‘மகாராஷ்டிரா’ ஆட்சி அறிவிப்பு: மண்ணின் மைந்தருக்கு வேலை தந்தால் ‘ஜி.எஸ்.டி.’ கிடையாது

ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில  அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 80 சதவீத வேலை வாய்ப்புகளை வழங்கும் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு மண்ணின் மைந்தர் வேலை வாய்ப்புக் கொள்கையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகும். 80 சதவீத வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க மறுக்கும் தனியார் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரிச் சலுகைகள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிரா தொழில் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கடந்த ஆக. 26ஆம் தேதி அறிவித்தார்.  இவர் சிவசேனாக் கட்சியைச் சார்ந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், எண்ணிக்கை 3.8 இலட்சம். இதில் 2.4 மில்லியன் பேர் வேலை செய்கிறார்கள்.

பெரியார் முழக்கம் 0509209 இதழ்

You may also like...