புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !
மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன்சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது.‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி...