திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு
தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர். பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன்...
