மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016

 

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார்.

‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர்.  பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட பிற அமைப்புத் தோழர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.  தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர்கள் மோகன்ராஜ், வீரா கார்த்தி ஆகியோருடன் இணைந்து  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

 

unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8 unnamed15726533_713718385469001_4228099228798409084_n1ea9f738-5047-4c9f-acce-a4c0e630358af7298cdb-95d1-475f-9db9-122a59dd4b7c15823609_1830048163941539_2758769147169193375_n

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

You may also like...