Category: பெரியார் முழக்கம்

ஆகஸ்டு 5 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் படத்திறப்பு

ஆகஸ்டு 5 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக் கரம்பை வேலு – சுயமரியாதைப் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்கத் தொண்டர் நாள் 5.8.2012 அன்று காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம், 132 வால்மீகி நகர், இரண்டாம் தளம்) மருத்துவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெறுகிறது. மூவலூர் இராமாமிர்தம் படத்தை வாலாசா வல்லவனும், பட்டுக்கோட்டை டேவிஸ் படத்தை கவிஞர் சிகாமணி யும், சுவரெழுத்து சுப்பையா படத்தை புதுகை இராசேந்திரனும் திறந்து வைத்து பேசுகிறார்கள். ஓவியா சிறப்புரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 02082012 இதழ்

பார்ப்பன விரத மோசடிகள்

பார்ப்பன விரத மோசடிகள்

இந்த சதுர்மாஸ்ய விரத காலத்தில் பார்ப்பன மடத் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் தங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்கு சீடர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வாடிக்கை. இந்த பார்ப்பன விரதம் பற்றி சிலாகித்து, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (ஜூலை 18) ஆர். சாமிநாதன் என்ற பார்ப்பனர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முழுமையாக வேதநெறி வாழ்க்கையில் ‘பிராமணனாக’ வாழும் இந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களிடம் தங்களின் மனக் குமுறல்களை கொட்டினால், அதை வேதப் பார்ப்பன ‘குருக்கள்’ காதால் கேட்டு தலையாட்டினாலே கூற வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம். இப்படியெல்லாம் எழுதும் அந்தப் பார்ப்பனர், ‘சதுர்மாஸ்ய விரத காலங்களில்’ பார்ப்பன குருக்களை சந்திப்பதுகூட வியாபாரமாகிவிட்டது என்றும், செல்வாக்குள்ளவர்கள் முக்கிய புள்ளிகள், தட்டு தட்டாக பொருட்களை வாங்கிக் கொண்டு கியூ வரிசையில் நிற்காமல் தனித் தரிசனம் பெற்று விடுகிறார்கள் என்றும் புலம்புகிறார். சங்கராச்சாரிகளையும் பார்ப்பன குருக்களையும் சந்திக்க வரும் கூட்டத்தினர், தங்களின் பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், குடும்பப்...

தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்

தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்

கிருட்டிணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் தோழர் பழனி படுகொலையில் தலைமறைவாக இருந்த தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், அவரது மாமனார் இலகுமய்யா, மைத்துனர் கேசவமூர்த்தி, சித்தராஜி மற்றும் ஒருவர் உட்பட 5 பேரும் ஜூலை 30 ஆம் தேதி காலை திருவண்ணாமலை முதலாவது நீதிமன்ற நடுவர் முன் சரணடைந்துள்ளனர்.  கொலை நடந்த ஜூலை 5 ஆம் தேதியி லிருந்து தலைமறைவாக இருந்த இவர்களை காவல்துறையின் தனிப்படைகள் தேடி வந்தன. இந்த கொலையில் 22 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே தனக்கு முன் பிணை கேட்டு தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி இந்த முன் பிணை கேட்கும் மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி தளி ராமச்சந்திரன் சார்பில் வாதிட வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருட்டிணன் ஆஜர் ஆனார். உச்சநீதிமன்ற...

காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்

காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்

23.7.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கள்ளுகடை மேடு பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மனுதர்ம எரிப்புப் போராட்டம் ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை குடந்தை சிற்பி இராசன் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் பேரவை ப.சிவக்குமார் தலைமை வகித்தார். பெ.சே. மோகன்ராஜ், செல்லப்பன், செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிற்பி இராசன், சாமியார்களின் மோசடிகளையும், கடவுளர்களின் பிறப்புக் கதைகளையும் கூறி, மக்களின் மூளைக்கு வேலை கொடுத்தார். கூட்டத்தில் அமர்ந்திருந்த பக்தர்களிடம் கேள்விகளைக் கேட்டு, கடவுள் நம்பிக்கையை உடைக்கும் விதமான பதில்களை அவர்களிடமிருந்தே பெற்று, அதற்கு விளக்கம் அளித்தார். அடுத்தபடியாக மனுதர்ம எரிப்பு ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு ஒன்றிய அமைப்பாளர் செ.சசிக்குமார் தலைமை வகித்தார். வெள்ளோடு கோபி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சென்னிமலை செல்லப்பன், பகுத்தறிவாளர் பேரவை...

ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?”  அரங்க குணசேகரன் கேள்வி

ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?” அரங்க குணசேகரன் கேள்வி

இராயக்கோட்டையில் 15.7.2012 அன்று நடந்த தோழர் பழனி படுகொலை கண்டன கூட்டத்தில் ‘தமிழக புரட்சிக் கழக’ அமைப்பாளர் அரங்க குணசேகரன் ஆற்றிய உரை: தோழர் பழனியை நான் 15 ஆண்டுகளாக அறிவேன். பெண்ணாகரத்திற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தோழர் பழனியோடு அரசியல் உறவுகளைக் கொண்டு தோழமையுடன் பழகியிருக்கிறேன். ‘வர்க்க எதிரிகளை ஒழித்து, தமிழ்நாடு விடுதலையை சாதிக்க வேண்டும்’ என்ற கொள்கைகளை ஏற்று வர்க்கப் போராளியாக வாழ்ந்த பழனி, வர்க்கப் போருக்கு தடையாக நிற்கும் சாதி, மதத்தை தகர்த்தெறிய போராடும் பெரியார் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவரை படுகொலை செய்ததன் மூலம், இந்த தளி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டில் தான் இருக்கிறதா? இந்தப் பகுதியின் ஆட்சி தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா? சி.பி.ஐ. தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆளுகையில் இருக்கிறதா என்பதை தமிழக முதல்வர் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். 1971 இல் 5000 ஏக்கர் நிலம்...

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படையிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டும் என்றும் மறைந்த பெரியாரிய லாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.  சென்ற இதழ் தொடர்ச்சி. கிராமம் ஊழியம் செய்யும் வகுப்பார்கள் யாரும் ஊரை விட்டு போகக் கூடாது. போனால் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு. சாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள், உடைகள், உரிமைகள் ஆகியவைகளைத் தான் கைக்கொள்ள வேண்டும் என (களப் பிரர் ஆட்சியில்) அரசாணை பிறப்பித்தனர். அந்த ஆணையும் சாத்திர வல்லுனரான பார்ப்பனர்களின் அபிப்பிராயப்படியே வழங்கப்பட்டது. உதாரணமாக அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்களை அவர்கள் பிரதிலே மாகளைக் காட்டிலும் உயர்ந்தவர் களான அனுலோமரைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே அவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் உபநயன மந்திரம்...

தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

“சாதி ஒழிய வேண்டும் என்பதும் – நாடு பிரிய வேண்டும் என்பதும்தான் நம் கழகத்தின் முக்கிய கொள்கை. மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதும் – வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதும், மற்றவைகளும், இதன் உட்பிரிவுதான்.” – ‘விடுதலை’ 21.8.1957 “திராவிடர் இயக்கத்துக்கு முக்கியக் கொள்கை இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக் காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து, எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கைகளை நடைமுறையில் செய்வதே ஆகும்.” – ‘விடுதலை’ 8.7.1947 கட்சி – இயக்கம் “கட்சி எனப்படுவது குறிப்பிட்ட, அதாவது சில உத்தியோகங்களை அல்லது பட்டங் களை மக்களுக்கு வாங்கித் தருவது; ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால், இயக்கம் என்பது அவ்வாறல்ல; மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது. இன்னுங் கூற வேண்டு...

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்பாடற்று முடங்குவதைவிட பிரிந்து போய் செயல்படுவதே சாலச் சிறந்தது புதிய பெயர் சூட்டி இயக்கப் பணிகளை முன்னெடுக்க… ஆக.12 இல் ஈரோட்டில் கூடுவோம், வாரீர்! பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை. அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம். நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம். பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் – எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்து நின்று செயல்படுவதே சாலச் சிறந்தது என்பதையும் கூறினோம். இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும் பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை...

டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டுக் குழுவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோளாக விடுத்துள்ள அறிக்கை: டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க. முன் முயற்சி எடுத்து நடத்தும் இந்த மாநாடு குறித்து – ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும், எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவு களுக்குக் காத்திருக்கிறார்கள். தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு நடத்தும் மாநாட்டில்தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல் அதிர்ச்சியாகிவிட்டது. தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும், குறைந்தது கீழ்க்கண்ட முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. ஈழத் தமிழர்கள் – ஒரு தனித் தேசிய இனம் அவர்களுக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை கோர...

தளி ராமச்சந்திரன் கும்பலிடம் பறிகொடுத்த நிலங்களை மீட்டெடுப்போம்

தளி ராமச்சந்திரன் கும்பலிடம் பறிகொடுத்த நிலங்களை மீட்டெடுப்போம்

தோழர் பழனி நினைவேந்தல் கூட்டத்தில் கொளத்தூர் மணி மக்களுக்கு அழைப்பு தளி ராமச்சந்திரன் மீது நாம் எடுக்கும் பழி தலைக்கு தலை எடுப்பது அல்ல; அந்த கும்பல் பறித்துள்ள நிலங்களை மக்களுக்கு மீட்டுத் தருவதுதான் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி இராயக் கோட்டையில் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றதை பார்த்த பின்பு, தளி பகுதியைச் சார்ந்த சிலர், “இதுவரை எம்.எல்.ஏ.வின் அக்கிரமங்களை யாரும் எதிர்த்து தைரியமாக பேசியதில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. இது போன்ற ஒரு கூட்டத்தை எங்கள் ஊரிலும் நடத்த வேண்டும் என்று கழகத் தோழர்களிடம் கேட்டுக் கொண்டனர்.” பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ‘தளி’யில் 5.8.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விவசாயக்...

பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்

பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை. இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங் களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து… தமிழ் மன்னர்கள் ஆகிய சோழர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல் ஆட்சி செய்து இருக்கின்றனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இதுதான். பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சத்தைத் தொட் டவன் இராசராச சோழன். அதைத் தெளிவாகச் சான்றுகளுடன் விளக்கும் பகுதி பார்ப்பனர் களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உறவு, பிரிக்க முடியாத உறவு இருந்து வந்தது. இது எல்லா நாடுகளிலும் காணப்பட்ட மதம் – அரசு / அரசர்கள் உறவைவிட நெருக்க மானது. பிறப்பின் அடிப்படையில் அமைந்தது. பார்ப்பனர்களின் நால் வகுப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தொழில்களை அமைக்கும் விதமாக அமைந்திருந்தது. ஒருவன் எந்த குலத்தில் பிறந்தானோ அந்தக்...

மாற்றம்,  நமக்குள் தேவை தோழர்களே!

மாற்றம், நமக்குள் தேவை தோழர்களே!

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படு வதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதே யொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும். அநேக காரியங்கள் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ் நிலைமைக்கும் ஆளாகி வருகின் றோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைதல் என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும். சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி, அடிமை சாதி என்பவர்கள் இருப்பதோடு ஆண், பெண் தன்மை களில் உயர்வும் தாழ்வும் இருந்து வருகின்றது. இவை தவிர ஏழை – பணக்காரன், முதலாளி – தொழிலாளி தன்மைகளும் இருந்து வருகின்றன. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டவை யாகவும், இவ்வளவுக்குக்...

இளைஞர்களே!

இளைஞர்களே!

வாலிபர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தற்சமயம் சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்காலிலும் சமயப்பித்து இருக்கிறது. சாதி மத வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுவது அத்தியாவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு, ஆசை எல்லோருக்கும் உண்டென்பது உண்மை. இவைகளினால் இந்தியாவிலுள்ள 33 கோடி ஜனங்களுள் 16.5 கோடி பெண்களும் அடிமையாய் இருந்து, சந்தைக்குப் போய் மாடு வாங்குவது போல் நடத்தப்படுவது ஒழிய வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை ஊன்றிப் பார்த்துப் பிறகு உலகத்தைப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வாலிபர்கள் கையிலிருக்கிறது. பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சுயமரியாதை உணர்ச்சியை உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். பெரியார், (திராவிடன் – 21.02.1929) பெரியார் முழக்கம் 09082012 இதழ்

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதையே பண்பாட்டின் அடிப்படையில் நாகாலாந்தில் எதிர்க்கிறார்கள். பழம் பெருமை பண்பாடு என்பதற்காக கண்மூடித்தனமாக ஏற்பது சமூகத்தையே சீரழித்து விடும் என்பதற்கு நாகாலாந்து கலவரமே உதாரணம். ஒரு வார காலம், கிளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து. பிப்ரவரி 1 அன்று நடைபெறுவதாக இருந்த, தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட, நகராட்சி மன்றத் தேர்தல்கள்தாம் கலவரத்துக்குக் காரணம். இவ்வமைப்புகளில் மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துத்தான் இத்தனை களேபரமும். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது. 2012இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் – இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம், மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டு களுக்குப் பின்,...

வெளி வந்துவிட்டது!

வெளி வந்துவிட்டது!

‘நிமிர்வோம்’ பிப்ரவரி இதழ் பெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் – பேராசிரியர் நன்னன் அவர்களுடன் நேர்காணல் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் சதி. – பூங்குழலி ‘டிரம்ப்பின்’ இந்துத்துவம். உலகையே கூறுபோடும் அக்கிரகாரங்கள். – சுப. உதயகுமார் நூற்றாண்டுகாணும் எம்.ஜி.ஆர் : நிறையும் குறையும் பஞ்சாங்கம் அறிவியலா? – புரட்சிகர விஞ்ஞானி மேக்நாத் சாகா தந்த பரிந்துரை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16022017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கம்

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “யார் தேச விரோதிகள்” கருத்தரங்கம் 5/2/2017 சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே உள்ள கழக தலைமை அலுவலகத்தில் மாலை 5.45 மணிக்கு துவங்கியது. தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாசு தலைமை தாங்கினார். தேன்ராஜ் வரவேற்புரையாற்றினார். விவேக் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர். கருத்துரை வழங்கிய தோழர்கள் :- பாரி சிவக்குமார் (அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), அன்பழகன் (‘தேசத்தின் குரல்’ பத்திரிகை), மணி (தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு), இராமசாமி (அகில இந்திய மாணவர் பெருமன்றம்), வீ. மாரியப்பன் (மாநில தலைவர், இந்திய மாணவர் சங்கம்), அப்துல், சிவா ஆகியோர் பேசினர் . சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் இராமு மணிவண்ணண் பேசியதை அடுத்து, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுமார் 1.30 மணி நேரம் உரையாற்றினர். அருண் நன்றியுரை கூற...

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழகத்தின் மாத இதழான ‘நிமிர்வோம்’ இரண்டாவது இதழ் (பிப்ரவரி) வெளி வந்து விட்டது. இதழுக்கான பதிவு – அஞ்சல் கட்டணச் சலுகைகளுக்காக செய்யப்பட வேண்டிய பணிகள் நடந்து வருகின்றன. அஞ்சல் கட்டண சலுகைக்கான அனுமதி கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகக்கூடும். இப்போது ஓர் இதழை அஞ்சல் வழியாக அனுப்பிட முத்திரைக் கட்டணமாக ரூ.8 செலுத்த வேண்டும்.  நடைமுறையில் இது இதழ் தயாரிப்புக்கான செலவுகளை சுமையாக்கி விடும். எனவே, கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று மக்களிடம் கொண்டு சேர்க்கும் தேவை இருக்கிறது. எனவே தோழர்கள், கூடுதல் எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று விற்பனை செய்ய தலைமைக் கழக முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி, ‘நிமிர்வோம்’ பெரியார் முழக்கம் 16022017 இதழ்

ஆத்தூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

06.01.2017 திங்கள்கிழமை மாலை 5.00 மணியளவில், ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்த தலித் சிறுமி ‘நந்தினி’யை இந்துமுன்னணி கழிசடைகளால் மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதைக் கண்டித்து, ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் ந.மகேந்திரன் தலைமையில் நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் இராமர், சபரிநாதன்,  ஆகியோர் கலந்து கொண்டு நந்தினி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்கி கண்டன உரையாற்றினர். பிடல் சேகுவேரா ராசிபுரம் பகுதியில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.  சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். இறுதியாக ஆத்தூர் தி.வி.க பொறுப்பாளர் கணபதி கூறினார். பெரியார் முழக்கம் 16022017 இதழ்

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) தேச விரோதிகள், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று கூக்குரல் போடுவோர், எத்தகைய ‘தேசபக்தர்கள்’? நாம் கேட்பது, “நீங்கள் கூறும் தேசபக்தியின் அளவுகோலை உங்களுக்கே பொருத்திப் பாருங்கள்” என்பது தான். சட்டங்களையோ, அரசு அமைப்பையோ விமர்சித்துப் பேசுவதே ‘தேசவிரோதம்’ என்றால், சங்பரிவாரங்களே! உங்களின் வரலாறு என்ன என்பதுதான் நமது கேள்வி! இந்திய அரசியல் சட்டம் குறித்து 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுகிறது. இவர்கள்தான், இப்போது அம்பேத்கரையும் தங்கள் ‘இந்துத்துவ’ அணியில் இழுத்துக் கொண்டு தலித் மக்களை ஏமாற்றலாம்...

காதல்

காதல்

கற்றுக் கொள் – பறவை, விலங்குகளிடம்… காதல் அருகைப் போல் முடிவற்றத் தாவரம். காதல் உயிர்களின் நியதி. அணுக்கமும்..இணக்கமும் புரிதலும்..உறுதியும் சமைந்த உணர்வு.   பறவைகளையும், விலங்கையும்போல் காதலைக் கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும் மனித இனம்.   ஏனெனில்,   பறவை தத்தம் குஞ்சுகள் இணை தேடுகையில் .. தலை அறுத்து .. தண்டவாள ஓரம் எறிவதில்லை.!   மிருகங்கள் தன் குட்டியின் காதலுக்கெதிராய்.. கும்பலாய் சென்று ஊர் எரிப்பதில்லை. படுகொலைகள் புரிந்து .. ஜாதீயத் திமிரோடு சவங்களை வீசிவிட்டு வருவதில்லை.!   ஜாதி மதங்களை ஒழிக்கும் உபாயங்களில், காதலின் பணி உன்னதமானது.   காதல் புரிவோரே!   பூக்களும் மினுமினுப்புத் தாள் சுற்றிய பரிசுப் பொருள்தாண்டி.. நேசத்தையும், பரிவையும் கொள்கையும், முற்போக்கையும் பகிருங்கள்.! ரத்தவெறி கொண்டு அலைகிற ஜாதி, மதவெறி சக்திகளை வெட்டிச் சாய்த்திடுங்கள். காதல் ஆயுதத்தால்! -பெ.கிருட்டிணமூர்த்தி, ஈரோடு பெரியார் முழக்கம் 16022017 இதழ்

துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும்  கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும் கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

மேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர். உடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர். ஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத்...

கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்

காதலர் நாளை முன்னிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கும், ஜாதி மறுப்புத் திருமணப் போராட்டக் களத்தில் பங்கு பெற்ற தோழர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா மேட்டூரில் எழுச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேட்டூர் அணை பாப்பம்மாள் திருமண மண்டபத் தில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 12.2.2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கலை நிகழ்வுகளுடன் நடந்தது. கலை கருத்தரங்கில் ஜாதி மறுப்பு – மத மறுப்பு இணையர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி விவாதித்தனர். மதிய  உணவைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு திரையிசைப் பாடல்களை டி.கே.ஆர். இசைக் குழுவினர் நிகழ்த்தினர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்களே பாடல்களைப் பாடியதும்,...

அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதம் ஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்

தமிழ்நாட்டில் இப்போது ஆளுநராக இருப்பவர் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்து கடும் விவாதங்கள் நடந்துள்ளன. முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து சில பகுதிகள்: கவர்னரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்றால் பிரதமர் நியமிக்கிறார் என்று பொருள். பிரதமர் நியமிக்கிறார் என்றால் மத்திய அரசை ஆளுகின்ற கட்சி அப்படி முடிவு எடுக்கிறது என்று பொருள். அரசியல் நிர்ணய சபை எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு வந்து விடவில்லை. பலவித முடிவுகளை அலசி ஆராய்ந்து, இறுதியில் இப்படி நியமனம் செய்யும் முடிவுக்கு வந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால், கவர்னர் பதவியை நியமனப் பதவி யாக்கியதன் உள்நோக்கம் நன்கு புலப்படும். அரசியல் நிர்ணய சபையின் துவக்கக் காலத்தில், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் மாநிலத்து வாக்காளர்கள் அனை வரும் பெரும்பான்மை வாக்குகளால் அந்த மாநிலத்து கவர்னரைத் தேர்ந் தெடுக்கலாம்...

ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

12.8.2012 அன்று ஈரோட்டில் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் சந்திப்பு நடக்கும் இடம்: செல்லாயி அம்மாள் திருமண மண்டபம், (ஈரோடு பேருந்து நிலையம் அருகில்) நேரம் : காலை 10 மணி   பாழ்பட்டு, சீர்க்கெட்டு ஆமைகளாய் ஊமைகளாய்க் கிடந்த தமிழினத்துக்கு ‘மானமும் அறிவும்’ பெற்றுத் தர சூளுரை மேற்கொண்டு, தன்மானத்தை இனமானத்துக்காக ஈகை செய்த அறிவு ஆசான் நமது தலைவர் பெரியார் பிறந்த ஈரோட்டில், நாம் சந்திக்கிறோம். சுயமரியாதை இயக்க வரலாற்றில் ஈரோட்டுக்கு தனிச் சிறப்புகள் உண்டு. 1917 ஆம் ஆண்டில் தனது 38 ஆம் அகவையில் பெரியார் நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஈரோட்டில்தான்! 1921 இல் காந்தியார் கட்டளையை ஏற்று 144 தடை உத்தரவை மீறி பெரியார் கள்ளுக்கடை மறியலை தலைமையேற்று நடத்தியதும் இதே ஈரோடுதான்! பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாளும் மறியலில் கைதானார்கள். மறியல் தீவிரமாகி, 10000 பேர் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் பதறிப்...

கழக வளர்ச்சி நிதி-தோழர்கள் பேரார்வம்

கழக வளர்ச்சி நிதி-தோழர்கள் பேரார்வம்

மாவட்ட கழகங்கள் சார்பில் கழக வளர்ச்சி நிதிகழகத் தலைவரிடம் தோழர்கள் அளித்தனர். வழங்கவிருக்கும் தொகையை அறிவித்து முதல் கட்டமாக நிதியும் வழங்கினர். அறிவித்த தொகையும் முதல்கட்டமாக வழங்கிய தொகையும் (அடைப்புக் குறியில்). சேலம் மேற்கு          –              ரூ.3,00,000 (5,00,000) ஈரோடு            –              ரூ.1,00,000 (5,00,000) சென்னை      –              ரூ.1,00,000 (3,00,000) புதுவை           –              ரூ.70,000 (1,00,000) சேலம் கிழக்கு          –              (ரூ.1,00,000) கோவை         –              (ரூ.25,000) இரா. வீரமணி (சேலம்)     –              ரூ.25,000 ஆசைத்தம்பி (கள்ளக்குறிச்சி)   –              ரூ.10,000 ஆசிரியர் செங்கோட்டையன்     –              ரூ.2000 (10,000) மதுரை வாசுகி          –              ரூ.1,000 (10,000) வடலூர் கலியமூர்த்தி      –              ரூ.1,000 (10,000) தமிழர் முன்னணி (கரூர்)               –              ரூ.1,000   பெரியார் முழக்கம் 16082012 இதழ்

‘விடியல்’ சிவா முடிவெய்தினார்

‘விடியல்’ சிவா முடிவெய்தினார்

விடியல் பதிப்பக உரிமையாளரும் ஏராளமான முற்போக்கு சிந்தனை கொண்ட நூல்களை வெளியிட்டு வந்தவருமான தோழர் விடியல் சிவா, 30.7.2012 அன்று கோவையில் முடிவெய்தினார். அவருக்கு வயது 57. பெரியார் இயக்கத்துக்கு மிகப் பெரும் பங்களிப்பான எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம், பெரியார் ஆகஸ்ட் 15 நூல்களையும் இவரே வெளியிட்டார். குடிஅரசு தொகுப்புப் பணியில் தீவிர ஆர்வமும் ஒத்துழைப்பும் வழங்கியவர் சிவா. ‘குடிஅரசு’ மெய்ப்புத் திருத்தப் பணிக்கு தனது விடியல் அலுவலகத்தையே தந்து உதவியதோடு, பணியில் ஈடுபட்ட கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் களுக்கு, தமது இல்லத்திலிருந்து உணவு தயாரித் தும் வழங்கினார். விடுதலை இராசேந்திரன் எழுதிய ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்; பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் நூல்களை யும் விடியல் சிவாதான் மறுபதிப்பாக வெளி யிட்டார். விடியல் சிவாவின் வெளியீடுகள் அவரது தொண்டின் பெருமையை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். தோழருக்கு, வீர வணக்கம்! பெரியார் முழக்கம் 16082012...

ஆகஸ்டு 17 முதல் மாவட்டக் கழகக் கூட்டங்கள்

ஆகஸ்டு 17 முதல் மாவட்டக் கழகக் கூட்டங்கள்

ஈரோடு கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டந் தோறும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளன. கழகத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்பர். மாநில கழகப் பொறுப்பாளர்கள் வாய்ப்புள்ள மாவட்டங் களில் பங்கேற்பார்கள். 17.08.12 வெள்ளி மாலை 5.00 நெல்லை (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி) 18.08.12 சனி காலை 10.00 திண்டுக்கல் (விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை) 18.08.12 சனி மாலை 5.00 திருச்சி, (திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி) 22.08.12 புதன் மாலை 5.00 தலைமை நிலையம், (வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர்) 23.08.12 வியாழன் மாலை 5.00 புதுச்சேரி 24.08.12 வெள்ளி மாலை 5.00 விழுப்புரம் 29.08.12 புதன் மாலை 5.00 திருப்பூர் 30.08.12 வியாழன் மாலை 5.00 ஈரோடு, கரூர் 04.09.12 செவ்வாய் மாலை 5.00 கோவை (கோவை மாநகரம், கோவை வடக்கு, கோவை தெற்கு) 05.09.12 புதன் காலை 10.00 மேட்டூர் (சேலம் மேற்கு) 05.09.12 புதன்...

திராவிடர் விடுதலைக் கழகம்: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகம்: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்

கழகத்தலைவர் கொளத்தூர்  மணி கலந்துரையாடலில் அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள் பெயர் விவரம்: தலைவர் : கொளத்தூர் தா.செ.மணி பொதுச்செயலாளர் : விடுதலை க. இராசேந்திரன் புதுச்சேரி மாநிலத் தலைவர்: லோகு.அய்யப்பன் மாநிலப் பொருளாளர் : ஈரோடு ப.இரத்தினசாமி மாநில பரப்புரைச் செயலாளர்: தூத்துக்குடி பால்.பிரபாகரன் மாநில அமைப்புச் செயலாளர்: தி.தாமரைக்கண்ணன் தலைமை நிலையச் செயலாளர்: தபசி குமரன் மாநில வெளியீட்டுச் செயலாளர் : சூலூர் நா. தமிழ்ச் செல்வி மாநில இணைய தளச் செயலாளர் : அன்பு. தனசேகரன் பெரியார் தொழிலாளர் கழக அமைப்பாளர்கள்: கோபி. இராம. இளங்கோவன், பெ.திருமூர்த்தி தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்கள்: கோவை இர. சிலம்பரசன், ஜெயங்கொண்டாம் சிவக்குமார், சென்னை ஜா. ஜெயந்தி தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்கள் : திருப்பூர் ஆசிரியர் வீ.சிவகாமி, புதுவை பேராசிரியர் சே. இராமக் கிருட்டிணன், ஈரோடு ஆசிரியர் ப. சிவக்குமார். சென்னை மண்டல அமைப்புச் செயலாளர்: அன்பு.தன சேகரன், (வடசென்னை,...

டிசம்பர் 24, 25-ஈரோட்டில் மாநில மாநாடு

டிசம்பர் 24, 25-ஈரோட்டில் மாநில மாநாடு

டிசம்பர் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் இரண்டு நாள் மாநில மாநாடு மற்றும் “மனுசாஸ்த்திர எரிப்பு போராட்ட விளக்க மாநாடு” நடத்துவது என ஈரோடு கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1929 இல் செங்கல்பட்டில் பெரியார் கூட்டிய சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் – புரட்சிகர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நாளான பிப்ரவரி 28 இல் தமிழ்நாடு முழுவதும் – சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்தும் – மனுசாஸ்திரத்தைத் தடைசெய்யக் கோரி – மனு சாஸ்திர எரிப்புப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தோழர்களுக்குக் கொள்கைப் பயிற்சி வகுப்புகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 16082012 இதழ்

நிகழ்ச்சிக்கு உழைத்த தோழர்கள்

நிகழ்ச்சிக்கு உழைத்த தோழர்கள்

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணி களை, ஈரோடு இரத்தினசாமி தலைமையில், மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியரோடு இணைந்து தோழர்கள் சிவக்குமார், சிவா, சுப்ரமணி, குமார், வெங்கட், மோகன், திரு முருகன், பூபதிராஜ், இரமேஷ், அழகன், சண்முக சுந்தரம், இரமேஷ் குமார், சண்முகப் பிரியன், செல்வராசு, செல்லப்பன், இளம் பிள்ளை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். பெரியார் முழக்கம் 16082012 இதழ்

கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

ஈரோட்டில் நடந்த கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்வுகளிலிருந்து ஒரு தொகுப்பு: விடியற்காலை 5 மணியிலிருந்தே தோழர்கள் வருகைத் தொடங்கவே ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபம் களை கட்டத் தொடங்கி விட்டது. காலை 9 மணி முதல் பேருந்திலும், சிற்றூர் களிலும் வரிசை வரிசையாக வரத் தொடங்கினர். கழகத் தோழர்கள், தோழியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். காலையில் தனிப் பேருந்துகளில் வந்த தோழர்கள், வழியில் பவானி கூடுதுறை ஆற்று நீரில் நீராடி வந்து சேர்ந்தனர். தன் முனைப்புகளை புறந்தள்ளி, தன்மானக் கிளர்ச்சிக்கு அணியமாகும், தோழர்களே! வாரீர்! வாரீர்! என்று ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேடையின் பின்புறத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தில், இணைய வரும் தோழர் களின் சந்திப்பு” என்ற பதாகை, அமைக்கப்பட் டிருந்தது. 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் – தோழர்களுடன் வாகனங்களில் சென்று பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார்...

இது ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே!

இது ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே!

கழகத்துக்கு பெயர் சூட்டியதைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழகத் தோழர்கள் முன் வைத்த விளக்க அறிக்கை. 2001 ஆம் ஆண்டு “பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தோடு நாம் பயணத்தைத் தொடங்கினோம். தோழர்களின் உழைப்பாலும், தொண்டினாலும் கட்டி எழுப்பிய நம் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்திற்கு வெளியே கொள்கை ஆதரவாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. வெற்று மேடைப் பேச்சுக் களன்றி, நாம் மேற்கொண்ட செயல்பாடுகளாலேயே நம் கழகத்தின்மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப் பட்டது என்பதே உண்மை. பெரியார் நமக்கு விட்டுச் சென்ற சமுதாய இழிவு ஒழிப்பு, ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் கழகத்துக்கு உள்ளேயே நாம் கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருந்ததை இங்கே திரண்டிருக்கும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமானா லும், திராவிடர் கழகமானாலும், அந்த இயக்கங்கள் கொள்கை சார்ந்தவைகளாகவும், கொள்கையை மக்களிடம் கொண்டு போவதற்கே என்ற பார்வை யுடனும் அதற்கேற்ற...

‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்ற பெயருடன் இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்திட கழகத் தோழர்கள் ஈரோட்டில் நடந்த சந்திப்பில் முடிவெடுத்தனர். பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை யினர் 51 பேர் ஈரோட்டுக்கு வந்த நிலையிலும் ‘நீக்கல் – விலக்கல்’ ஏதுமின்றி நாமாகவே தனி அமைப்பை உருவாக்கிடும் அறிவிப்பை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார். 12.08.2012 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், ‘இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்கள் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் முன்னிலை யிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாகச் சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள்...

‘தலித்’ தலைவர் ‘சுதந்திர’ கொடி ஏற்ற எதிர்ப்பு: கழகத்தினர் முறியடிப்பு

‘தலித்’ தலைவர் ‘சுதந்திர’ கொடி ஏற்ற எதிர்ப்பு: கழகத்தினர் முறியடிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்குற்பட்ட நெடுமானூரி லுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் வரும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போதும் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றி வைப்பார். ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அது தனி ஊராட்சி என்பதால் தாழ்த்தப்பட்டவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே சுதந்திர நாளன்று இந்து ஆதிக்கசாதியினர் ஒன்று கூடி தற்பொழுது தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பதால் தலைமை ஆசிரியரே கொடியேற்றட்டும் என்று கூறினர். இந்த செய்தியறிந்த நெடுமானூரைச் சார்ந்த கழகத் தோழர் இளையராஜா தலைமையில் ஒன்று திரண்டு சுதந்திரக் கொடியை தலைமை ஆசிரியர் ஏற்றுவதில் எங்களுக்கு கவலையில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் உயர்சாதி தலைவர் என்பதால் அவரே கொடியேற்றி வந்தார். ஆனால் இந்த முறை தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பதால் இந்த முறையை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

13.8.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில், சட்ட ஒழுங்கை சீர்படுத்தக் கோரியும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் சமூகநல ஆர்வலர் ராஜ்மோகன் படுகொலை, ஓசூரில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி படுகொலை, தேசிய மனித உரிமைகள் இயக்க மாநில செயலாளர் சங்கமித்ரனுக்கு வீச்சரிவாள் வெட்டு ஆகிய பிரச்சனைகளை சுட்டிக் காட்டி நடைபெற்ற இந்த கணடனப் பொதுக் கூட்டம், தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக, அதன் மாநில இணைச் செயலாளர் பா.ரவி தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் மூ.விஜய ரத்தினம், வழக்கறிஞர் சங்கமித்ரன் மற்றும் பல மனித உரிமை ஆர்வலர்கள் கணடன உரையாற்றினர். 15.8.2012 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு,...

சுயமரியாதை இஞ்சினைப் பலப்படுத்தி…

சுயமரியாதை இஞ்சினைப் பலப்படுத்தி…

சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினைப் பலப்படுத்தி, சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத் தோல் பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லு கின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையுமவிட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தக்கதுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம்.  ஒரு இயந்திரத்தைச் சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம்போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின்  போதுதான் அதன் உண்மை சக்தியும் பெருமையும வெளியாகும். பெரியார்...

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

வைசியர்கள் சூத்திரர்கள் சண்டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை என  இரு பெரும் பிரிவுகளாகப் மோதினர் தோழர் அருணன் எழுதிய ‘தமிழகத்தில் – சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு’ நூலி லிருந்து. புராதன பொதுவுடமைச் சமுதாயமானது தனது உள் பலவீனத்தால் சிதைந்தபோது உலகில் அடிமைச் சமுதாய அமைப்பு எழுந்தது. இந்தியாவிலும் எழுந்தது. இங்கே வர்ணாஸ்ரமம் என்கிற வடிவத்தில் அது எழுந்தது. மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிறப்பின் அடிப்படையில் நால் வருணங்களாகப் பிரிக்கிற அந்த அமைப்பில் சூத்திரர்களின் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலை யாகவே இருந்தது என்றால், இந்த நால் வருணத்திற்கு அப்பாற்பட்ட சண்டாளர்கள் என்பவர்களின் நிலையோ அடிமை நிலையேதான். கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி இப்படிக் கூறுகிறது – “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும்...

வடமொழியை வளர்த்த சோழர்கள்

வடமொழியை வளர்த்த சோழர்கள்

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை. இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங்களுடன் விளக்கு கிறது. நூலிலிருந்து… ஆகஸ்டு 9 இதழ் தொடர்ச்சி… கல்வியிலும் வடமொழிக்கே முழு உரிமை, தமிழுக்கு என்று ஒரு கல்விச் சாலை அமைத்ததாகக் கல்வெட்டுச் சான்று கிடையாது. ஆனால் முழுவதும் வடமொழி இலக்கணம், புராணங்கள், சிவ தருமம், சோம சித்தாந்தம், ராமானுச பாடியம், பிரபாகரின் மீமாம்சம், வியாகரணம் ஆகியவற்றை மட்டும் கற்பிக்க வடஆற்காடு கப்பலூர், செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆணியூர் (ஆனூர்) தென்னாற் காட்டில் இராசஇராச சதுர்வேதி மங்கலம் என்னும் எண்ணாயிரம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எழுதும் கை நோகும், நினைக்க மனம் நோகும். இந்தச் சோழர்கள் பார்ப்பனரை அடக்கி வைத்தவர்கள் என்று முனைவர்கள் சொல்லு கிறார்கள். என்ன கொடுமை இது! படித்தவன் சூது வாது செய்யக் கூடாது என்ற பாரதியின்...

‘மனு சாஸ்திர’ நூலுக்கு விளம்பரம்!

‘மனு சாஸ்திர’ நூலுக்கு விளம்பரம்!

பார்ப்பன பாசிச கருத்தாக்கமான மனுசாஸ்திரத்தை இப்போதும் புதிய புதிய பதிப்புகளாக அச்சிட்டு பார்ப்பனர்கள் பரப்பி வருகிறார்கள். ‘சூத்திர’ இழிவுகளை நிலைநிறுத்தும் இந்த மனுசாஸ்திரத்தை பெருமைப்படுத்தி, ‘துக்ளக்’ ஏடு மதிப்புரைகள் எழுதி வருவதை ஏற்கனவே வெளியிட்டோம். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு ஏடான ‘உங்கள் நூலகம்’ மாத இதழில் (ஆகஸ்ட்) மனுதர்ம நூலுக்கு வெளி வந்துள்ள விளம்பரம்: மனுதர்மத்தை பெருமைப்படுத்தி பார்ப்பனர்கள் எழுதுவதும், அதற்கு விளம்பரம் தந்து புதிய பதிப்புகளை வெளியிடுவதும் வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது. நாட்டின் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களை பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்; அடிமைகள்; விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்று அச்சிட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழன் “சொரணையற்று” குறட்டைவிட்டுத் தூங்குகிறான்!   பெரியார் முழக்கம் 23082012 இதழ்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கப் பொதுக் கூட்டம் 25.3.2012 மாலை 6.45 மணிக்குப் புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலையருகில்) நடைபெற்றது. பெருந்திரளாகப் பொது மக்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்திற்கு  புதுச்சேரி கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சமர்பா குமரனின் இன எழுச்சிப் பாடல்களுடன் கூட்டம் துவங்கியது. துணைத் தலைவர் வீராசாமி நன்றியுரை வழங்கினார். கூட்டம் இரவு பதினொரு மணி வரை நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில் – “உலக நாடுகளெல்லாம் இந்தியாவை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் நடத்தி வந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது வெடி பொருளாகப் பயன்படுத்தி மிஞ்சிப் போன, மண்ணைக் கெடுக்கின்ற வேதிப் பொருள்களையெல்லாம் உரமாக மாற்றி எம்.எஸ்.சாமிநாதன் என்கின்ற பார்ப்பனனை வைத்து இந்தியாவில் பிரபலப்படுத்தினர். ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாகக் கொண்ட கப்பலைப் பிரான்சு நாட்டில் உடைத்தால்...

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ அமைப்புக் கூட்டங்கள் எழுச்சி நடை

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ அமைப்புக் கூட்டங்கள் எழுச்சி நடை

‘திராவிடர் விடுதலைக் கழக’ம் தொடங்கியவுடன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டலம் வாரியாக கழக அமைப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் உற்சாகத்துடன் கூட்டங்களில் பங்கேற்று வரு கின்றனர். ஆக. 12 ஆம் தேதி அமைப்பு தொடங்கியவுடன், ஆக. 17 ஆம் தேதி நெல்லையிலும், ஆகஸ்ட் 18 இல் காலை திண்டுக்கல்லி லும்  மாலை திருச்சியிலும் மண்டல அமைப்புக் கூட்டங்கள் நடந்தன. மாவட்டக் கழகம், ஒன்றிய கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். 17.8.2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, பாளையங் கோட்டை ஆதி திராவிடர் மகாசன சங்க கட்டிடத்தில், திராவிடர் விடுதலைக் கழக நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. மாநில பரப்புரை செய லாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நெல்லை மண்டல அமைப்புச் செய லாளர் குமார் வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர்...

‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே! ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்?

‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே! ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்?  விடுதலை இராசேந்திரன் கேள்வி (நிகழ்ச்சி காணொளி இங்கே சொடுக்கவும்) தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்: மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய வரலாறு காணாத எழுச்சிப் போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டதாக பா.ஜ.க.வினரும், காவல் துறையும் கூறுகிறார்கள். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும், சட்டமன்றத்தில் இதே கருத்தை மத்திய உளவுத் துறை தயாரித்துத் தந்திருந்த அறிக்கையை படித்தார். ‘தேச விரோதிகள்’ குறித்து நாம் பேசுவதற்கு முன்பு ‘தேச பக்தர்கள்’ குறித்து விவாதிக்க வேண்டும். உண்மையில் தேசபக்தி என்பதற்கான விளக்கம்தான் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுபட் டிருந்தபோது, தேசபக்தியின்  அர்த்தம் வேறு; பாகிஸ்தான்...

கொளப்பலூரில்  தமிழர் திருவிழா

கொளப்பலூரில் தமிழர் திருவிழா

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழகத் தலைவர்  சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அவரின் தலைமை உரையின் போது, சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்குழு சார்பாக மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘ஒன்னுமில்லை’ எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள். கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் உரை நிகழ்த்தினார். அவர் உரையாற்றும் போது, உயிரின் தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார். தொடர்ந்து இரவு 10.30 மணி வரை கலை...

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்த ‘மதவெறி’ ‘வகுப்புவாத’ செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது. அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர்  டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை...

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், பா.ஜ.க. தமிழக அரசை மிரட்டிப் பணிய வைக்க திட்டமிடுகிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். ‘ஒன் இந்தியா’ இணையதள இதழுக்கு கொளத்தூர் மணி அளித்த பேட்டி: கேள்வி : ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண் இது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? கொளத்தூர் மணி பதில் :  மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றுவதற்கான முன்முயற்சிகளில் உதவுவது என்பதின் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களது போராட்டமாக காண்பிக்க முயற்சி மேற்கொண்டதன் அடையாளமாகத்தான் விவேகானந்தர் இல்லம் அருகில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால்தான் விவேகானந்தர் படத்தை வைத்துக் கொண்டு போராட்டம் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு என்ன வேலை என்று...

இனி ‘ஆசீர்வாதம்’ அஞ்சல் வழியாக…

இனி ‘ஆசீர்வாதம்’ அஞ்சல் வழியாக…

திருமணமான புதுத் தம்பதிகள் – இனிமேல், ஆசீர்வாதம் வாங்குவதற்கு திருப்பதிக்கு நேரடியாக வர வேண்டாம்; திருமணப் பத்திரிகையை தபாலில் அனுப்பினாலே போதும்; அதில் மஞ்சள், குங்குமம் வைத்து, வேதம் ஓதி, பகவான் ஆசிர்வாதத்தையும் தபால் உறைக் குள்ளேயே போட்டு அஞ்சலில் அனுப்பி வைப்பார்களாம். திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. கடவுள்கள் எல்லாம் காலத்துக் கேற்பவே மாறி விட்டார்கள். அஞ்சல கங்கள், ஸ்வைப் எந்திரங்கள், ‘சிசி டிவி’ காமிராக்கள் என்று நவீன வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள். “ஆசீர்வாதத்தைத் தபாலில் அனுப்பு வதற்கு பதிலாக ஆண்டவனே நேரடியாக புறப்பட்டு வந்து பக்தர்களை சந்திக்க லாமே” என்று ஒருவர் கேட்டார்; நியாயமான கேள்விதான். உண்மையிலேயே கடவுளின் உணர்ச்சி களை பக்தர்களோ, அர்ச்சகர்களோ மதிப்பதாகத் தெரியவில்லை. “பகவானே இப்படி ஒரே இடத்தில் அசையாமல் இருப்பதை தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டால், கடவுள் என்ன கூறுவார்? “போதுமடா சாமி; இனியும், இந்த கர்ப்பகிரக இருட்டறையில் முடங்கிக் கிடக்கத் தயாராக இல்லை....

நான் ஒரு ‘தேசத் துரோகி’

நான் ஒரு ‘தேசத் துரோகி’

நான் ஒரு தேசாபிமானியல்லன். அது மாத்திரமல்ல; தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்று சொல்லியும், எழுதியும் வரும் தேசத் துரோகியாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபி மானியாய் இருந்து, பல முறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லு கிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை. இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும், பழிப்புக்கும்கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ‘நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது’ என்பதுதான் தேசாபிமானிகளின், மகாத்மாக் களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதைவிட இப்போது இருக்கும் பரராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து. இன்றைய பரராஜ்யத்தில் தோட்டி சுமக்கும் வேலையை விட்டு மந்திரி வேலை செய்தாலும் செய்யக் கூடும். ஆனால், அவனவன் சாதித்...

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

20.1.2017 காலை 10 மணிக்கு மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டத்தைச் சேர்ந்த கழக ஆதரவாளர் தங்கவேலு-பங்கஜவள்ளி ஆகியோரின் மகன் த.அருண் பிரச்சன்னாவுக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சாலியந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-உஷாராணி ஆகியோரது மகள் ஆ.சுபமங்களத் துக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார். திருமண விழாவில் கழகத் தோழர்களும், மணமக்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.3000/- கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 09022017 இதழ்

பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதி கேட்டு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 30.1.2017 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மு. முத்துப்பாண்டி (மாவட்ட பொருளாளர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மா. வைரவேல் (மாவட்ட அமைப்பாளர்), மு. சரவணன் (மாவட்ட செயலாளர்), இரா. ஃபிடல் சேகுவேரா (இராசிபுரம் நகர அமைப்பாளர்) கண்டன உரையாற்றினர்.   பெரியார் முழக்கம் 09022017 இதழ்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

தமிழகத்தின் பல ஊர்களில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அரியலூர் : கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில்  சிறுகடம்பூரில் 04-01-2017 அன்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பின்புறம் காலை 10.00மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தை விழுப்புரம் அய்யனார், கழகத் தலைமை செயற் குழு உறுப்பினர் தொகுத்து வழங்கினார் . முன்னதாக புதுச்சேரி சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, நாமக்கல் மாவட்ட திவிக செயலாளர் வைரவேல், புதுச்சேரி திவிக அமைப்பாளர் இளையரசன், சமூக ஆர்வலர் தமிழரசன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், மக்கள் கண்காணிப்பகம் இராமு, பெரம்பலூர் மாவட்ட திவிக. செயலாளர் துரை.தாமோதரன்  ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். பெரியார் திராவிடர் கழகம் – சுயமரியாதை சமதர்ம...