‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’ அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை 4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது
மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி, ‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால் சமூகத்தின் பாதிப்புகளையும் விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின் உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள் மோசடி, ‘பேய்- பில்லி-சூன்யம்’ என்ற கற்பனைகள் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்துக்கு எதிரான அறிவியல் விளக்கம், நரபலி உள்ளிட்ட சமூகத்தை சீரழிக்கும் மூடநம்பிக்கைகளை மக்களிடம் அறிவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துக் கூறி விளக்கப்படும். பொதுக் கூட்டங்களாகவும் வீதிக் கூட்டங்களாகவும் இந்த அறிவியல் விளக்க நிகழ்ச்சிகள் நடக்கும். 6 நாள்களில் 77 ஊர்களில் இந்தப் பரப்புரை நடக்கிறது. பரப்புரைக்கான ஏற்பாடுகளில் தோழர்கள் திட்டமிடல்களில் களம் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். 4 அணிகளும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆகஸ்ட் 12ஆம் நாள் இணைகின்றன. ஆகஸ்ட் 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். பயண நிறைவு விழாவை மாநாடு போல் நடத்த கழகத் தோழர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பயணத் திட்டத்தை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் அறிவித்துள்ளார். பயணத் திட்ட விவரம்:
சத்திய மங்கலம் அணி
7.8.2016 – மாலை 6 மணி- சத்திய மங்கலம் – பயணத் துவக்கம், பொதுக் கூட்டம்.
8.8.2016 – காலை 10 மணி – தூக்க நாயக்கன் பாளையம்; மாலை 4 மணி – அந்தியூர் – மதிய உணவு; இரவு 7 மணி – குருவரெட்டியூர் – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
9.8.2016 – காலை 10 மணி – அம்மாபேட்டை; மாலை 4 மணி – சித்தார் – மதிய உணவு; இரவு 7 மணி – ஈரோடு – பொதுக்கூட்டம் – இரவு தங்கல். 10.8.2016 – காலை 10 மணி – பள்ளிப்பாளையம்; மாலை 4 மணி – திருச்செங்கோடு – மதிய உணவு; இரவு 7 மணி – குமாரபாளையம் – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
11.8.2016 – காலை 10 மணி – சங்ககிரி; மதியம் 12 மணி – சின்னப்பப்பட்டி – மதிய உணவு; மாலை 4 மணி – ஓமலூர்; இரவு 7 மணி – கருப்பூர் – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
12.8.2016 – காலை 10 மணி – அயோத்திப்பட்டினம்; மதியம் 12 மணி – வாழப்பாடி – மதிய உணவு; இரவு – ஆத்தூர் – பொதுக் கூட்டம் – பயணம் நிறைவு.
தலைமை : பால். பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்)
பொறுப்பாளர்கள் : இராம. இளங்கோவன் (கழக வெளியீட்டுச் செயலாளர்),ஈரோடு இரத்தினசாமி (கழக அமைப்புச்செயலாளர்); நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தலைவர்). மந்திரமா? தந்திரமா? : கோவிந்தராசு (சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்) ஒருங்கிணைப்பாளர் : வேணுகோபால் (ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்).
சென்னை அணி
7.8.2016 – காலை 9 மணி – இராயப்பேட்டை – துவக்கம்; காலை 10 மணி – போரூர்; காலை 11 மணி – பூவிருந்தவல்லி; மாலை 4 மணி – திருப்பெரும்புதூர்; மாலை 5.30 மணி – காஞ்சிபுரம் – இரவு தங்கல். 8.8.2016 – காலை 10 மணி – நெமிலி; காலை 11.30 மணி – காவேரிப்பாக்கம்; மாலை 3 மணி – வாலாஜா; மாலை 4.30 மணி – ஆற்காடு; மாலை 6 மணி – வேலூர் – இரவு தங்கல். 9.8.2016 – காலை 10 மணி – போளூர்; காலை 11 மணி சேத்துப்பட்டு; மாலை 4 மணி – மேல்மனையனூர்; மாலை 5.30 மணி – செஞ்சி- இரவு தங்கல். 10.8.2016 – காலை 10 மணி – திண்டி வனம்; காலை 11.30 மணி – விக்கிரவண்டி;
மாலை 4 மணி – விழுப்புரம் – இரவு தங்கல். 11.8.2016 – காலை 10 மணி – பண்ருட்டி;
காலை 11.30 மணி – கம்மாபுரம்; மாலை 5 மணி – விருத்தாசலம் – இரவு தங்கல்.
12.8.2016 – காலை 10 மணி – உளுந்தூர் பேட்டை; காலை 11 மணி – தியாக துருகம்;
மாலை 3 மணி – கள்ளக்குறிச்சி; மாலை 4.30 மணி – சின்னசேலம்; மாலை 6 மணி – ஆத்தூர் (சேலம்) – பொதுக் கூட்டம், பயணம் நிறைவு.
தலைமை : விடுதலை இராசேந்திரன் (கழகப் பொதுச் செயலாளர்)
பொறுப்பாளர்கள் : தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), உமாபதி
(சென்னை மாவட்ட கழகத் தலைவர்) ஒருங்கிணைப்பாளர் : விழுப்புரம் அய்யனார் (கழக தலைமைக் குழு உறுப்பினர்).
மயிலாடுதுறை அணி
7.8.2016 – மாலை 6 மணி – மயிலாடுதுறை – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்.
8.8.2016 – காலை 10 மணி – குத்தாலம்; மதியம் 12 மணி – நாச்சியார்கோயில் – மதிய
உணவு; மாலை 4 மணி – நீடாமங்கலம்; மாலை 6 மணி – மன்னார்குடி- பொதுக்
கூட்டம் – இரவு தங்கல். 9.8.2016 – காலை 10 மணி – வடசேரி; மதியம் 12 மணி – மதுக்கூர் – மதிய உணவு; மாலை 4 மணி – பட்டுக்கோட்டை; மாலை 6 மணி – பேராவூரணி- பொதுக் கூட்டம் – இரவு தங்கல். 10.8.2016 – காலை 10 மணி – ஒட்டங்காடு; மாலை 4 மணி – திருச்சிற்றம்பலம் – மதிய உணவு; மாலை 5 மணி – கொல்லங்காடு; இரவு 7 மணி – கறம்பகுடி – பொதுக் கூட்டம் – இரவு தங்கல். 11.8.2016 – காலை 10 மணி – ஊரணிபுரம்; மதியம் 12 மணி – கந்தர்வக்கோட்டை -மதிய உணவு; மாலை 4 மணி – காட்டூர் (திருச்சி); மாலை 6 மணி – திருச்சி- பொதுக்கூட்டம் – இரவு தங்கல். 12.8.2016 – காலை 10 மணி – சமயபுரம்; மதியம் 12 மணி – பெரம்பலூர் – இரவு – ஆத்தூர் – பொதுக் கூட்டம், பயணம் நிறைவு. தலைமை : கொளத்தூர் மணி (கழகத் தலைவர்)
பொறுப்பாளர்கள் : இளையராசா (கழகத்தலைமைக் குழு உறுப்பினர்), மகேஷ் (நாகை மாவட்ட கழகத் செயலாளர்)
மந்திரமா? தந்திரமா? : துரை. தாமோதரன் (பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர்)
ஒருங்கிணைப்பாளர் : மன்னை காளிதாஸ் (திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர்)
திருப்பூர் அணி
7.8.2016 – இரவு 7 மணி – திருப்பூர் – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம். 8.8.2016 – காலை 10 மணி – பல்லடம் – மதிய உணவு; மாலை 4 மணி – காரணம்பேட்டை; இரவு 7 மணி – சூலூர்- பொதுக் கூட்டம் – இரவு தங்கல். 9.8.2016 – காலை 10 மணி – கிணத்துக்கடவு – மதிய உணவு; மாலை 4 மணி – பொள்ளாச்சி; இரவு 7 மணி – ஆனைமலை- பொதுக் கூட்டம்
– இரவு தங்கல். 10.8.2016 – காலை 10 மணி – உடுமலை – மதிய உணவு; மாலை 4 மணி – மடத்துக்குளம்; இரவு 7 மணி – கனியூர்- பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
11.8.2016 – காலை 10 மணி – காங்கேயம் – மதிய உணவு; மாலை 4 மணி – நத்தக்கடையூர்; இரவு 7 மணி – கொடுமுடி- பொதுக் கூட்டம் – இரவு தங்கல். 12.8.2016 – காலை 10 மணி – பரமத்திவேலூர்; மதியம் 12 மணி – ராசிபுரம் – மதிய உணவு; இரவு 7 மணி – ஆத்தூர் – பொதுக் கூட்டம், பயணம் நிறைவு.
தலைமை : திருப்பூர் சு. துரைசாமி (கழகப் பொருளாளர்)
பொறுப்பாளர்கள் : நீதியரசன் (திருப்பூர் மாநகர கழகச் செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாவட்ட கழக செயலாளர்), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்). மந்திரமா? தந்திரமா? : காவை. இளவரசன் ஒருங்கிணைப்பாளர் : சூலூர் பன்னீர் செல்வம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
- பயணம் வரும் பகுதிகளில் விளம்பரம் (சுவரெழுத்து, தட்டி, சுவரொட்டி) செய்யவும்.
- மதிய உணவு எந்தப் பகுதியில் வருகிறதோ அதே பகுதியில் சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யவும்.
- இரவு பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இரவு உணவு, இரவு தங்கல், மறுநாள் காலை உணவு ஏற்பாடு செய்யவும்.
- மாவட்டத்திலுள்ள தோழர்கள் பயணக் குழு வரும்போது தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டமும் வழிச் செலவாக ரூ.3000 பயணக் குழுவிற்கு வழங்க வேண்டும்.
பயணம் குறித்து விவரம் அறிய :
சென்னை – உமாபதி (7299230363); அய்யனார் (9841296848)
மயிலாடுதுறை – இளையராசா (8925171607); மன்னை காளிதாஸ் (8012997914)
திருப்பூர் – சூலூர் பன்னீர்செல்வம் (9942645497); நிர்மல்குமார் (9865285829)
சத்தியமங்கலம் – இரத்தினசாமி (9842712444); நாத்திகஜோதி (9942537666)
– பால். பிரபாகரன்,
பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 14072016 இதழ்