குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசை கண்டித்து…..

25.11.2017 அன்று காலை 11 மணிக்கு பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த பொறுப்பாளர்கள், தென் சென்னை மாவட்டச் செய லாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் செந்தில் (எப்.டி.எல்.), தலைவர் ஏசுகுமார், மயிலை தோழர்கள் மாரி, சுகுமார், இராவணன், சிவா, குமரேசன்,

ஜா. உமாபதி, மாணிக்கம், யுவராஜ், இலட்சுமணன், தேன்ராஜ் உள்ளிட்ட கழகத்தினர், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம் ராஜா, அம்பேத்கர் மக்கள் படை மதிபறையனார், இளந்தமிழகம் செந்தில், பச்சைத் தமிழகம்  மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர்.

தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தோழர்கள் அனைவரும் பசுமை வழிச் சாலை அருகே கைது செய்யப்பட்டு ஆழ்வார் பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் முழக்கம் 30112017 இதழ்

You may also like...