சுப்ரமணியம்-நந்தினி மணவிழா

9.6.2016 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி, மூப்பனார் திருமண மண்டபத்தில் தெனாம் துரை, பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த அம்சவள்ளிராஜேந்திரன் புதல்வன் இரா.சுப்பிரமணியன், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் பரூர் மதுராப்பட்டி கிராமம் தங்கமணி-பொன் மணியன் புதல்வி சு. நந்தினிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. முருகன்குடி ஆசிரியர் சி.பழனிவேல் முன்னிலை வகித்தார். மேலும் மா.லெ.கட்சி, மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர், பெண்ணாடம் மனித நேய பேரவை அமைப்பாளர் பஞ்சநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணமகனின் சகோதரர் இரா. பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். மணமக்கள் நன்றி கூறினர்.

மணவிழா மகிழ்வாக கழகத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 14072016 இதழ்

You may also like...