களப் பணியில் கழகத் தோழர்கள் பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள்

20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ஒன்றிய புதிய பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். பொறுப்பாளர்களை மாவட்ட தலைவர் அறிவித்தார்.

ஒன்றிய அமைப்பாளர் – சி. விசயன்; ஒன்றிய தலைவர் – நா.முத்துக்குமார்; ஒன்றிய செயலாளர் – க. ஆறுமுகம்; ஒன்றிய துணை தலைவர் – சு.வடிவேலு; ஒன்றிய துணை செயலாளர் – நா. ரமேசு; ஒன்றிய பொருளாளர் – மா.பிரகாசு.  ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள்: ப. குணசேகரன், நா.சின்னச்சாமி, ராஜீவ்காந்தி, சேகர்,சண்முகசுந்தரம், வடிவேலு, க.குமார், பொன்னுச்சாமி, சி. இரங்கசாமி, செல்லதுரை, சுந்தரி. தமிழ்நாடு மாணவர் கழகம் – பல்லடம் ஒன்றியம் – செந்தில் குமார், இரா. மணிகண்டன், இராமராஜ், ப. பொன்னுச்சாமி.

அய்யம்பாளையம் தோழர் வடிவேலுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதிய தோழர்களும் பயிலரங்கம் ஏற்பாடு செய்வது. மனு தர்மம் எரிப்பு போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது.

பெரியார் முழக்கம் 14062012 இதழ்

You may also like...