‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.அய்.ஏ.) வரம்பற்ற அதிகாரம் வழங்கி, சிறுபான்மையினர், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஜூலை 27, 2019 மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். “இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் பார்ப்பன இந்துத்துவாவை எதிர்த்து களமாடும் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன், திருமுருகன் காந்தி, மீ.த. பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்டன உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 08082019 இதழ்

You may also like...