பெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி
ஈரோட்டில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் மணிமேகலை நிகழ்த்திய தலைமையுரை: விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்த எம் தந்தையும், இவ்வுலகில் தோன்றிய அத்துணைப் புரட்சிக்காரர் களையும் விட, பெண்ணுரிமைக்கும் அவர்தம் விடுதலைக்கும் பெரியதாய் சிந்தித்த… குரல் கொடுத்த… போரிட்டக் கலகக்காரரான எங்கள் அய்யாவை பெரியாரை நன்றியோடு கைகூப்பி வணங்குகிறேன். இப்பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் நோக்கத்தையும் தற்காலப் பெண்களின் நிலையையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் அவல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை இங்கு வந்திருக்கிற ஆளுமைகள், விசாலமாக வும், விசாரணையுடனும், பெரும் தரவு களோடும் எடுத்துரைக்க இருப்பதால், நான் சிறியத் தகவல் ஒன்றோடு என் தலைமை உரையை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். நாங்கள் களப்பணிக்கு சென்ற போதெல்லாம் மக்களின் எண்ணங்கள், குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரியார் பற்றிய உருவகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். பெரியார் என்பவர் கடவுளை மறுப்பவர்! பெரியார் என்பவர்...
