அய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன?

சபரி மலையில் ஆண்டுதோறும் ‘மகர ஜோதி’ என்ற வெளிச்சம் தோன்றும். இது அய்யப்பன் சக்தியால் ஆண்டுதோறும் தானாக தோன்றும் ஒன்று என்று நம்ப வைக்கப்பட்டது. அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள், இந்த ‘மகர ஜோதியை’யும் தரிசிப்பது ஒரு சடங்கு. இது உண்மையல்ல. திருவனந்தபுரம் கோயில் தேவஸ்தானம் தான் மின் வாரிய ஊழியர்களைப் பயன்படுத்தி வெளிச்சத்தை  உருவாக்குகிறது. அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நயினார், இந்த மோசடியை அம்பலப்படுத்துவதற்குச்  சென்ற கேரள மாநில பகுத்தறிவாளர் குழுவிடம் உண்மையை ஒப்புக் கொண்டார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சேனல் இடமருகு இதை அம்பலப்படுத்த ‘மகர ஜோதி’ தெரியும் பொன்னம்பல மேடு என்ற பகுதிக்கு தனது குழுவினருடன் செல்ல திட்டமிட்டார்.அதற்கு முன் கேரள முதல்வர் ஈ.கே. நயினாரை சந்தித்து ஒப்புதல் பெறச் சென்ற போது, ஈ.கே.நயினாரே இந்த உண்மையை வெளி யிட்டார். 5.1.1990 அன்று பி.டி.அய். செய்தி நிறுவனம் இதை வெளியிட்டது. முதல்வரின் கருத்தும் ஒலிப் பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டது. பி.டி.அய். செய்தி நிறுவனம் கேரள முதல்வர் கூறியதாக வெளியிட்ட செய்தி இவ்வாறு கூறியது.

‘HANDI  WORK  of the  Travancore devaswam  board’ பி.டி.அய். வெளியிட்ட செய்தியின் நகல் அருகே தரப்பட்டுள்ளது

பெரியார் முழக்கம் 28072016 இதழ்

You may also like...