மகிழ்வோடு; தார்சூடு!
பெண்களின் மறுமணத்தை வலியுறுத்தி புரட்சிக் கவிஞர் எழுதிய பாடல் இது.
“என்னருமைத் துணைவி! நானோ கொடிய
நோயினால் வருந்துகிறேன். இனி பிழைத்
திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே
என் மனத்திலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள்.
நான் இறந்தபின், நீ என்னையே எண்ணிக்
காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு
மகிழ்வுடன் இரு! உன் மனத்துக்குரியவனை
மணந்து வாழு!
“வைதீக மிரட்டலுக்கு அஞ்சாதே; மலர்
மாலை சூடி மகிழுடனே வாழ்வாய்” என்று கூறி
மகிழ்ச்சியுடன் உயிரைவிட்டான் வீரத் தமிழன்.
இதை அழகுற எடுத்துக் கூறுகிறார் புரட்சிக் கவி பாரதிதாசன்.
“பெண்ணே! கண்ணே!!
கண்மணியே!!!
கடும்பிணியாளன் நான்
இறந்தபின், மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே
பழிஎன்றன் மீதே.
அடஞ்செய்யும் வைதீகம்
பொருள்படுத்தாதே!
ஆசைக்குரியவனை நாடு –
மகிழ்வோடு – தார்சூடு –
நலம் தேடு.”
– புரட்சிக் கவிஞர்
பெரியார் முழக்கம் 28072016 இதழ்