சத்தியமங்கலம் அணியின் நான்காம் நாள் எழுச்சி பரப்புரை பயணம்
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தில் சத்தி அணியின் நான்காவது நாள் பயணம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக தோழர் ஆனந்து தலைமையில் ஆன வீதி நாடக குழுவின் பறை இசை மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்புசார்ந்த வீதி நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து தோழர் சுவாமி நாதன்,முத்துபாண்டி,அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வைரவேல் நன்றி கூற பயணம் ஆவத்திபாளையம் சென்றடைந்த்து. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணக்குழு தனது பரப்புரையை தொடர்ந்த்து.அப்பகுதியில் கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உரை நிகழ்த்த தோழர் சரவணன் நன்றி கூற பயணக்குழு திருச்செங்கோடு சென்று அடைந்த்து.மதிய உணவுக்கு பின் பயணக்குழு தேவனாங்குறிச்சி சென்றடைந்த்து. அங்கு கலைக் குழுவின் வீதி நாடகம் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு வின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை இராசேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்க, தோழர் சதிஷ் நன்றி உரை வழங்க பயணக்குழு கொமராபாளையம் சென்றனடந்த்து. நான்காவது நாள் பயண நிறைவு பொதுக்கூட்டம் கொமராபாளையத்தில் நடை பெற்றது. பொது கூட்டத்தின் முதல் நிகழ்வாக பறை இசையும், பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சியும், வீதி நாடக நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பொது கூட்ட நிகழ்வில் தோழர் சுவாமிநாதன், கழகத்தலைவர் கொளத்தூர்மணி, பொதுசெயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் தண்டபாணி நன்றியுரை கூறினார். பயணக்குழுவி்ற்கான உணவு ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட கழக தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.