட்கே மிலடி, பல்லாயிரக்கணக்கான போஸ்னியா முஸ்லீம்களை கொன்று குவித்தான். போஸ்னியாவிலுள்ள செரப்னிகா என்ற ஊரில் மட்டும் 1995 இல் 8 ஆயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஷேக் நகரிலுள்ள யுகோஸ்லேவ் போர்க்குற்ற நீதிமன்றம் இதை விசாரித்து ராட்கே மிலடிக்கு ‘8 ஆயிரம் முறை மரண தண்டனை’ என்ற தீர்ப்பை (8 ஆயிரம் முஸ்லீம்களைக் கொலை செய்தமைக்காக) இப்போது வழங்கியுள்ளது.

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...