மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும் – பொதுக்கூட்டம் பவானி 19052017

19/05/2017 வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் “மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும்” என்ற தலைப்பில் கொடியேற்ற நிகழ்வுடனும் T.K.R பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. நிகழ்வுக்கு முன்னதாக பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்திலும், அந்தியூர் பிரிவில் உள்ள கொடிக்கம்பத்திலும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி ஏற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவு பறை இசை,  பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டன. தோழர் வேல்முருகன் வரவேற்புரையாற்ற மாவட்ட செயாலாளர் வேணுகோபால் கூட்டத்துக்குத் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம், மாநில அமைப்புச் செயாலாளர்  இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயாலாளர் இராம. இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பெரியாரியமும், அம்பேத்கரியமும் மட்டுமல்லாமல் மார்க்ஸியமும் தேவை என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார். தொடர்ந்து கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள், ஒடுக்கப்பட்டு வந்த சமுதாயத்திலிருந்து வந்த பல தலைவர்களின் பிறந்த நாட்களை சமூக அக்கறையுடன் கொண்டாடுவது போல்,  பி.ஜே.பி இந்துத்துவ சக்திகள் அம்மக்களின் பேராதரவைப் பெறுவதற்கு நாடகம் ஆடுகிறார்கள் என்றும் அம்பேத்கர் ஜெயந்தி என்று சொல்லி அம்பேத்கரை உள்வாங்க முயற்சிக்கலாம், ஆனால் பெரியாரைத் தொட்டுவிட  முடியாது என்று தனது உரையில் குறிப்பிட்டார். கூட்டத்தின் இறுதிவரை பொதுமக்கள் உற்சாகமாக கருத்துக்களைக்  கேட்டனர். இறுதியாக பவானி ஒன்றிய செயாலாளர் வினோத் நன்றியுரையாற்றினார். கூட்டத்தின் நிறைவில் தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.
unnamed-9 unnamed-8 unnamed-7 unnamed-6 unnamed-5 unnamed-4

You may also like...