தீ மிதிக்கு தடை – கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு

கருநாடகாவில் தும்கூரு என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் தீ மிதியின்போது தீயில் விழுந்து 70 பக்தர்கள் படுகாயமடைந்தனர். 35 வயதான பெண் தீக்காயங்களால் கடந்த மார்ச் 17ஆம் தேதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கருநாடக சட்டசபையில் தீக்குண்டத்துக்கு உரிய பாதுகாப்புகள் செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அப்போது சீரிய பகுத்தறிவாளரான கருநாடக முதல்வர் சித்தராமய்யா, ‘தீ மிதி நடத்த முழுமையாக தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று  சட்டசபையில் தெரிவித்தார். பாராட்ட வேண்டிய முதலமைச்சர்!

பெரியார் முழக்கம் 31032016 இதழ்

You may also like...