சேலம் ஆத்தூரில் மனுதர்ம எரிப்பு போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில், பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 8.5.2012 செவ்வாய் கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆத்தூர் மகேந்திரன் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். தோழர் சிற்பி இராசன் மந்திரமில்லை தந்திரமே நிகழ்ச்சியை நடத்தி விளக்கமளித்தார். நரசிங்கபுரம் மணி உரையாற்றினார். கணபதி நன்றியுரையாற்றினார். அன்று இரவு கங்கையம்மன் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் பரப்புரை பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். தோழர்கள் அந்தப் பலகையில் தினமும் ஒரு கருத்தை எழுதி பரப்புரை செய்து வருகின்றனர்.

பெரியார் முழக்கம் 14062012 இதழ்

You may also like...