Category: திவிக

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும்  விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் ! இசை நிகழ்ச்சி ! நாள் : தை1 (15.01.2019) செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை வரை. இடம் : பெரியார் திடல்,பெரியார் படிப்பகம்,வீரபாண்டி பிரிவு திருப்பூர். அனைவரும் வருக

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

*திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழாக் குழு சார்பில்….* *திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டு தமிழர் திருநாள்., பொங்கல் விழா…வரும் (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு, இராயப்பேட்டை (பெரியார் சிலை அருகில்)* *புதுவை பிரகாசின் “அதிர்வு” கலைக்குழுவினரின்* பறையிசை, சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் *அருண் ரிதம்ஸ்* வழங்கும் சென்னை கானா, நாட்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளோடு நடைபெறும் *கடந்த 06.01.2019 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்* பரிசளிப்பு வாழ்த்துரை : *விடுதலை இராசேந்திரன்* பொதுச் செயலாளர், திவிக *திருமுருகன் காந்தி* ஒருங்கிணைப்பாளர்., மே17 இயக்கம் *ஆர்.என்.துரை* சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர், திமுக *பேராசிரியர்.சரசுவதி* *அனுஸ்ரீ* திருநர்காண உரிமை மீட்பு இயக்கம் தொடர்புக்கு : 7299230363

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 🚸 தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சி பேரணி 🗞 கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு 🗣🏴பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் 🚩🙅‍♀ பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் 🙋‍♀ அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் 💯 ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? 📲 பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பெரியார்  தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில்  சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது. உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து: “நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது...

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

”நாள்காட்டி” திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி ! விலை : ரூபாய் 70.00 மட்டும்.(ரூபாய் எழுபது மட்டும்) பெரியார், அண்ணல் அம்பேத்கர், மேதகு பிரபாகரன், கலைஞர்,  அறிஞர்அண்ணா, காமராஜர், எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் படங்களுடன் அழகிய வடிமைப்பில்,வரலாற்று குறிப்புகளுடன் உள்ள மாத நாள்காட்டி. குறைந்த அளவே அச்சிடப்பட்டு உள்ளது. நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் : தோழர் தபசி குமரன், அலைபேசி எண் : 9941759641 தலைமை நிலையச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். (திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட நிர்வாகிகளிடமும் நாள்காட்டி கிடைக்கும்

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு ! சொற்பொழிவு : ”புலவர் செந்தலை கெளதமன்” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த,பெ,தி,க பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நாள் : 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : கெளரி திருமண மண்டபம்,சென்டெக்ஸ் அருகில்,சென்னிமலை.

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா ! இருசக்கர பேரணி,பெரியார் முழக்கம் நிமிர்வோம் சந்தா வழங்கும் விழா ! நாள் 30.12.2018 ஞாயிறு நேரம் : காலை 9.00 மணி பேரணி துவங்கும் இடம் : பெரியார் படிப்பகம், சோதனைச்சாவடி,கொளத்தூர். கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

யாவையும் நிறுத்திக் கொள் காவியே!  – பெ. கிருஷ்ணமூர்த்தி

யாவையும் நிறுத்திக் கொள் காவியே! – பெ. கிருஷ்ணமூர்த்தி

வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள். தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற , சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும் வேட்கை பொதிந்தப் பயணம் ! மகிழுந்தும், பெருவாகனமும்… தும்பை வெள்ளையும்… பட்டை மோதிரமும்… அத்தர் நெடியும்… பட்டைச் சங்கிலி சகிதம் மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.! நோட்டுகளை எண்ணுகிறதும், எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக் கையேந்தாதக் கரங்கள்.! மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி… பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து… நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால் மீட்டும் கூட்டம்! எம் கரமேந்தும் கருங்கொடி … சூரியனையும் மிஞ்சும் சுடரொளி! எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால் சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி! வரலாறைச் சுமந்த மூளை. அடக்குமுறை எதிர்க்கும் தேகம். சமூகநீதிக்காய் நடந்து… நடந்து உரமேறியக் கால்கள். தீமைக்கெதிரான சொற்கள். தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள். இவையே எங்கள் அடையாளம். போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ.. மாநாடுத் திடலில் குழாய் விளக்குடைக்கும் நாட்டமோயின்றி… அரைக்கல் அளவே இடமாயினும்… நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து… பகலவனின்...

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

இலட்சியத்தில் உறுதி; கட்டுப்பாட்டின் அடை யாளமே கருஞ்சட்டை என்பதை நிரூபித்தது பேரணி. காவல் துறைக்கு வேலையே இல்லை; தோழர்களே தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் – இளம் பெண்களும் ஆண்களும் பேரணியில் அணி வகுத்தக் காட்சி – எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று. மூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து; அடுத்த தலைமுறையைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் ஒரே மேடையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேடைக்குப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக பெரியாரின் வெவ்வேறு நிழல் படங்கள் திரையிடப்பட்டன. உரைகளுக்கு இடையே பெரியாரின் ஒரு நிமிட உரை இரண்டு முறை ஒளி பரப்பப்பட்டது. பெரியார் குரலையும் கருத்தையும் கேட்ட இளைஞர்கள் கூட்டம்...

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

செயல் திசை நோக்கி வெளிச்சம் காட்டும் திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் திருச்சி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் – உரிமைப் பறிப்பு – விடுதலைக்கான இலக்கு நோக்கிய கொள்கை வழியை அடையாளப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. திருச்சி உழவர் திடலில் 2018 திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக் கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள் வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட...

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம்  பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம் பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் அணி வகுத்த கருஞ்சட்டைப் பேரணி குலுங்கியது திருச்சி மாநகர் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சி மாநகர் ஒரு வரலாற்றை எழுதியுள்ளது. சுமார் 200 அமைப்புகள் ஓரணியில் திரண்டு – பெரியாரே – தமிழர்களின் – தமிழ்நாட்டின் முதன்மை அடையாளம்; காவிக்கு மறுப்பு – பெரியாரின் கருப்பு என்ற முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கில் திருச்சியில் திரண்டார்கள். திரும்புமிடமெல்லாம் கருப்புச் சட்டை. அதிலும் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பெரியார் இறப்புக்குப் பின் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெரியாரையேப் பார்த்திடாத இளைஞர்கள்; அவர்களிலும் பலர் பெண்கள். தமிழ்நாடு முழுதுமிருந்தும் பல நூறு தனி வாகனங்கள் திருச்சியை நோக்கி வந்தன. பகல் 2 மணியளவில் பேரணி புறப்படும் கே.டி. திரையரங்கு அருகே கருஞ்சட்டைத் தோழர்கள் திரளத் தொடங்கினார்கள். 3.30 மணியளவில் பறை இசை முழங்க பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அமைப்பும் தங்கள்...

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்  பொதுக் கூட்டம்

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் –  அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் 2018, டிசம்பர் 13ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடைபெற்றது. பா. ராஜன் தலைமை தாங்கினார். கோ. இளங்கோ (விடுதலை சிறுத்தைகள்), புவன் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முனைவர் சுந்தரவள்ளி உரையாற்றினர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் சா. ராஜீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் சமர்கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி குழுவினருக்கு நூல்களை வழங்கி பாராட்டினார். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழீழத் தேசிய தலைவர் வே. பிரபாகரன் 64ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை மேடவாக்கம்  தமிழ் வழிப் பள்ளியில்  கரு அண்ணாமலை தலைமை யில் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இனமான நடிகர் சத்யராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொழிலன் (த.வி.க. தலைவர்) உரையாற்றினர். தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்கள் பாடி கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.  உமாபதி, சுப்பிரமணி பொற்கோவன், பெரியார் மணிமொழியன் கண்ணன், சிலம்பம் சிவாஜி, கரிகாலன் சுரேஷ், மூவேந்தன், மதன்குமார் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், கற்க கற்க கல்வி அறக்கட்டளை தோழர்கள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை அன்னூர் அருகே குப்பேபாளையம் கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 14, 2018 அன்று முத்தமிழ் விழா நடந்தது. விழாவில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிர்மல், வெங்கட் ஆகியோர் பங்கேற்று, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்து மாணவ மாணவிகளிடம் பேசினர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட 230 பேர் நிகழ்வில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியம் பங்கேற்றார். கவிஞர் வைகை சுரேஷ், இந்நிகழ்வை மிகுந்த ஆர்வத்தோடு ஏற்பாடு செய்தார். 10 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ள நூலை தனது சொந்தப் பணத்தில் வாங்கி, மாணவிகளுக்கு வழங்கினார் வைகை சுரேஷ். கல்லூரியின் மனித வள மேம்பாட்டு அலுவலர் பாபு, மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட  ஒருங் கிணைப்பாளர்கள் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சில மாதங்களுக்கு முன்பு இங்கே கல்லூரி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...

கருத்தரங்கம் – கேள்வி பதில்  “மதவெறியும் மனிதநேயமும்” மார்த்தாண்டம் 16122018

கருத்தரங்கம் – கேள்வி பதில் “மதவெறியும் மனிதநேயமும்” மார்த்தாண்டம் 16122018

அறிவுக்களஞ்சியம் நூலகம் 322வது நிகழ்வு கருத்தரங்கம் – கேள்வி பதில்  “மதவெறியும் மனிதநேயமும்” தோழர் கொளத்தூர் மணி உரை     இடம் : அறிவுக் களஞ்சியம் நூலகம் மார்கெட் ரோடு, மார்த்தாண்டம் தொடர்புக்கு 9487275631   நேரம் 16.12.2018 மாலை 6 மணி அனைவரும் வருக, அனுமதி இலவசம்

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

திருச்சியில் டிசம்பர் 23இல் பெரியார் உணர்வாளர்கள் நடந்த இருக்கும் கருஞ்சட்டைப் பேரணிக்கு பேராதரவு பெருகி வருகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்று பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்புடன் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கும் சமூக நீதிக்கும் சவால் விட்டு வரும் மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாடு – பெரியார் மண் என்பதை உணர்த்துவோம். திருச்சி கருஞ்சட்டைக் கடலாக வேண்டும் தோழர்களே! தனிப் பேருந்துகளில் அணி அணியாகத் திரளுவீர்! பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புப் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துத் தருமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் இணைப்பு சக்தியாய் விளங்குவது கழகத்தின் ஏடுகள் தான்! கழக ஏடுகளை பரப்புவதன் வழியாக கழகத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்க முடியும் என்பதை உணர்ந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முனைப்புக் காட்டி செயல்படுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். – தலைமைக் கழகம் பெரியார் முழக்கம் 13122018 இதழ்

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

திருப்பூரில் இந்து முன்னனி அமைப்பைச் சார்ந்தவர் களின் மகா யாக பூஜைக்கு பள்ளி மாணவர் களிடம் செங்கல், பூ, நெய் ஆகியவை எடுத்து வர வலியுறுத்தப்பட்டார்கள் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி முதன்மை அதிகாரியிடமும் திருப்பூர் கழகம் சார்பில் 3.12.2018 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனு மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில்    திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பதியம் இலக்கிய அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

கோவை சின்னியம் பாளையத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கரின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி நினைவு நாள் பொதுக்கூட்டம் சிவா தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சீலாராஜ் உரையாற்றினர். டி.கே.ஆர். குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் திராவிடர் விடுதலை  கழகத்தில்  சிலம்பரசன் (வழக்கறிஞர்), ரஞ்சித் இணைந்தனர். அவர்களுக்கு நிமிர்வோம் இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வரவேற்றார். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்  பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக 06.12.2018 அன்று பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி யது. இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் உமா சங்கர் (வனவாசி நகர செய லாளர்) கண்டன உரையாற்றி னார். சேலம் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் கண்ணன், நகர துணைத் தலைவர் குமார், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆழ்வை ஒன்றிய தி.வி.க. தலைவர் நாத்திகம் முருகேசன் துணைவியார் திருமதி. சந்திரா (வயது 65) 30.11.2018 மாலை 4.00 மணியளவில் முடிவெய்தினார். அவரது உடல் நல்லடக்கம் ஆழ்வார் தோப்பில் 01.12.2018மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால் .பிரபாகரன்  மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். நிகழ்வில் நெல்லை மாவட்டத் தலைவர் பா. பால்வண்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ச. தமிழன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் அ.மாசிலாமணி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பால சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கோ.அ.குமார், வே.பால்ராசு, சா.த.பிரபாகரன், செ.செல்லத்துரை. குமணன், பாரி, மனோஜ் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட தி.வி.க. தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். எவ்வித சடங்குகள் இன்றி...

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல தோழர்களில் நண்ணிமங்கலம் கணேசன் ஒருவர். அவர் சிறையிலேயே இறந்துவிட்டார். அவருடைய உடல் கோவை ஆத்துப்பாலம் சுடுகாட்டில் பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.ராதா  மனைவி பிரேமாவதி மற்றும் மகன் தமிழரசன் நினைவிடத்திற்கு அருகே புதைக்கப் பட்டுள்ளார். அவரை நினைவு படுத்தும் விதமாக ஆத்துப்பாலம் சுடுகாட்டில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம் வெங்கட் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் உடுமலை இயல் கிருஷ்ணன் நிர்மல்குமார்  மலர் வளையம் வைத்து  ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் நிவரணத்திற்காக வேலூர் மாவட்ட திவிக தோழர் களால் திரட்டப் பட்ட பொருட் கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டு கோட்டை வட்டம் வாட்டா குடி மற்றும் இரண்யன் நகர் உள்ளிட்ட 3 குக்கிராமங்களைச் சேர்ந்த 156 குடும்பங்களுக்கு கழகத் தோழர்களின் உதவியுடன் வேலூர் மாவட்ட திவிக தோழர்கள் நேரில் சென்று வழங்கினர். 1 குடும்பத்திற்கு 2.5 கிலோ காய்கறி, 1.25 கிலோ அரிசி, 1 ப்ரெட் பாக்கெட், 1 வரக்கி பாக்கெட் , 100கிராம் கடலை எண்ணெய், 50கிராம் மிளகுதூள் பாக்கெட், 1 நாப்கின் பாக்கெட், 1 பாக்கெட் பன், 1 தைலம், 1 கொசுவத்தி, 1 வத்திப் பெட்டி என பல்வேறு பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கஜேந்திரன், பாஸ்கரன், சுதகார், பார்த்திபன், வழக்கறிஞர் மகேஷ் குமார், பாரத் தமிழ், மாதேஷ், பாண்டியன், மாதேஷ், திருமலை ஆகியோர் அடங்கிய குழு சென்றது. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

“சாதிச் சமூகமே சிறைதான்!” – ஆனந்த விகடன் பேட்டி

“சாதிச் சமூகமே சிறைதான்!” – ஆனந்த விகடன் பேட்டி

`இதுவரை என்மீது எத்தனை வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை, எனக்குத் தெரிந்து 18 வழக்குகள் இருக்கலாம். அனைத்தும் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியதற்காகப் போடப்பட்ட வழக்குகள்தான்’’ என்று சொல்லும் மணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர். வயது 31 தான். கடந்த சில வருடங்களாக ஆணவப்படுகொலை, நீட், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி  கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. 78 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வந்திருந்தார். ‘`சாதிப்பாகுபாடு கெட்டி தட்டிப்போன மதுரை மாவட்டத்தில் மேலூர்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயக் குடும்பம். குடும்பத்தினருக்கு விவசாய வேலைகளைத் தவிர எந்த அரசியலும் தெரியாது.  இப்போதுதான் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். சிறுவயதில் எல்லா இளைஞரையும்போல எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் சராசரியாக  வளர்ந்த எனக்கு,  போகப்போக கண்ணுக்கு...

புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக #புரட்சியாளர்_அம்பேத்கர் & #தந்தை_பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்…. வரும் டிசம்பர் 13, 2018 (வியாழக்கிழமை)மாலை 6 மணிக்கு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்… #சிறுநகர்_இசை_சமர்_கலைக்குழுவினரின்_பறை_இசை நிகழ்ச்சி நடைபெறும்… #சிறப்புரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முனைவர்.சுந்தரவள்ளி தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் அனைவரும் வாரீர் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

75 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு  மா.பா. மணிகண்டன் விடுதலை

75 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு மா.பா. மணிகண்டன் விடுதலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த மே 22ந் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மதுரையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மா.பா. மணிகண்டன் தான் காரணம் என காவல்துறை பொய் வழக்கு போட்டு கடந்த 2018ஆகஸ்ட் 23ந் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது அவர் வெளியில் வரக்கூடாது என்பதற்காக முதலில் போடப்பட்ட வழக்கில் பிணை கிடைத்தும் மேலும் பொய் வழக்குகளை போட்டு வெளியில் வரவிடாமல் தடுத்தது காவல்துறை. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் வரை சென்று காவல்துறையின் பொய் வழக்குகளை முறியடித்து நவம்பர் 9ந் தேதி  காலை 7.மணிக்கு மதுரை மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் 75 நாள் சிறையிலிருந்து விடுதலையானார். மா.பா. மணிகண்டனை அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர்...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

இந்தியா முழுதும் பிற்போக்குத்தனங்களும், சாதிய மேலாதிக்கமும் நிறைந்திருக்கிறது. ஆரியப் – பார்ப்பனிய  – இந்துத்துவ கும்பல் இந்திய ஒன்றியத்தின் அனைத்துத் தேசிய இனங்களின் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாள்தோறும் கலவரங்களும், படுகொலைகளும் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படுகின்றன. மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் காவி வெறிக் கும்பல் அடித்துக் கொலை செய்கிறது. ஆரியப் – பார்ப்பனியத்தின் சூழ்ச்சிப் போக்குகளிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால், அத்தகைய தமிழ்நாட்டினைக் கூறுபோட்டு விற்றிட இன்றைக்கு ஆரியப் – பார்ப்பனிய இந்துத்துவக் கும்பல்களை பெருமளவில் களமிறங்கி யிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டையும், இயற்கை வளங்களையும், தனித் தன்மைகளையும் இந்தக் கும்பல்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டினர்  அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பலை அச்சுறுத்தும் பெரு நெருப்புகளுள் தந்தை...

பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு ..பெரியாரியல் தொண்டர்களால் நடந்தேறிய சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற, சிறையிலும்.. சிறைவாசத்திற்குப் பின்னும் ஜாதியொழிப்பு கொள்கைக்காக உயிர்கொடை தந்தப் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் விதமாக தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் பெருமாள்மலையில் 26.11.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் உள்ளரங்குக் கூட்டமாக மாற்றப்பட்டடது. நிகழ்ச்சிக்கு பெருமாள் மலை இராசண்ணன் தலைமை வகிக்க மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலைமதி, இராசிபுரம் சுமதி, பெருமாள் மலை கழக ஆதரவாளர் பாரதிதாசன், புரட்சிகர இளைஞர் முன்னணி அற்புதராஜ் உரைக்குப் பின், பரப்புரைச் செயலாளர்  பால். பிரபாகரன். சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றையும், அச் சமகாலத்தில் நிலவிய ஜாதீயக் கொடுமைகள் குறித்தும் தரவுகளோடு உரையாற்றினார். ஈரோடு மாவட்ட மாணவர்கள் கழகத்தின் சார்பாக  அரங்கம்பாளையம் பிரபு மற்றும் சௌந்தர் பரப்புரைச் செயலாள ருக்கு...

கழகக் கலந்துரையாடல்

கழகக் கலந்துரையாடல்

சென்னை : சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 11.11.2018 மாலை 6 மணிக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. குகன் – கடவுள் மறுப்பு கூறினார். கழகப் பொறுப்பாளர்கள் அன்பு தனசேகர், தபசி குமரன். சுகுமார், கருஅண்ணாமலை, எட்வின் பிரபாகரன், ஜெயபிரகாஷ், செந்தில்குமார், ஏசுகுமார், அருண்குமார், தேன்ராஜ் ஆகியோர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் மற்றும் தலைமை செயலவை முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக தோழர்களிடம் கழக ஏடுகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க சந்தா புத்தகங்களை தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் மா. வேழவேந்தன் ஒப்படைத்து டிசம்பர் மாதம் வரவிருக்கும் பயணக்குழுவிடம் கழக இதழ்களுக்கான சந்தாக்களை ஒப்படைக்கக் கோரி, கூட்டத்தை நிறைவு செய்தார். விருதுநகர் : விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல்...

ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய  ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

18-11-2018 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகி லுள்ள இராம லிங்கசாமிகள் மடத் தின் அரங்கில், ஒட்டன் சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல் வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் 30 பெண்களும் ஆக 80 பேர் கலந்துகொண்டனர். வீ. அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா. மதியழகன் நோக்க உரையாற்றினார். ‘ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் – காலத்தின் தேவை என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்தார்.  நண்பகல் உணவுக்குப் பின்னர் 2-30 மணியளவில் பிற்பகல் அமர்வு தொடங்கியது....

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த தோழர்கள் தேன்ராஜ், தமிழ்தாசன் 13.11.2018  அன்று சென்னை அடையாறு பகுதியில் வடிகால் வாய் குழிக்குள் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருந்த 2 தொழிலாளர்களை தடுதது, குழியிலிருந்து வெளியேற்றினர். உடனே எந்த பாதுகாப்பு கருவிகளும் தராமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திய பொறுப்பாளரையும், சென்னை மாநகராட்சி அடையாறு உதவி பொறியாளரையும் நேரில் சந்தித்து எச்சரித்தனர். அவர்களும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படும் என்றும்… உடனடியாக பாதுகாப்புக் கருவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி, குழிக்குள் இறங்கி வேலையில் ஈடுபட்ட செயலுக்கு வருத்தத்தையும் தெரிவித்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

இளமை சுகங்களை எல்லாம் துறந்து எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும், தமிழ்ப் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி 27.11.2018 அன்று மாலை 5.00 மணிக்கு கொளத்தூர், புலியூர் பிரிவில், தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு ப. இரத்தின சாமி தலைமை வகித்தார். சேலம் மேவி.குமார், த.சரவணன், திருப்பூர் துரைசாமி, தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்), திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி

30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி

திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி யும், மாநாடும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள் – முற்போக்கு அமைப்புகள் – பெரியாரிய அமைப்புகள் இணைந்து பெரியாரே தமிழர்களின் ஒற்றை அடையாளம் என்று பார்ப்பனிய இந்துத்துவ வாதிகளுக்கு பிரகடனப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கம். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுதுமிருந்தும் திருச்சி நோக்கி தனிப் பேருந்து வாகனங்களில் திரண்டு வர தயாராகி வருகிறார்கள். அண்மையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்,  தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் வழியாக தோழர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது திருச்சி கருஞ் சட்டைப் பேரணியில் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். கழகத் தோழர்கள்...

தீபாவளி பட்டாசு: காவல்துறையிடம் விழுப்புரம் மாவட்டக் கழகம் மனு

தீபாவளி பட்டாசு: காவல்துறையிடம் விழுப்புரம் மாவட்டக் கழகம் மனு

தீபாவளி அன்று  2 மணிநேரம் மட்டும் பட்டாசு வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை  கடைபிடிக்க வேண்டுமென்றும்  அதை மக்களிடம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் அரசு துறையில் பணியாற்றுபவர்கள் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க நடவடிகை எடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  விழுப்புரம் கழக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் , விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அரசு நிர்வாகங்களுக்கும் 4.11.2018 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அவர் வீட்டிற்கு சென்று கடிதம் கொடுக்கப்பட்டது. விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழகத் தலைவர் பூஆ.இளையரசன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் ஆகியோர் அதிகாரிகளை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.   பெரியார் முழக்கம் 29112018 இதழ்

ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை ஈரோடு வடக்கு மாவட்டம் வாரந்தோறும் தமிழர்கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணமாக நடத்தி வருகின்றது. மழை  காரணமாக  மற்றும் செயலவைக் கூட்டம் காரணமாக இரு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்ட  பரப்புரைப் பயணம் இந்தவாரம் நம்பியூர் ஒன்றியம் குருமந்தூர் பகுதியில் துவங்கியது. குருமந்தூர் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பத்தில் குருமந்தூர் திமுக பகுதி செயலாளர் குழந்தைவேல் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவுப் பாடலை பாட பரப்புரை பயணம் தொடங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணுகோபால் தலைமையில் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். அலிங்கியம் செந்தில் அனைவருக்கும் நன்றி கூறினார். கழகத் தோழர் செந்தில் அனைவருக்கும் தேனீர் ஏற்பாடு செய்து இருந்தார். பயணக்குழு அடுத்து அளுக்குளி பகுதிக்கு வந்தது. அளுக்குளி தங்கம் வரவேற்புரையாற்ற பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவு...

கொளத்தூர் தோழர்கள் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் ஆயுத பூஜை நிறுத்தம்

கொளத்தூர் தோழர்கள் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் ஆயுத பூஜை நிறுத்தம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது அரசாணைக்கு எதிரானது என்று கொளத்தூர் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தனர். கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாங்கள் அப்படித்தான் கொண்டாடுவோம் என்று கூறவே தோழர்கள் கொளத்தூர் காவல்துறையில் அரசாணையைக் காட்டி புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்  கொளத்தூர் காவல்துறைக்கு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதியுள்ளார். பெரியார் முழக்கம் 29112018 இதழ்

சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதிக் கழகம் சார்பில் நவம்பர் 25ஆம் நாள் மாவீரர் நாள் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் நவம்பர் 26 மாலை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் இராவணன் தலைமை தாங்கினார். நாத்திகன், பெரியார்-அம்பேத்கர்-ஈழப் போராளிகள் குறித்துப் பாடல்களைப் பாடினார். ஈழப் போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடரை மருத்துவர் தாயப்பன் ஏற்றினார். இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் தாயப்பன், ‘ஈழம் நமது கடமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள் நினைவாக ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். ‘பெரியாரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரனும், ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ குறித்து கொளத்தூர் மணியும் விரிவாகப் பேசினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் மயிலைப் பகுதி தோழர்கள் மாட்டுக்கறியுடன் இரவு உணவு...

மருத்துவர் தாயப்பன் பேச்சு ஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்

மருத்துவர் தாயப்பன் பேச்சு ஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்

26.11.2018 இல் சென்னையில் கழகக் கருத்தரங்கில் மருத்துவர் தாயப்பன் உரையிலிருந்து: ஈழத் தமிழர்களுக்கு இரண்டு வகையில் நாம் ஆதரவினைக் காட்டுகிறோம். ஒன்று நமது தொப்புள் கொடியான தமிழர் என்ற ஆதரவு; மற்றொன்று இனம் என்ற எல்லையைக் கடந்து மனிதர் என்ற கண்ணோட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளுக்கு ஆதரவு. இன அழிப்புப் போரில் இனப்படு கொலைக்குள்ளான அவர்களுக்கு இதுவரை எந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 40 ஆண்டுகளாக எவரையும் விசாரணையின்றி சிறையிலடைக்கும் பயங்கரவாத சட்டம் அங்கே அமுலில் இருக்கிறது. அது ஒரு இராணுவச் சட்டம். எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு காலம் ஒரு பயங்கரவாதச் சட்டம் நீடித்து இருந்தது இல்லை. இராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பித் தரப்படவில்லை. உளவியல் ரீதியாக அழுத்தத்திற்கும் தோற்கடிக்கப்பட்டோம் என்ற மனநிலைக்கும் உள்ளான அம்மக்களின் படைப்பாற்றல் திறன் முழுமையாக முடங்கி விட்டது. ஈழத் தமிழர்களின் திறன், படைப்பாற்றலுக்கு உதாரணம் கூற வேண்டுமானால் சுனாமி பேரழிவை இரண்டே மாதங்களில்...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

நந்தீஷ்-சுவாதியின் கொடூரமான ஜாதிவெறி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (நவம்.19, 2018) சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக்க கழகம், இளந்தமிழகம் ஒருங்கிணைத்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களுக்கு தரப்பட்ட அறிக்கை விவரம்: கடந்த 16-11-2018 இல் நந்தீசு-சுவாதி என்ற காதல் இணையர் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. சுவாதியின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட மூவரின் ஒப்புதல் வாக்குமூலமும் இவர்களின் பின்னணியும் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை உறுதிசெய்துள்ளது. நந்தீசு தலித் சமூகப் பிரிவை சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கொலை நடந்த விதம், அதை மறைப்பதற்காக நந்தீசின் முகம் சிதைக்கப்பட்டதும் சுவாதியின் தலைக்கு மொட்டையடிக்கப்பட்டதும் கொலையின் தொழில்முறைத் தன்மையைப் புரிந்துகொள்ள...

மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

இன்று டிச.1. மாலை சென்னையில் மாவீரர் நாள் கருத்தங்கம். “இலங்கை : அரசியல் குழப்பமும், தமிழீழ விடுதலையும்” கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் உரையாற்றுகிறார். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். நாள் : 01.12.218. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : ரிப்போ டர்ஸ் கில்ட், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை. நிகழ்ச்சி ஏற்பாடு : இளந்தமிழகம் அமைப்பு .

சட்ட எரிப்புப் போராட்ட கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்க பொதுக் கூட்டம் பெருமாள்மலை 26112018

சட்ட எரிப்புப் போராட்ட கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்க பொதுக் கூட்டம் பெருமாள்மலை 26112018

நவம்பர் 26. 1957 இந்தியாவில் நடந்தப் புரட்சிகளையும் ,அதன் பின்னனியிலுள்ள சித்தாந்தத்தையெல்லாம் பின்னுக்குத்தள்ளி..மனித குலத்தின் சமத்துவத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் , ஏற்ற தாழ்வுகளைப் பொசுக்கிடத் தீம்பிளம்பாய் தகித்துக் கிளர்ந்த ஒரே புரட்சி, பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு ..பெரியாரியல் தொண்டர்களால் நடந்தேறிய சட்ட எரிப்புப் போராட்டம்தான். அதில் பங்கெடுத்த,சிறை சென்ற, சிறையிலும்..சிறைவாசத்திற்குப்பின்னும் ஜாதியொழிப்பு கொள்கைக்காக உயிர்கொடை தந்தப் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் விதமாக தி வி க ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் பெருமாள்மலையில்  26 / 11 /2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் உள்ளரங்குக் கூட்டமாக மாற்றப்பட்டடது. நிகழ்ச்சிக்கு பெருமாள் மலை தோழர். ராசண்ணன் தலைமை வகிக்க மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ப. ரத்தினசாமி முன்னிலையில் நிகழ்ச்சித் தொடங்கியது. தோழர் கலைமதி, ராசிபுரம், சுமதி, பெருமாள் மலை கழக ஆதரவாளர் பாரதிதாசன், புரட்சிகர இளைஞர் முன்னனி அற்புதராஜ் உரைக்குப் பின்,...

மாவீரர் நாள் கொளத்தூர் புலியூர் 27112018

மாவீரர் நாள் கொளத்தூர் புலியூர் 27112018

27.11.18 அன்று மாலை 6.05 மணிக்கு சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் திரு. ரத்தினசாமி தலைமையில் திரு. தமிழ் ராஜேந்திரன், துரைசாமி, மேவி.குமார் முன்னிலையில் மாவீரர் நாள் சிறப்புடன் நடைபெற்றது. திரு.வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் கொளத்தூர் தா.செ.மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். ஆகியோர் மாவீரர் நாள் உரையாற்றினார். ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மறைந்த மாவீரர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும்  வீரவணக்கம் செலுத்தினர்.  இந்நிகழ்வை தமிழீழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படங்களுக்கு  

மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

நவ.27 மாவீரர் நாள் – 2018 நேரம் : மாலை 5.00 மணி இடம்: தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். மாவீரர் நாள் உரை : தோழர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு. தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, கொளத்தூர், சேலம் மாவட்டம்.

அரசியல் சட்ட எரிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 25112018

அரசியல் சட்ட எரிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 25112018

*அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம்…. நாளை (நவம்பர் 26, 2018 திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில்..* *கருத்துரை :* தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திவிக *(தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்)* தோழர்.மருத்துவர்.தாயப்பன் *(தலைப்பு : ஈழம் – நமது கடமை)* தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக *(தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை)* *அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்…* *அனைவரும் வாரீர்.!* *தொடர்புக்கு : 7299230363*