கழகத் தோழர் ப.சுகுமார் நினைவுக் கல்வெட்டு திறப்பு
முடிவெய்திய மேட்டூர் கழகத் தோழர் ப. சுகுமார் நினைவு கல்வெட்டு படத் திறப்பு நிகழ்வு, நவம்பர் 27 பகல் 11 மணியளவில் மேட் டூர் என்.எஸ்.கே. நகரில் நடந்தது. கல்வெட்டினை கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் படத்தை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் திறந்து வைத்தனர்.
அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் துரைசாமி, ஆசிரியர் சிவகாமி, மேட்டூர் முத்துக் குமார், மேட்டூர் சக்தி, கோவிந்தராஜ், ஸ்டாலின் (அ.இ.அ.தி.மு.க.), சோம சுநதரம் (தி.க.), மேட்டூர் இராமச் சந்திரன் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரையாற்றினர்.
கோயில் பூசாரியாக இருந்து கழக நூல்களைப் படித்து தோழர்களிடம் விவாதித்து, தன்னை உறுதியான பெரியாரியல்வாதியாக மாற்றிக் கொண்ட சுகுமார், கடந்த சில வருடங் களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கழக நிகழ்வுகளில் தவறாது பங்கேற்று வந்தார்.
தனது இறுதி நிகழ்வுகள் கழகச் சீருடையான நீல ஜீன்ஸ், கருப்பு சட்டை அணிந்து மூடநம்பிக்கை யின்றி, கழகத் தோழர்களால் நடத்தப்பட வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருந்தார். பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு தந்தனர். பெண்களே கண்ணீருடன் கழகத் தோழரின் உடலை இடுகாடு வரை சுமந்து சென்றனர்.
பெரியார் முழக்கம் 07122017 இதழ்