பெண்களே களப்பணியாற்றிய மாநாடு
ஈரோடு பெண்கள் சுய மரி யாதை மாநாட் டின் தனிச் சிறப்பு, மாநாட்டுப் பணி களை முழுமை யாக பெண்களே மேற் கொண்டது தான். பல்வேறு ஊர்களுக்குச் சென்று கழகத் தோழர்களை சந்தித்து, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது; நன்கொடை திரட்டியது; விளம்பரப்பணி என அனைத்து பணிகளையும் பெண்களே முன்னின்று நடத்தியது இம்மாநாட் டின் தனிச் சிறப்பாகும். மாநாட்டில் உரையாற்றிய பலரும் இதை சுட்டிக் காட்டிப் பாராட்டினர்.
மாநாட்டுப் பணிக்காக உழைத்த தோழர்கள்: மணிமேகலை (ரங்கம்பாளையம்), முத்துலட்சுமி (திருப்பூர்), சுமதி (இராசிபுரம்), சபீனா (பள்ளிப் பாளையம்), மீனாட்சி (பள்ளிப்பாளையம்), கவிப்பிரியா (சென்னிமலை), ஜோதி மணி (சென்னி மலை), சங்கீதா (சென்னை), ராஜி (சென்னை), தேன்மொழி (திருப்பூர்), சரசுவதி (திருப்பூர்), மணிமொழி (கோபி), இனியா (மேட்டூர்), இரண்யா (சென்னை).