சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வின் ஊதுகுழலாக வெளி வரும் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர்

கி. வைத்தியநாதன் எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஹரித்துவாரில் திட்டமிடப் பட்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சென்றார்.  ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் உ.பி. மாநில ஆளுநர் ராம்நாயக் சிலையை திறந்து வைத்தார் என்று படங்களுடன் ‘தினமணி’ நாளேட்டில் ஒரு முழுப் பக்கத்துக்கு செய்தியை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் தமிழ் நாட்டைச் சார்ந்த இப்போது மேகலயா ஆளுநராக இருக்கும் சண்முகநாதன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், காங் கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் போன்ற ஒரு சில தமிழர்கள் மட்டுமே பங்கேற்றனர். கங்கை நதிக்கரைப் பகுதி யிலுள்ள வளாகத்தில் சிலை திறக்கப்பட்டதாக பொய்யான செய்தி வெளியிட்ட ‘தினமணி’ நாளிதழ், கடைசி வரியில் தப்பித்துக் கொள்வதற் காக எதிர்ப்புக் காரண மாக பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதாக அடிக் குறிப்பு போட்டிருக் கிறது. சிலை திறப்பு பொதுப் பணித் துறை விருந்தினர் மாளிகையில் நடந்தது என்ற உண்மையை ஏன் இருட்டடிக்க வேண்டும்? ‘திருவள்ளுவர் ஒரு தலித்’ என்று கூறி பார்ப்பனர் கள் இரண்டு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து சிலை திறப்பை தடுத்து நிறுத்தியதை ‘தினமணி’ திட்டமிட்டு இருட்டடிப்பு செய்திருக்கிறது.

கங்கை நதிக்கரை யிலேயே சிலை திறக்கப் பட்டதுபோல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி வாசகர்களின் காதில் பூ சுற்றுகிறது.

வேத காலத்தில் சமஸ்கிருதத்தின் வழியாக நடத்திய அதே சூழ்ச்சிகளை இப்போதும் தங்கள் அதிகாரத்திலுள்ள ஏடுகளின் வழியாக நடத்திக் கொண்டிருக் கிறார்கள்.

பார்ப்பனர்கள் திருந்தவே மாட்டார்களா?

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...