மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

‘சமஸ்கிருதம்’ ஒரு மொழி என்ற எல்லையை யும் தாண்டி, பார்ப்பனிய ‘நால் வர்ண’ ஏற்றத் தாழ்வுகளையும் தன்னுடன் பிரிக்க முடியா மல் இணைத்துக் கொண் டிருக்கிறது. ‘பிராமணன்-சூத்திரன்’ என்ற பிறவி ஏற்றத் தாழ்வு கொடுமை களை சமூகத்தின் விதி களாக்கும் ‘மனு சாஸ் திரம்’ – சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்று கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையும் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘பிரம்மம்’, ‘பிராமனம்’ இவற்றுக்குள்தான் உலகமே அடக்கம் என்று கூறும் ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்தை  வலியுறுத் தும் சமஸ்கிருத கருத்து கள் காலாவதியாகி விட்டன. இனி நாகரிக சமூகத்துக்கு அவை தேவை இல்லை என்று சமஸ்கிருத பெருமை பேசும் பா.ஜ.க. ஆட்சியோ, ‘சங் பரிவார்’ அமைப்புகளோ அறிவிப் பார்களா? சவால் விட்டுக் கேட்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர், சமஸ்கிருத்தைப் படித்தாலும் அவர் ‘வேத சமஸ்கிருதம்’ படித்த பார்ப்பனர்களோடு சமமாக மதிக்கப்படுகிறார்களா? இல்லை. வரலாற்றிலிருந்து ஒரு சம்பவம்:

மறைந்த பாபு ஜெகஜீவன்ராம் இந்தியாவின் மூத்த தலைவர் களில் ஒருவர். நீண்ட காலம் காங்கிரஸ் மத்திய அமைச்சரவை யில் இடம் பெற்றவர். கற்றறிந்த மேதை. சமஸ்கிருதமும் கற்றவர். 1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தபோது அதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறி னார். பிரதமர் பதவிக்குரிய அனு பவம், அறிவு, ஆற்றல் அத்தனை யும் இருந்தும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அந்தப் பதவியை அவர் எட்ட முடியவில்லை. 1978 ஆம் ஆண்டில் ஜெகஜீவன்ராம், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர். அப்போது வாரணாசி சமஸ்கிருதப் பல்கலைக்கழகத் தில் சம்பூர்ணானந்த் என்ற சமஸ் கிருத அறிஞரின் சிலையைத் திறந்து வைக்க ஜெகஜீவன்ராம் அழைக்கப்பட்டிருந்தார். சம் பூர்ணானந்த் அதர்வண வேதத்தை ஆய்வு செய்தவர். சம்பவம் நடந்த நாள் 24.1.1978.

மின் இணைப்பு வழியாக ஒரு ‘சுவிட்சை’ ஜெகஜீவன்ராம் அழுத்த, சிலையை மூடியிருந்த திரை விலகியது. அவ்வளவுதான் ஜெகஜீவன் ராம் திறந்து வைத்த அந்த சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி, ‘சத்ரசங்’ என்ற பார்ப்பனர் அமைப்பைச் சார்ந்த வர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து சிலையில் ஊற்றி தீட்டுக் கழித்தனர். ஜெகஜீவன் ராம் நிகழ்ச்சி முடிந்து திரும்புகை யில் “செருப்பு தைக்கும் கீழ் ஜாதிக்காரனுக்கு சமஸ்கிருத அறிஞரின் சிலையைத் திறக்க உரிமை இல்லை” என்று கூச்ச லிட்டனர். அப்போது தரைப் படை, கப்பல் படை, விமானப் படை என்று முப்படைக்கும் அமைச்சர் எனும் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருந்தவர் தான் ஜெகஜீவன்ராம். இருந்தும் என்ன? அவர், ‘மின் இணைப்பு வழியாக’ திறந்து வைத்த சிலைக் குள்ளே அந்த இணைப்பு வழி யாக தீட்டும் பாய்ந்து விட்டதாம். காரணம், திறக்கப்பட்டது ‘சமஸ் கிருத அறிஞர் சிலை’. இதைக் கண்டித்து ‘தாழ்த்தப்பட்டோர் லீக்’ என்ற அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராம்தான் என்பவர் அறிக்கை விட்டார். பார்ப்பன ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்க மேடைகள்தான் ஜெக ஜீவன்ராமுக்கு ஆதரவாக அனல் கக்கின. தமிழக தலைநகரில் வாழ் நாள் முழுதும் பார்ப்பன எதிர்ப் பாளராக விளங்கிய அந்த ஜாதி எதிர்ப்பாளருக்கு தி.மு.க. ஆட்சி, சிலை எடுத்து கவுரவித்தது. சேப் பாக்கம் தலைமைச் செயலக வாயிலில் அந்த சிலை இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக் கிறது.

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...