கழகத்தின் போராட்ட எதிரொலி, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே வெற்றி

இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டு விழா என்ற பெயரில் இன்று 18022017 ஈரோடு பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது.

இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள இருந்தார்கள்.

மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, காலை 10 மணிக்கு பரிமளம் மகால் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனிடையில் விழாவிற்கு எதிராய் மனு அளித்ததன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள்.

கழகத்தின் முயற்சிக்கு வெற்றி

48c07ea3-0828-40f7-be00-43e149bafb8b 4414d44c-a5f4-4e13-9788-e37650443714 89488978-7357-4610-9994-4822ada07ac1

You may also like...