அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

26-6-2016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழா விளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர்.

வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பறை அடித்தது குறிப்பிடத்தக்கது.

விழாவை விரட்டு வீதி நாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மிக சிறப்பாக ஒழுங்கமைத்தார். விழாவில் புதுவை மாநில கழக அமைப்பாளர் தந்தை பிரியன், வழக்கறிஞர் அருண், சேலம் மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாநகரக் கழக செயலாளர் பரமேஸ்வரன், நங்கவள்ளி கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் புதுவை சிந்தனையாளர் இயக்கத் தோழர்களும், பல்வேறு முற்போக்கு இயக்க தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் முழக்கம் 28072016 இதழ்

You may also like...