சிங்கள அமைச்சர் ஓட்டம்
7.6.2012 அன்று காலை கோவையிலுள்ள இந்திய அரசின் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பங்கேற்க வந்த சிங்கள அமைச்சர் ரெஜினோல்ட் கூரே தங்கியிருந்த லீ மெரிடியன் ஓட்டலை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.தே.பொ.க., தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் கருப்புக் கொடி காட்டிய கழகத் தோழர்கள் 30 பேர் காவல்துறை கைது செய்தது. கழகமும் மற்ற அமைப்புகளும் போராட்டம் அறிவித்ததை அறிந்த சிங்கள அமைச்சர் உடனடியாக கோவையை விட்டு வெளியேறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர தலைவர் வே.கோபால், மாநில ஆலோசனை குழு உறுப்பினர் பிரகாசு, அலுவலக பொறுப்பாளர் சா.கதிரவன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், பெ.நா. பாளையம் கி.சீனிவாசன், கி.கடவு நிர்மல், பகுதி கழக செயலாளர் அர.ராசன், ஈசுவரன், மனோகரன், ஆறுமுகம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். முன்னதாக ம.தி.மு.க., த.தே.பொ.க., வி.சி. கட்சி தோழர்கள் 500 பேர் கைதானார்கள். சிங்கள அமைச்சரின் வருகை கோவை மக்களை கொந்தளிக்கச் செய்தது.
பெரியார் முழக்கம் 21062012 இதழ்