வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  2. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் ஆற்று நீரை விவசாயத்திற்கும் மற்றும் ஆடுமாடுகள் குடிப்பதற்கும் பயன்படுத்த முடியவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆலை கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடை செய்வதோடு  விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்படி  கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்கள் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  3. கழக வார ஏடாகிய “புரட்சி பெரியார் முழக்கம்” மற்றும் மாத இதழாகிய “நிமிர்வோம்” ஆகிய இரண்டிற்கும்  சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் வாசிப்பாளர்களை (சந்தாதாரர்கள்) சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

 

 

பெரியார் முழக்கம் 07112019 இதழ்

You may also like...