பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்தில் கழகத் தலைவர்

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலைப் போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப் பட்டவருமான பள்ளிகொண்டா  கிருஷ்ணசாமி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.

அடுத்து அவரால் நிறுவப் பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வு களுக்கான இலவச பயிற்சிப் பள்ளியாய் அவரது பெயரன் மகேஷ்  தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டி னார்.

பெரியார் முழக்கம் 07122017 இதழ்

You may also like...