பொங்கல் விழாப் பொதுக் கூட்டம் ஈரோடு 29012017
ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நன்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6-30 மணிக்கு தோழர். மா. ஜெயபாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற , தோழர் ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர், தி.வி.க.) தலைமையிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி, தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி , சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையில், சித்தோடு முருகேசன் அவர்களின் பகுத்தறிவுப் பாடலுடன் கூட்டம் துவங்கியது.
தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும் புத்தகப் பரிசுகளை திருப்பூர் துரைசாமி (பொருளாளர் தி.வி.க.) சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.
தமிழிசைப் பாடல்களுக்கு சென்னிமலை ஆசிரியர் சுப்பிரமணி, ரகு ஆகியோர் பரத நாட்டியம் நடைபெற்றது. இறுதியாக தோழர் இரா. கமலக் கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.
இக்கூட்டத்தினை அண்ணாநகர் மக்களோடு இளங்கோ , சம்பத் மற்றும் அடேங்கப்பா மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தினர். கூட்டத்தில் சித்தோடு நட்ராஜ், பிரபு, கதிர், ரமேஷ் , பிரபு , கிருஷ்ணமூர்த்தி, பிரசாந்த், ஈரோடு சிவானந்தம், இராசன்னா, பவானி வினோத், வேல்முருகன், ஜெகன், காவலாண்டியூர் சித்துசாமி , ஈசுவரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.