மேட்டூர் தோழர் சுகுமார் முடிவெய்தினார்

மேட்டூர் ஆர்.எஸ். பகுதியைச் சார்ந்த கழகத் தோழர் சுகுமார், 13.11.2017 மாலை முடிவெய்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல்நலமின்றி இருந்தார்.

தனது இறுதி நிகழ்வை சடங்குகள் இல்லாமல் நடத்த வேண்டும் என்றும் இயக்கத்தின் சீருடையான நீல நிற ஜீன்ஸ், கருப்புச் சட்டை அணிவிக்க வேண்டும் என்றும், தோழர்களே தனது இறுதி நிகழ்வை நடத்த வேண்டும் என்றும் குடும்பத் தினரிடம் தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்து இருக்கிறார். அதன்படியே அக்குடும்பத்தினரும் அவரது இறுதி நிகழ்வை நடத்தினர்.ஒரு பெரியார் தொண்டன் கம்பீரமாய் விடைபெற்றார். இயக்கமே குடும்பமாய் நின்று வீர வணக்கம் செலுத்தியது.

கழக மகளிர் அவரது உடலை இடுகாடு வரை சுமந்து வந்தனர். கழகத் தலைவர் உள்ளிட்ட ஏராள மான தோழர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 23112017 இதழ்

You may also like...